செல்போன் பேட்டரியை பற்றி நாம் நம்பி வரும் பொய்கள் Mobile Phone Battery 

இப்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மிகமிக முக்கியமானதாக மாறி விட்டது. வீடு இல்லாதவர்கள் கூட இருப்பார்கள். ஆனால் செல்போன் இல்லாதவர்கள் இருக்க முடியாது. அதன் மூலம் மொத்த உலகமும் நம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. சிறிய குழந்தை முதல் வயசானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். 1000 ரூபாய் செல்போன் என்றாலும் 10000 ரூபாய் செல்போன் என்றாலும் எல்லாருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை வரும். செல்போனுக்கு முக்கியமானது Battery. அது இல்லாமல் எந்த செல்போனும் இயங்காது. அதில் உள்ள பிரச்சனை Charging. போக போக எல்லார் போனிலும் இந்த பிரச்சனை வரும். ஆரம்பத்தில் Charge இருக்கும் நேரம் காலங்கள் போன பிறகு அப்படி இருப்பதில்லை. அதற்கு காரணம் அதை நாம் முறையாக பயன்படுத்தாததே. ஆனால் பலர் அதற்கு பலவிதமான காரணங்களை கூறுவர். அது எல்லாம் உண்மையல்ல. Phone Charger பற்றி இன்றளவும் நாம் உண்மையென நம்பி வரும் பொய்கள் ஏராளம். அதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

OverNight Charge

இரவு எல்லாம் Charge செய்தால் செல்போன் Battery வெடித்து விடும் என்ற கருத்து பொதுவாக அனைவருக்கும் உண்டு. இதை அனைவரும் நம்பும் ஒரு கருத்து. ஆனால் இது உண்மையல்ல. ஏனென்றால் எல்லா செல்போன் கம்பெனிகளும் செல்போன் முதல் பேட்டரி வரை அனைத்தையும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தி தான் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இப்போது உள்ள காலகட்டத்தில் அப்படி நடக்க வாய்ப்பு மிகமிக குறைவு. அதோடு இரவு முழுக்க Charge போட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அப்படி போட வேண்டிய நிலை வந்தாலும் பயப்பட வேண்டாம். உங்கள் செல்போன் வெடிக்காது.

Don't Use Other Charge

நம் செல்போன் வாங்கிய போது வாங்கிய Charger ஐ தவிர மற்ற Charger ஐ பயன்படுத்த கூடாது அப்படி பயன் படுத்தினால் பேட்டரி வெடித்து விடும் என்று கூறுவர். அதுவும் உண்மையல்ல பொய். நம் Phone வாங்கும் போது தருக்கூடிய Charger நல்ல தரமானது. அதை வைத்து தான் Charge போட வேண்டும். ஒரு வேளை அதில் பிரச்சனை என்றால் அது போல தரமான Charger ஐ பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் சந்தையில் விற்கபடும் தரமற்ற Charger களை பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது. நல்ல விலை கொடுத்து தரமான Charger களை வாங்கி பயன்படுத்துங்கள். இல்லை என்றால் உங்கள் செல்போன் ஆயுள் காலம் குறைவாகவே இருக்கும். 

Battery Level 

இந்த தவறை நாம் அனைவரும் பொதுவாக செய்வோம். என்னவென்றால் செல்போனை எப்போது Charge போட வேண்டும் என்பது தான். சிலர் 60% இருக்கும் போது Charge போடுவார்கள். சிலர் 0% வந்த பிறகுதான் போடுவார்கள். கேட்டால் அப்போது Charge நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். இது இரண்டுமே தவறு. சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உங்கள் செல்போன் ஆயுள் காலம் அதிக நாட்கள் வரவேண்டும் என்றால் 20% வரும் போது Charge போடுங்கள். 80% முதல் 85% வரும் போது எடுத்து விடுங்கள். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் செல்போன் ஆயுள் அதிக நாட்கள் இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

Using Over Watt Charger

அதிக அளவு மின்சாரத்தை வழங்க கூடிய ( High Watt ) Charger ஐ பயன்படுத்தினால் செல்போனுக்கு ஆபத்து என்று கூறுகின்றனர். ஆனால் இதுவும் உண்மை அல்ல. செல்போன் எடுக்கும் மின்சாரத்தின் அளவு என்பது Charger ஐ பொறுத்தது அல்ல. அது செல்போன் பேட்டரியை பொறுத்தது. நீங்கள் எவ்வளவு அதிக Watt Charger ஐ பயன்படுத்தி Charge போட்டாலும் அதற்கு தகுந்தாற்போல உள்ள மின்சார அளவை மட்டுமே எடுக்கும். ஆகையால் எந்தவித பயமும் இன்றி சார்ஜ் செய்யலாம்.

Battery Saving Apps

இந்த மாதிரி நிறைய செயலிகள் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது இந்த App களை Install செய்தால் நம் Battery அதிகம் இருக்கும் என்பது மூட நம்பிக்கை. இதனால் நமக்கு எந்த வித பயனும் இல்லை. ஆகையால் உங்கள் செல்போனில் இப்படி எதாவது இருந்தால் உடனடியாக Delete செய்து விடுங்கள். மாறாக நீங்களே உங்களுக்கு தேவை இல்லாத App களை நீக்கிவிட்டால் மிகவும் நல்லது. அதுவே போதுமானது.

While Charging Don't Touch Your Smart Phone 

போனில் Charge செய்து விட்டால் அதை தொடவே கூடாது. அப்படி தொட்டால் வெடித்து விடும் என ஊருக்குள் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். உண்மை அதுவல்ல. போனில் சார்ஜ் போட்ட பின்பு நமக்கு தேவை ஏற்படும் போது தயங்காமல் உபயோக படுத்தலாம். ஆனால் அதிக நேரம் உபயோகபடுத்த வேண்டாம். செய்திகளில் கூட இப்படி செய்து நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன் உயிரிழப்பு கூட ஏற்பட்டுள்ளது. சில பேர் சார்ஜ் போட்டு கொண்டு செல்போனில் Game விளையாடுவர். அதற்காகவே சில செல்போன்கள் இருக்கின்றன. அவை Game விளையாடுவதற்காகவே தயாரிக்கபட்டவை. அவையால் எந்த விபத்தும் ஏற்படாது. ஆனால் நாம் சாதாரனமாக பயன்படுத்தும் செல்போன்கள் அப்படி கிடையாது. அதனால் கவனமுடன் கையாள வேண்டும்.

பேட்டரி குறையாமல் இருக்க வழிகள்

தேவையான நேரத்தில் மட்டும் Brightness ஐ அதிகமாக வையுங்கள்.

தேவையில்லாத ஆஃப்களை நீக்கி விடுங்கள்

20% Battery இருக்கும் போது மட்டும் Charge போடுங்கள்

85% வந்ததும் மின் இணைப்பை நீக்கி விடுங்கள்

Background ல் Run ஆக கூடிய ஆஃப்களை அவ்வப்போது Off செய்யுங்கள்.

Battery சம்பந்தமான ஆஃப்களை நீக்குங்கள்.

Wallpaper ல் அதிக வண்ணமுடைய புகைபடங்களை வைக்காதீர்கள்


Post a Comment

Previous Post Next Post