நெல்சன் மண்டேலா 


Historical references to Nelson Mandela who fought for the people of South Africaஇன்று நாம் ஒரு முக்கியமான போராட்ட தலைவரை பற்றி பார்க்க போகிறோம். அவர்தான் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). அவர் கருப்பு இனத்தவர்களுக்காக போராடி அவர்களுக்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவர் தன்னுடைய கொள்கைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் உள்ள Transkei என்ற பகுதியில் பிறந்துள்ளார்


மேலும் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. பிறந்தது முதல் அவரது வாழ்க்கை கரடுமுரடாகத்தான் இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் வெள்ளையினத்தவர்கள் உயர்ந்தவர்களாகவும், கருப்பினத்தவர்கள், தாழ்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். அதனால் கருப்பினத்தவர்களை அவர்களது சொந்த மண்ணிலேயே வெள்ளையினத்தவர்கள் அடிமைபடுத்தி வந்தனர். இதை எல்லாம் பார்த்து வளர்ந்தவர் தான் Nelson Mandela. 


இந்த நடைமுறை அவரது வாழ்வில் தீராத ரணமாய் இருந்துள்ளது. அதோடு தன்னுடைய சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப் படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து வேதனை அடைந்த Nelson Mandela வெள்ளை யினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்து உள்ளது. மேலும் அதற்காக சிறுவயது முதல் போராடியும் வந்துள்ளார். தன்னுடைய பள்ளி படிப்பு முதலே அதற்கான போராட்டங்களில் ஈடுபட்டார். 

Historical references to Nelson Mandela who fought for the people of South Africa


Nelson Mandela, Fort Hare-பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அப்போது மாணவர்கள் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த போராட்டத்திற்கு Nelson Mandela தலைமை தாங்கினார். அந்த குற்றத்திற்காக கல்வி நிறுவனம் அவரை வெளியேற்றியுள்ளது. அதன் பிறகு முயற்சியை கைவிடாத Nelson Mandela, Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தன்னுடைய கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார் Nelson Mandela.


கருப்பினத்தவர்கள் மட்டுமே இருந்த தென்னாப்பிரிக்க வெள்ளையினத்தவரிடம் எப்படி சிக்கியது? கிட்டதட்ட பதினேழாம் நூற்றாண்டில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு ஆங்கிலேயர்கள் குடியேறினர். அவர்களை பெருமையோடு கருப்பினத்தவர்கள் வரவேற்றனர். அதன் பின் அதிகமான வெளிநாட்டினர் குடியேறினர். அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த திட்டம் போட்டு உள்ளனர். 


அதன் படி தங்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், என கட்டி கொண்டனர். அதற்குள் கருப்பினத்தவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களை தங்கள் வீட்டிற்கு அருகில் கூட வெளிநாட்டினர் விட வில்லை. இந்த நிலையில் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். இந்த நேரத்தில் Nelson Mandela கல்லூரி படித்து வந்துள்ளார். 

Historical references to Nelson Mandela who fought for the people of South Africaதானும் போராட்டத்தில் பங்களிக்க வேண்டும் என நினைத்த அவர் காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். இந்த நிலையில் 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் கருப்பினத்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அப்போது கருப்பினத்தவரின் மீது போலீசார் தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்த தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். அதோடு இருபதாயிரம் பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


இனி அகிம்சையை விட்டுவிட்டு ஆயுதம் ஏந்தினால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்தார் Nelson Mandela.
அதனால் 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. 1964 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு. அதனால் 27 வருடம் சிறை தண்டனை பெற்றார் Nelson Mandela. இந்த நிலையில் மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை வற்புறுத்தின. 


ஆனால் தென்னாப்பிரிக்க அரசு அதை ஏற்க மறுத்து. இதனால் தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன. உலகமே உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறவே பயந்து போன அவர்கள் 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தனர். 
அவரது விடுதலை ஆன பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதன் பிறகு
1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேட்பாளராக Nelson Mandela தேர்வு செய்யபட்டு வெற்றிப்பெற்றார். தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post