இந்தியாவா? அமெரிக்காவா? 


History of Christopher Columbus Discovering America

500 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர் தான் Christopher Columbus. புதிய கண்டங்களையும், நாடுகளையும் கண்டுபிடிப்பது எளிதல்ல. அதை திறமையாக கண்டு பிடித்தார் Christopher Columbus. அவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று வரலாறு கூறுகிறது.


Christopher Columbus 1451-ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஜெனோவா( Republic of Genoa) நகரில் பிறந்துள்ளார். அவர் சிறு வயது முதல் தன் லட்சியம் ஒன்றையே கனவாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அந்த கனவு கடல்களை கடந்து புதிய தேசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். Christopher Columbus தன்னுடைய பதினான்காவது வயதில் கப்பலுக்கு மாலுமியானார்.. அந்த காலகட்டத்தில் கடல் வழி என்பதே கிடையாது. அங்கு வாணிபம் தரை வழியாகத்தான் நடைபெற்று வந்தது. 


அப்போது ஆசியா கண்டத்தின் வர்த்தக மையமாக மலேசியா இருந்ததுள்ளது. இந்தியா, சீனா, இந்தோனோசியா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு மொத்தமாக கூடி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பண்டமாற்றம் செய்து அதற்கு ஈடான பொருள்களையும், விலை உயர்ந்த நவரத்தின கற்களையும் வாங்கி சென்றனர். 

History of Christopher Columbus Discovering America


அப்படி வாங்கிய பொருட்களை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றி தரைவழியாகவே சீனா, ஐரோப்பாவை கடந்து இத்தாலியின் வெனிஸ் நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த பொருட்களை தங்கம் கொடுத்து வாங்கி சென்றனர் ஐரோப்பியர்கள். அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அதிக தேவை ஏற்பட்டது. ஏனென்றால் குளிர் காலங்களில் மாமிசங்களை பதப்படுத்தி வைப்பதற்கு அவை பெரிதும் உதவி செய்தன. 


அந்த நறுமணப் பொருள்கள் மிகவும் அவசியம் என்பதும், அந்த பொருட்கள் இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் ஐரோப்பியர்களுக்கு தெரிந்தது.
ஆனால் அவர்களுக்கு இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாமல் இருந்துள்ளது. ஏனென்றால் அக்காலத்தில் Map போன்று எதும் கிடையாது. தமக்கு தேவையான பொருட்களை இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு வாங்குவது அவர்களுக்கு சிரமமாக இருந்துள்ளது. 


அதனால் அவர்கள் இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்தால் அந்தப் பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து உள்ளனர். அப்படி நினைத்தவர்களில் ஒருவர்தான் கொலம்பஸ். இந்த நிலையில் 1476-ஆம் ஆண்டு கொலம்பஸ் கடல் வழியாக ஐஸ்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் சென்றார். ஆனால் ஆசியாவுக்கு கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது தனியாத ஆர்வமாக இருந்து உள்ளது.


அவருடைய அந்த முயற்சிக்கு உதவி செய்யுமாறு Christopher Columbus இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் அரசாங்கத்தின் உதவியை நாடினார். ஆனால் அந்த இரு அரசாங்களும் உதவி செய்ய மறுத்துள்ளது. இறுதியில் அவருக்கு ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா உதவி செய்தார். ராணி இசபெல்லா கொலம்பஸுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். அதோடு Christopher Columbus கண்டுபிடிக்கும் அனைத்து புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதி கூறினார் ராணி இசபெல்லா.


History of Christopher Columbus Discovering America

இந்த நிலையில் 1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் நாள் சாண்டா மரியா, நின்யா, பின்டா ஆகிய மூன்று கப்பல்களில் நூறு ஊழியர்கள்
கடல் வழியை கண்டு பிடிப்பதற்காக புறப்பட்டார் கொலம்பஸ். அவர் புறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்கள் நிலப்பரப்பையே காணாமல் கடலில் மட்டுமே அலைந்துள்ளார் கொலம்பஸ். அதன் பிறகு அக்டோபர் 12-ஆம் நாள் நிலம் அவரின் கண்ணில் பட்டது. அதை இந்தியா என நினைத்த Christopher Columbus அங்கு தரை இறங்கினார். 


ஆனால் அது இந்தியா அல்ல. வடஅமெரிக்காவின் 'பகாமஸ் தீவு' தான். அதன்பிறகு அவர் மேலும் சில கடல் பயணம் மேற்கொண்டு கெனேரித் தீவுகள் பனாமா போன்ற நாடுகளையும், பல சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியா என நினைத்து அமெரிக்காவில் இறங்கியதால் ஐரோப்பாவுக்கும்,வடஅமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி போக்கு வரத்திற்கு வழி பிறந்தது. ஆனால் அவர் கடைசி வரை தான் வந்தடைந்தது இந்தியா அல்ல என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. 

History of Christopher Columbus Discovering America


இப்படி பல தேசங்களைக் கண்டுபிடித்த பெருமையிலும் களைப்பிலும் ஸ்பெயின் திரும்பினார் கொலம்பஸ். அதன் பிறகு 1506-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் தனது 55-ஆவது வயதில் Christopher Columbus காலமானார். தனது கடைசி மூச்சுவரை இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். அவர் மேற்கொண்ட கடல் வழி பயணத்தால் கியூபா, பகாமஸ், மேற்க்கிந்திய தீவுகள், சிலி, பிலிப்பின்ஸ், பசுபிக் பெருங்கடல் என்று பல புதிய நாடுகளையும், சமுத்திரங்களையும், கடல்வழித் தளங்களையும் மற்ற நாட்டினர் கண்டுபிடித்து வியாபாரம் செய்ய தொடங்கினர்.


அதன் பிறகு 1498-ஆம் ஆண்டு இந்தியாவை வாஸ்கோடகாமா
கண்டுபிடித்து கடல் வழியாக வாணிபம் செய்ய வந்தார். அதன் பிறகு அவர் செய்த கொலை வெறி தாக்குதல் பற்றி இதற்கு முந்தைய பதிவில் நாம் படித்து இருந்தோம். Christopher Columbus மூலம் நாம் கற்று கொள்வது ஒன்று மட்டும் தான். அது கனவு தான். ஆம் கனவு காணூங்கள். அதை சாதித்து காட்ட முயற்சி செய்யுங்கள் அவ்வளவு தான். Christopher Columbus போல் ஒரு நாள் நீங்களும் நிச்சயம் சாதித்து காட்டலாம்.

Post a Comment

Previous Post Next Post