போரை தடுத்த தனிமனிதன்


History of Mikhail Gorbachev, who ended the Cold Warமுன்பு இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Clod War' எனப்படும் பனிப்போர் தான். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ஒன்று உள்ளது. அது ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை பெருக்கிக்கொண்டு கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க நினைத்தது தான் முக்கியகாரணமாக விளங்கியது. 


அதற்கு சவால் விடும் வகையில் அமெரிக்கா ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதனுடைய விளைவால் தான் 'Clod War' எனப்படும் பனிப்போர் ஆரம்பமானது.
பனிப்போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. போரின் உச்சகட்டத்தில் இருந்தபோது மூன்றாம் உலகப்போர் ஏற்படுமோ என்று உலகம் மக்கள் அனைவரும் பயந்தனர். 


ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் முற்றிலுமாக அழிந்து போனது. அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்டது. ஆயுத போட்டியிலிருந்து விடுபட்டு உலகம் அமைதி அடைந்தது. இதை நிகழ்த்தி காட்டியது ஒரு மனிதன் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


History of Mikhail Gorbachev, who ended the Cold War


இந்த கொடிய பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் அந்த அரசியல் தலைவர் தான் நாம் படிக்க இருக்கும் மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev). இவர் 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் நாள் தெற்கு ரஷ்யாவின் Stavropol வட்டாரத்தில் உள்ள  Privolnoye எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் சிறுவயதாக இருந்தபோது ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 

இவர் மிக மோசமான கொடுங் கோலர்களில் ஒருவர் என்று வரலாறு கூறுகிறது. இந்த நிலையில் கொர்பச்சொவின் தாத்தா Andreyevich Gorbachev ஒன்பது ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்து வளர்ந்தார் கொர்பசோவ். இதனால் அவர் மீது Mikhail Gorbachev க்கு வெறுப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் Mikhail Gorbachev தமது பதினைந்தாவது வயதிலேயே இளையர் கம்யூனிஷ்டு லீகில் சேர்ந்துள்ளார். 

1950-ஆம் ஆண்டில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். அப்போது பல்கலைக் கழகத்தில் Raisa Titarenko என்ற பெண்ணை சந்தித்துள்ளார். பின்பு காதல் வயப்பட்டு 1953-ஆம் ஆண்டில் அந்த பெண்ணை மணந்து கொண்டார். பின்னர் ஊர் திரும்பிய கொர்பசோவ் கம்யூனிஷ்டு கட்சியின் தலைமைத்துவத்தில் படிப்படியாக முன்னேறி பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். பின்னர் 1970-ஆம் ஆண்டு கட்சியின் வட்டார செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் தன்னுடைய அயராத முயற்சியால் அடுத்த ஆண்டே மத்திய ஆளும் குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.   


அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி 1980-ஆம் ஆண்டு சோவியத் ஆளும் குழுவின் முழு உறுப்பினராக அவர் பதவி உயர்வு பெற்று அசத்தினார். அந்தக்காலகட்டம் வரை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த  Fyodor Kulakov 1982-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அதனால் அவர் மறைந்த பிறகு Andropov என்பவர் பொறுப்பை ஏற்றார், ஆனால் அவரும் இரண்டு ஆண்டுகளில் மறைந்தபோது Chernenko என்பவர் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார். 


History of Mikhail Gorbachev, who ended the Cold War


பின்னர் 1985-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள்  Chernenko இறந்தபோது அடுத்த நாளே கட்சியின் பொது செயலாளர் பொறுப்பும், அதிபர் பொறுப்பும் கொர்பசொவிற்கு கொடுக்கப்பட்டது. முந்தைய சோவியத் அதிபர்களைப் போல் அல்லாமல் மற்ற நாடுகளுக்கு நிறைய பயணங்களை மேற்கொண்டார் கொர்பசோவ். அவர் பதவியேற்றபோது மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தது சோவியத் யூனியன்.

பதவியேற்ற வேகத்திலேயே ஆயுத போட்டா போட்டியை முடிவுக்கு கொண்டு வர Mikhail Gorbachev முடிவு செய்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் Ronald Reagan-னின் அழைப்பை ஏற்று இருவரும் நான்கு உச்ச நிலை சந்திப்புகளை நடத்தினர். அதன் விளைவாக 1987-ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை குறைக்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். 

அடுத்த ஆண்டே இன்னொரு முடிவையும் அறிவித்து அசத்தினார் கொர்பசோவ். ஒன்பது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளை மீட்டுக்கொள்வதாக அவர் அறிவித்தார். வெறும் வீம்புக்காக படைகளை அங்கே வைத்திருந்து இழப்பை அதிகமாக்கிக் கொள்வதை விட அங்கிருந்து வெளியேறி இழப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது விவேகத்தை உலக மக்களும் உலக நாடுகளும் பாராட்டியது.


அதன் பிறகு perestroika என்ற பொருளியல் சீர்திருத்தத்தை அவர் அறிவித்தார். அந்த சீர்திருத்தத்தால் கம்யூனிஸ்டு கட்சியின் இரும்புப்பிடி தளரத்தொடங்கியது என்றே கூறலாம். சில துறைகளில் தனியார்மயத்திற்கு அனுமதி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு Glasnost என்ற திறந்த கொள்கையை அறிவித்தார். அந்தக்கொள்கைதான் கம்யூனிசத்தின் அழிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தனிமனிதர்களும், பத்திரிக்கைகளும் அச்சமின்றி அரசியல் பேச அனுமதிக்கப்பட்டனர். 1989-ஆம் ஆண்டு முதன் முறையாக சோவியத் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடை பெற்றது.இந்த நிலையில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல்கேரியா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளில் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்டு கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதனால் அந்தக்கட்சிகள் மக்களால் வெறுக்கப்பட்டது. அதன் பிறகு 1989 மற்றும் 1990 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. 1989-ஆம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 


History of Mikhail Gorbachev, who ended the Cold War


இரண்டு ஜெர்மனிகளையும் பிரித்த பெர்லின் சுவற்றை (Berlin Wall) தாண்டி மேற்கு ஜெர்மனிக்கு செல்ல மக்கள் முயற்சி செய்தனர். இதனால் அப்போது கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த Erich Honecker அடக்கு முறையை கையாண்டு மக்களை களைக்க நினைத்த போது Mikhail Gorbachev அங்கு சென்றார்.
அவர் அடக்கு முறையை பயன்படுத்த வேண்டாம் என்றும் சீர்திருத்தத்தை விரைவில் தொடங்குமாறும் Honecker ரிடம் கூறினார். 

அப்போது 3,80000 ரஷ்யப்படைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்து வந்தன. இந்த நேரத்தில் அவர் தலையிட்டதால் ரத்தக்களறி தவிர்க்கப்பட்டது. அதன் பிறகு இரண்டே வாரங்களில் Honecker பதவி துறக்க நேரிட்டது. அதே ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் பெரிலின் சுவர் திறந்து விடப்பட்டது. மில்லியன் கணக்கான கிழக்கு ஜெர்மானியர்கள் சுதந்திரமாக மேற்கு ஜெர்மனிக்குள் சென்றனர். வரலாற்றில் ஒரு களங்கமாக இருந்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது. 

பல்கேரியாவில் இரும்புக்கரத்தோடு ஆட்சி செய்து வந்த டோடொ ஜிப்கோப் நவம்பர் 10-ஆம் நாள் பதவி துறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஹங்கேரியில் நவம்பர் 26-ஆம் நாள் சுதந்திர தேர்தல் நடைபெற்றது. அதிக வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியாளர் தோல்வி அடைந்தார். போலந்திலும் கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு 1990-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அங்கு சந்தைப் பொருளியல் அறிமுகமானது. 

அதன் பின் டிசம்பர் 25-ஆம் நாள் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் சிறை பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் சர்வாதிகாரி Sakharov.
அதன் பிறகு 1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது  Lithuania. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர். 

ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் பிறகு சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. அதே ஆண்டு தம் கடமைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதாக நினைத்து சொந்தமாகவே பதவி விலகினார் கொர்பசோவ். அவர் பதவியேற்று ஆறே ஆண்டுகளில் அத்தனையும் நடந்து முடிந்தது. இருபதாம் நூற்றாண்டை பாதுகாப்பற்றதாக மாற்றிய எத்தனையோ தலைவர்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக அதன் பாதுகாப்பை உறுதி செய்தவர் கொர்பசோவ். தனி ஒரு மனிதனாக இருந்து இவற்றை செய்வது எளிதான காரியமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post