சமாதான புறாவை உருவாக்கியவர் History of Pablo Picasso who revolutionized painting


கலைவல்லுநர்கள் என்பவர்கள்
கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிலரை தான் 'கலையுலக பிரம்மாக்கள்' என்று கூறுகிற்றோம். ஒரு காலகட்டத்தில் ஓவியத்துறையில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள் வரையப்பட்டன. அந்த வரலாற்றை தகர்த்து எறியும் வகையில் பதினைந்தாம் நூற்றாண்டில்  
மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அ
ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். 


அந்த ஓவியங்கள் மக்களை பெரிதும் கவர்ந்தன. முப்பரிமாண ஓவியங்கள் அறிமுகமாகி பல நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. அதன் பிறகு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் கண்டு படிக்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில் கேமரா மற்றும் புகைப்படங்களின் எண்ணிக்கை அதிகமானதால் ஓவியக்கலையை சற்று நளிவடைந்து போனது என்பது தான் உண்மை. ஓவியர்கள் ஒரு நபரை தத்ரூபமாக வரைந்தாலும் ஒரு புகைப்படத்தின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். 


ஓவியக்கலை என்பது முற்றிலும் அழிந்து விடும் என்று பலரும் கருத்து கூறி வந்தனர். அந்த தருணத்தில் 'கியூபிசம்' (cubism) என்ற புதிய ஓவிய பாணியை அறிமுகம் செய்து அசத்தினார் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso). Pablo Picasso ஸ்பெயினில் 1881-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்தார். அவரது பிறப்பு ஒரு அதியசம் என்று வரலாறு கூறுகிறது. அவர் பிறந்த போது இறந்து விட்டார் என்று கூறி அவருக்கு பிரசவம் பார்த்த செவிலியர் கூறிய ககுழந்தைதயை கொடுத்து உள்ளார்.


History of Pablo Picasso who revolutionized paintingஅதன் பிறகு அவருடைய மாமா ஓடிப்போய் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை வழங்கியதால்தான் உயிர் பிழைத்தாராம். அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பே கையில் பென்சிலை வைத்து சுவர்களில் ஏதாவது கிறுக்கி கொண்டே இருப்பாராம். சிறுவயது முதலே அவருக்கு ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. Pablo Picassoவின் தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்துள்ளதால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை கண்டு அவரை ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் Pablo Picasso 23 வது வயதில் 1904-ஆம் ஆண்டு பாரிஸூக்கு வந்துள்ளார். அங்கு தன்னுடைய திறமையை மேலும் வளர்த்து கொண்டு அங்குள்ளவர்களுக்கு தன் திறமையை வெளிபடுத்தினார். அவரது திறமையையும், புகழையும் கண்டு மெய் சிலிர்த்த பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் Pablo Picasso அதை ஏற்று கொள்ள மறுத்து விட்டார். பாரிஸூக்கு வந்த மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றபோது அவர்  'Les Demoiselles d'Avignon' என்ற ஓவியத்தை வரைந்தார். 


அந்த ஓவியம் உலகையே ஸ்தம்பிக்க வைத்தது என்று கூட கூறலாம். அதில் ஐந்து பெண்களை அவர் வரைந்திருந்த வித்தியாசமான பாணி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல நவீன ஓவியத்துறைக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளைவுகள் அதிகமின்றி நேர்க்கோடுகளும், முக்கோண வடிவங்களும் கொண்டு அது வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம்தான் 'கியூபிசம்' என்ற ஓவிய பாணியைத் தொடங்கி வைத்தது. உலக மக்கள் அனைவரையும் அந்த ஓவியம் கவர்ந்தது.


History of Pablo Picasso who revolutionized painting


அதன்பிறகு பலர் கியூபிசம் ஓவிய பாணியை பின்பற்றி ஏராளமான ஓவியங்களை வரையத் தொடங்கினர். இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் பிக்காஸோவின் தீவிர ரசிகர் ஆனார். ஆனால் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வாதிகாரி தான் ஹிட்லர். அவரும் ஓவியத்தில் அதிக ஆர்வம் உடையவர் தான். அவர் Pablo Picasso ஓவியங்களை ஒரு பைத்தியக்காரன் கிறுக்கியது போல் உள்ளது என்று கூறினார். அதோடு அந்த படைப்புகளையும் ஜெர்மனியில் தடை செய்தார். ஆனால் பிக்காஸோவை பகைத்துக்கொள்ள ஜெர்மன் படைகள் தயங்கின. 


காரணம் அந்தளவுக்கு பிக்காஸோ உலகப்புகழ் பெற்றிருந்தார். யாரும் தொட முடியாத உயரத்தில் இருந்தார்.
இந்த நிலையில் 1936-ஆம் ஆண்டு ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அப்போது ஹிட்லரின் படைகள் 'Guernica' நகரின் மீது கடுமையான ஆகாயத்தாக்குதல் மேற்கொண்டன. அந்த தாக்குதலில் Guernica நகர் முற்றிலுமாக அழிந்து சிதைந்து போனது. அந்த நகரின் வேதனையை பிக்காஸோ கேன்வஸ் துணியில் ஓவியமாக வரைந்தார். அதோடு அதற்கு 'Guernica' என்று பெயர் வைத்தார்.

அதன் பிறகு அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதி தொடர்பாக அந்த கட்சி ஏற்பாடு செய்த பல கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் படி 1950-ஆம் ஆண்டு அமைதி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அவர் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தில் அவர் அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப்படுத்தி வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை தான் நாம் இப்போதும் பயன் படுத்திகிறோம். அது தான் புறா.


History of Pablo Picasso who revolutionized paintingஅதன் பிறகு புறாவை அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது உலகம். சீனா ஒருபடி மேலே சென்று அந்த ஓவிய சின்னத்தை தன் தபால் முத்திரையில் பதித்துக் கொண்டது. ஓவியத்தில் மட்டும் அல்லாமல் ஆடை வடிவமைப்பிலும் Pablo Picasso திறமை உடையவராக இருந்தார். ரஷ்யாவின் பேலெ நடனக்குழுவுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அதன் பிறகு அந்த நடனக்குழுவில் இடம்பெற்றிருந்த Olga Khokhlova என்ற பெண்ணை பிக்காஸோ திருமணம் செய்து கொண்டார்.  

Pablo Picasso 78 சுமார் 13500 ஓவியங்கள், சுமார் 34000 illustration எனப்படும் விளக்கப்படங்கள், சுமார் 400 சிற்பங்களை அவர் செய்து முடித்தார். அவருடைய ஒட்டுமொத்த படைப்புகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 500 மில்லியன் பவுண்டுகள். கேட்பதற்கு தலை சுற்றுகிறது. அதன் பிறகு Pablo Picasso 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தன்னுடைய 92-ஆவது வயதில் பிரான்சில் காலமானார். 


Post a Comment

Previous Post Next Post