பப்பாளிப்பழத்தை வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள் மட்டும் இதனை படியுங்கள்

பப்பாளிப்பழத்தை வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள் மட்டும் இதனை படியுங்கள்

பப்பாளிப்பழம்

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


உலகில் கிட்டும் பழங்களில் 38 வகையான பழங்களை அப்படியே பச்சையாகச் சாப்பிடலாம். மற்ற பழங்களை நன்கு பழுத்தபிறகுதான் சாப்பிட வேண்டும். இந்த 38 பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி ஆகிய மூன்றில் உயர்தரமான தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளன. வளரும் குழந்தைகளும் பலவீனமான குழந்தைகளும் பப்பாளிப் பழத்தைச்1 சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். பப்பாளிப்பழம் நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே எளிதில் ஜீரணமடைய வைக்கிறது. 

பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால்1 நாள்பட்ட மலச் சிக்கல், பேதி போன்றவை குணமாகும். திருமணமாகாத பெண்களுக்கு உரிய நாட்களில் மாதவிலக்கு ஏற்படவில்லை யென்றால் பப்பாளிக்காயைப் பச்சடியாக தயாரித்துச் சாப்பிட்டால் உடனே மாதவிலக்கு ஏற்பட்டுவிடும். சிலர் அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் பழுதடைந்து போகலாம். அவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவு பப்பாளி விதைகளை அரைத்து அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். 

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளி ரசத்துடன் தேனைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் டான்சில்ஸ், தொண்டைப்புண் போன்றவை குணமாகும். தினமும் பப்பாளிப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூலநோய், யானைக்கால் நோய் போன்றவை குணமாகும். வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும். பப்பாளிக்கு நம் உடல் ஆரோக்யத்தில் பெரும் பங்கு உண்டு. சத்துக்கள் பல நிறைந்த பப்பாளிப் பழம், உடலுக்கு பலம் தரக் கூடியது. மெக்ஸிகோவை தாயகமாகக் கொண்ட பப்பாளி, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக போர்த்துகீசியரால் நமது நாட்டில் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

30 அடி உயரம் வரை வளரக்கூடிய பப்பாளி மரத்தில், 20 முதல் 30 வரை பழம் காய்க்கும். இவற்றின் கனம் தாங்காமல் மெலிந்த தோற்றம் கொண்ட பப்பாளி மரமே முறிந்து விடுமோ என அஞ்சி, அதன் காய்களை பறிக்க வேண்டிய நிலை கூட வருமெனலாம். பப்பாளிப்பழம் ஜீரண கோளாறுகளுக்கு நல்ல நிவாரணி. கடினமான உணவையும் எளிதாக செரிமானம் செய்யும் திறன் பப்பாளிப் பழத்தில் அடங்கி உள்ள பாப்ஸினுக்கு உண்டு. இதனால் தான் அசைவ உணவு உண்போர் பப்பாளிப் பழத்தை1 கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இது வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் தன்மையையும் நன்கு கட்டுப்படுத்தும். 

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதை காலை உணவுடன் சேர்த்து உண்பது பலனை மேலும் கூட்டும். காசநோய் வருவதற்கு காரணமாக உள்ள கிருமிகளை சிதைக்கும் குணம் பப்பாளிப் பழத்துக்கு உண்டு. எனவே காச நோயாளிகள் இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளிப் பழத்தில் வைட்டமின் 'டி' அதிகம் இருக்கக் காரணம், இது சூரிய ஒளியின் பயன்களை முழுமையாக கிரகித்துத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருப்பதே. எனவேதான் பழுத்த நிலையிலும் இதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கிறது. இதை 'சூரிய ஒளிக் குடுவை' எனக் குறிப்பிட்டார். அமெரிக்க மருத்துவர் ஒருவர். பப்பாளிப் பழத்தை அடிக்கடி1 உணவில் சேர்த்து  உண்ண சருமம் பளபளப்பாகும். 

மேலும் சுருக்கங்கள் அகலும். 'ஏ' வைட்டமின் நிறைந்தது. கண்பார்வையில் தெளிவைத் தரக்கூடியது. ஈரலின் பலவீனம் நீக்கி பலமடையச் செய்யும் ஆற்றல் உண்டு. வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு, மூலநோய், வயிற்றுக் கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற பல பாதிப்புகளுக்கு நல்ல நிவாரணம் தரக்கூடியது பப்பாளிப் பழம். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் தன்மையும், பப்பாளிப் பழத்துக்கு உண்டு. முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகளை நீக்கும் ஆற்றல் பப்பாளிப் பழத்திற்கு உண்டு. பப்பாளிப் பழத்தை நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் கரும்புள்ளிகள் தானாக நீங்கிவிடும். 

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளிப் பழத்தில் அதிக தண்ணீர் சத்து இருக்கிறது. இது கோடைக்கு மிக ஏற்றது. அதுமட்டுமின்றி சிறுநீர் குழாய்களில் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாகவும் பப்பாளி பழம் செயல்படுகிறது. இதில் வைட்டமின்- ஏ  சத்து நிறைந்துள்ளது. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பப்பாளி அதிக அளவில் துணை புரிகிறது. கோடை காலத்தில் தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களுக்கு அஜீரண தொல்லை ஏற்படாது. கோடை காலத்தில் பெண்கள் பப்பாளி பழக் கூழை தினமும் முகத்தில் தேய்த்து வரலாம். அவ்வாறு செய்தால் கோடை உஷ்ணம் முகத்தை தாக்குவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம். 

முகப்பருவும் நீங்கும். சாதாரணமாக பப்பாளிப் பழத்தை எப்போதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று கூற முடியாது. சிலருக்குப் பப்பாளிப்பழம் என்றாலே பிடிக்காது. இதற்குக் காரணம் பப்பாளிப் பழத்தின் சிறப்பு அவர்களுக்குத் தெரியாததே. பழ வகைகளிலே அதிக சத்து வாய்ந்ததும் உடல் நலனுக்குப் பெருமளவு உதவுவதும் ஆன அற்புதமான பழம் பப்பாளிப்பழம். வைட்டமின் பி -1 சத்து 11 மில்லி கிராம், பி -2 சத்து 71 மில்லி கிராம், வைட்டமின் சி சத்து 13 மில்லி கிராம் , இரும்பு சத்து 0.1 மில்லி கிராம், சுண்ணாம்புச் சத்து 0.3 மில்லி கிராம் போன்ற சத்துக்கள் பப்பாளிப் பழத்தில் அடங்கியிருக்கின்றன. சாதாரணமாக பண வசதி மிக்கவர்கள்2 ஆப்பிள் பழம் சாப்பிடுவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். 

ஏழைகளும் ஆப்பிள் பழம் சாப்பிடும் பாக்கியம் தங்களுக்குக் கிட்டவில்லையே என ஏங்குகிறார்கள். ஆப்பிள் பழத்தை விட மிக அதிகமான உயர்ச்சத்துக்கள் பப்பாளிப் பழத்தில் தான் உள்ளது. பப்பாளிப் பழம் உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும்1 என்பது சிலருடைய கருத்து. இது தவறான கருத்து. இதற்கு சரியான மருத்துவ ஆதாரம் கிடையாது. இரத்த விருத்திக்கும் தசை வளர்ச்சிக்கும் பப்பாளிப் பழம் மிகவும் சிறந்ததாகும். உடலின் நோய் தடுப்பு ஆற்றலைப் பெருக்கும் சக்தி பப்பாளிப் பழத்துக்கு உண்டு. ஆதலால் பப்பாளிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு தொற்று நோய்களே உண்டாகாது. 

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதைச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் குறைபாடு அகலும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் இருந்தால் அகற்றவும் தொடர்ந்து பப்பாளிப் பழங்களைச் சாப்பிட வேண்டும். நரம்புகளை முறுக்கேறச் செய்யும் ஆற்றலும் பப்பாளிப் பழத்துக்கு உண்டு. இதன் காரணமாக பப்பாளிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவோர்1 எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதைக் காணலாம். பற்கள், பல் ஈறுகள்  தொடர்பான பல பிணிகளை1 இது விலக்கும். வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது பப்பாளிப்பழம் பப்பாளி பழத்தின் நுனி பாகம் குறுகியும், அடிபாகம் வளரவளர பெருந்துமிருக்கும். நன்றாகப் பழுத்த பழம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திலிருக்கும். 

ஒரு கிலோ எடை முதல் 200 கிராம் எடைவரையுள்ள பழங்கள் கிடைக்கும். பழத்தை நறுக்கினால் அதன் சதைப் பாகம் சுமார் மூன்று சென்டிமீட்டர் கணத்தில் ஆரஞ்சு பழ நிறத்திலிருக்கும். பழத்தின் நடுப்பாகம் வெளிராக இருக்கும். அதில் மிளகு போன்ற சற்று நீளவடிவத்தில் கருநிறமான விதைகள் நிறைந்திருக்கும். இந்த விதைகளின் மேல் மெல்லிய ஒரு தோல் முட்டைபோல மூடியிருக்கும். இந்த விதைகள் கருநிற முத்துக்களைப் போல அழகாக இருக்கும். இடை இடையே- பறங்கிக்காயில் உள்ள சடைபோல இருக்கும். பப்பாளிப்பழம் இனிப்பு ருசியாக இருக்கும். இதில் ஒருவிதமான பால் வாசனை இருக்கும். சதைப்பாகம் தின்பதற்கு மிருதுவாக இருக்கும். 

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளிப் பழத்தை ஒருசிலர் தவிர அநேகர் விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பப்பாளிப்பழம் அதிகச் சூட்டை உண்டுபண்ணும். சீதபேதி வரும் என்பது ஒன்று. அதனுடைய வாசனையும் ருசியும் பிடிக்காதது மற்றொரு காரனம். பப்பாளிப்பழத்தின் அரிய குணத்தை மக்கள் இன்னும் சரிவர அறியாத காரணத்தினால் அதற்கு ஆப்பிள் பழத்திற்குள்ள கிராக்கி ஏற்படவில்லை. வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்த பழவகையில் முதலிடம் பெற்றிருப்பது மாம்பழம், மாம்பழத்திற்கு அடுத்து அதிக அளவில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து பெற்றுள்ள பழம் பப்பாளிப்பழம் ஒன்றுதான். உடலில் அதிக இரத்தத்தை உண்டுபண்ணும். 

உடலுக்கு நல்ல பலம் தரும் என்று நினைத்து அதிகம் பணம் கொடுத்து ஆப்பிள்  வாங்கிச் பழத்தை சாப்பிடுகின்றனர். டாக்டர்கள் கூட ஆப்பிள் பழத்தைச் சிபாரிசு செய்கின்றனர். ஆனால், அந்த ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து சிறிதளவுகூட இல்லை. ஆனால், வைட்டமின் பி 1 மட்டும் அதிக அளவிலிருக்கிறது. வேறு எந்தப் பழத்திலுமில்லாத அளவு வைட்டமின் பி 1 இந்த ஆப்பிள் பழத்திலிருக்கிறது. வைட்டமின் பி 1 உயிர்ச்சத்து அதிக அளவில் இருப்பதை வைத்துத்தான் டாக்டர்கள் ஆப்பிள் பழத்தைச் சிபாரிசு செய்கின்றனர். வைட்டமின் ஏ உயிர்ச்சத்துக்காக அல்ல! 

மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யவும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைபடுத்தவும், பற்களைக் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், தாதுவைக் கெட்டிப்படுத்தி புத்திர சந்தானத்தை உண்டு பண்ணவும், கர்ப்பஸ்திரிகளின் வயிற்றிலுள்ள சிசு பலம் பெற்று வளரவும், சொறி சிரங்கு வராமல் தடுக்கவும், மூத்திரப் பையில் உண்டாகும். கல்லைக் கரைக்கவும், ஜீரணத்தை உண்டு பண்ணவும், இரப்பை, குடல் இவைகளைப் பாதுகாக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ஏ உயிர்ச்சத்துக்குத்தான் உண்டு. இவைகளைவிட குறைந்த அளவில் சக்தியைக் கொடுப்பதுதான் வைட்டமின் பி உயிர்ச் சத்து. 

அதிக அளவில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்துள்ள மாம்பழம், பப்பாளிப் பழம் இவைகளைவிட்டு மக்கள் ஆப்பிள் பழத்தின் மேல் ஏன் இவ்வளவுமோகம் கொண்டிருக்கிறார்கள்? எந்தெந்த பழத்தில் எந்த அளவு வைட்டமின் உயிர்ச்சத்துக்களிருக்கின்றன என்ற விபரம் தெரியாததே தான் இதற்குக் காரணம். இது போன்ற நூல்களை அவர்கள் படித்து விபரத்தைப் புரிந்துகொண்டால், பிறகு மாம்பழத்தையும் பப்பாளிப் பழத்தையும் விடமாட்டார்கள். அதிகப்பணம் கொடுத்து ஆப்பிள் பழத்தையும் வாங்கமாட்டார்கள். நமது உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது வைட்டமின் ஏ உயிர்ச்சத்துதான். 

நாம் உண்ணும் அரிசிச்சாதம், கறி, மீன், காய்கறி, பருப்பு வகைகளில் நமக்குத் தேவையான வைட்டமின் ஏ உயிர்ச்சத்து கிடையாது. எனவே நாம் அதிக அளவில் வைட்டமின் ஏ உயிர்ச் சத்து அதிகமுள்ள வேறு உணவை உட்கொள்ள வேண்டும். இதற்கு நாம் பப்பாளிப் பழத்தையும், மாம்பழத்தையும் சாப்பிட்டு அதிக அளவு வைட்டமின் ஏ உயிர்ச்சத்தையும் பெற வேண்டும். அதிக அளவில் பணச் செலவு செய்யாமல், ஒரு சல்லி காசுகள் செலவில் பப்பாளிப் பழத்தையும் மாம்பழத்தையும் வாங்கிச் சாப்பிட்டு தேவையான அளவு வைட்டமின் ஏ உயிர்ச்சத்தானதை சுலபமாகப் பெறலாம். இரண்டரை ரூபா எடையளவுள்ள பப்பாளிப்பழத்தில் 573 மில்லிகிராம் உயிர்ச்சத்து இருக்கிறது. ஆனால் அதே அளவு ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து சிறிதளவுமில்லை. 

பப்பாளிப் பழத்தில் வைட்டமின் பி 1 உயிர்ச்சத்து 11 மில்லிகிராம் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் பழத்தில் 36 மில்லிகிராம் இருக்கிறது. பப்பாளிப் பழத்தில் வைட்டமின் பி 2 உயிர்ச்சத்து 71 மில்லிகிராம் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் பழத்தில் வைட்டமின் பி 2 உயிர்ச்சத்து 9 மில்லிகிராம் இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் வைட்டமின் சி உயிர்ச்சத்து 13 மில்லிகிராம் இருக்கிறது. ஆனால் , ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி உயிர்ச்சத்து 1 மில்லிகிராம்தான் இருக்கிறது. இதைக் கொண்டு பப்பாளிப்பழத்திற்கும் ஆப்பிள் பழத்திற்குமுள்ள உயிர்ச்சத்து விபரங்களை நன்றாகத்தெரிந்து கொள்ளலாம். நமது அரசாங்கத்தாரால் வெளியிடப் படும் ஹெல்த் புல்லட்டீன் நம்பர் 23 - ல் இதை காணலாம். 

பப்பாளிப்பழம் வயிற்று வலியைத் தரும், சீதபேதியை உண்டாக்கும் என்று தவறாக நினைத்து அதை சாப்பிடப் பயப்படுகின்றனர் அநேகர். பப்பாளிப்பழம் உஷ்ணம், நெருப்பு, பொல்லாத சூடு என்று சிலர் சொல்லுவார்கள். அதே நேரத்தில் மாம்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவார்கள். இவர்கள் எந்தப் பழம் சூடு, எந்தப் பழம் குளிர்ச்சி என்பதையே அறியாதவர்கள். பப்பாளிப் பழத்தின் காலரி என்ற உஷ்ண அளவு 11. மாம்பழத்தின் காலரி என்ற உஷ்ண அளவு 14. இதிலிருந்து எந்தப் பழம் அதிக உஷ்ணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பப்பாளிப் பழத்தில் தினசரி ஒரு ரூபாயெடை வீதம் தொடர்ந்து 40 நாட்கள் வரை ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு இரவு படுக்குமுன் ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பசுவின் பால் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும். 

மேலும் உடல் பலம் பெறும். நரம்புகளில் முறுக்கு ஏறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். உடற் சோம்பல் மாறி சுறுசுறுப்பு உண்டாகும். மனதில் ஒருவிதமான புதிய உணர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படாது. மலம் சுலபமாக, சரளமாக இறங்கும். பல் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். பல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படாது, பற்களுக்கு உறுதி ஏற்படும். மாதவிடாய் தடைப்பட்டு கஷ்டப்படும் பெண்மணிகள் மூன்று நாட்களுக்கு தினசரி ஒரு ரூபாயெடை பப்பாளிப் பழத்தை தின்றுவந்தால் மாதவிடாய் ஏற்படும். பிறகு ஒழுங்காக வெளியேறும். சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் சீக்கிரமாக ஆறும். அடிக்கடி பப்பாளிப்பழத்தைச் சாப்பிட்டு வருபவர்கள் எந்த வகையான வியாதிகளுக்கும் ஆளாக வேண்டி இருக்காது. 

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எந்த வகையான தொற்றுநோய் பரவினாலும் இவர்களை அது தாக்காது. பப்பாளிப் பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகைச் சத்து நிறைந்திருப்பதால், பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுகிறவர்களின் இரத்தத்தில் கலக்கும் எந்த வகையான நோயை உண்டு பண்ணும் விஷக்கிருமிகளும் இறந்துவிடும். எனவே பப்பாளிப் பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. எந்த நோய்க்கும் பயப்படத் தேவையில்லை. பப்பாளி பழத்தின் நுனி பாகம் குறுகியும், அடிபாகம் வளரவளர பெருந்துமிருக்கும். நன்றாகப் பழுத்த பழம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திலிருக்கும். 

ஒரு கிலோ எடை முதல் 200 கிராம் எடைவரையுள்ள பழங்கள் கிடைக்கும். பழத்தை நறுக்கினால் அதன் சதைப் பாகம் சுமார் மூன்று சென்றுமீட்டர் கணத்தில் ஆரஞ்சு பழ நிறத்திலிருக்கும். பழத்தின் நடுப்பாகம் வெளிராக இருக்கும். அதில் மிளகு போன்ற சற்று நீளவடிவத்தில் கருநிறமான விதைகள் நிறைந்திருக்கும். இன்று முதல் உணவில் அதிகமாக பப்பாளிப் பழத்தைப் பயன்படுத்துங்கள் - உடல் ஆரோக்யத்தைப் பேணுங்கள்.


திராட்சைப்பழம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால்.....👇

👉 Click here 


மேலும் பல சுவாரசியமான செய்திகளை அறிய நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க.


Click here to subscribe

👇

SUBSCRIBE TO SMART INFO WORLD 



0 Comments