History of celebrity (பிரபலங்களின் வாழ்வில்)

 History of celebrity (பிரபலங்களின் வாழ்வில்)

History of celebrity

மகாத்மா காந்தி

History of Mahatma Gandhi


காந்தியடிகள் கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் சாந்தி நிகேதனத்திற்குப் போயிருந்தபோது தாகூர் காந்தியடிகளிடம் “என்றும் மாறா இளமை பொருந்திய எங்களின் இதய அரசி சாந்திநிகேதன் தங்களை வரவேற்கிறாள்” என்று கூறி வரவேற்றார். காந்தியடிகள் புன்முறுவல் தவழ “அப்படியானால் இந்தப் பல் இல்லாத கிழவனுக்கு அதிர்ஷ்டம் இருப்பதாய் தெரிகிறதே” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.


ஹென்றி வான் ட்யக்கே 


history of henry van dyke


ஹென்றிக்கு பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை. மேலும், காசநோயாலும் அவதிப்பட்டார்.  பிழைப்பதற்காக டெக்ஸாஸ் சென்றார். அங்கு அவருக்குக் கிடைத்த வேலை ஆடு மேய்க்கும் தொழில். உடல் நலம் பெற்றபின் வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கு பட்டுவாடா செய்வதில் கவனமின்றி இருந்ததால், பணத்தைக் கோட்டை விட்டு கையாடல் குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை.

 

சிறைச்சாலையில் தள்ளப்பட்ட ஹென்றி தன் எண்ணங்களை எழுத்தில் வடித்தார். கதை கதையாக எழுதித்தள்ளினார். சிறுகதையின் சிகரத்திலேயே ஏறி கொடி நாட்டினார். ஹென்றி உலகம் போற்றும் சிறுகதை மன்னரானார். அவரது நூல்கள் லட்சக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அவரது சிறுகதைகள் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்று ஹென்றியின் நூல்கள் கல்லூரியில் பாடப்புத்தகங்களாகியுள்ளன.  அவர் ஆடு மேய்த்த டெக்ஸாஸ் பண்ணைக்கு புண்ணிய யாத்திரையாகப் பயணிகள் செல்கிறார்கள். அவர் ஐந்து ஆண்டுகள் அடைபட்டிருந்த சிறைச்சாலை அறை இலக்கியக் கோவிலாகி விட்டது.


பெர்னார்ஷா (ஆங்கில எழுத்தாளர்)



ஒருமுறை பிரசித்தி பெற்ற ஆங்கில எழுத்தாளர் பெர்னார்ட்ஷா ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தார். அவரைப் பிடிக்காத ஒருவர் எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்தார் . அருகில் வந்ததும் பெர்னார்ட்ஷாவை நோக்கி , ' நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை தெரியுமா ? ' என்றார். ' ஆனால் நான் வழி விடுவேன் ' என்று ஒதுங்கி நின்றார் ஷா.


ரோவே (அமேரிக்கர்)


உடல் ஊனம் ஒரு குறையல்ல. உள்ளம் வெற்றியை எண்ணி இறங்கினால் போதும். தையல் இயந்திரத்தை அமைத்தவர் ரோவே என்ற அமெரிக்கர். இவர் இரண்டு கால்களும் இல்லாதவர். ஒரு கை செயலிழந்தவர். மிகச் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.  


ராஜாஜி


History of Rajaji


ராஜாஜியிடம் ஒருவர் புடா புடா நாடு எங்கே இருக்கிறது? ' என்று கேட்டார். ராஜாஜி 'உலகத்தில் அப்படிப்பட்ட நாடு இல்லவே இல்லை' என்று ஓங்கிக் கூறினாராம். எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்' என அவர் கேட்டபோது ராஜாஜி அமைதியாகச் சொன்னாராம் அப்படி ஒரு நாடு இருந்திருந்தால் அந்நாட்டிடம் இந்தியா கடன் வாங்கி இருக்குமே !


ஜனாப் அப்பாஸ் அலிகான்


1940 - ஆம் ஆண்டில் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியது. ராஜாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு - செல்லப்பட்டார். சென்னை பிரெசிடென்ஸி மேஜிஸ்ட்ரேட் ஜனாப் அப்பாஸ் அலிகான் தன் தீர்ப்பில் ராஜாஜிக்கு ஒரு வருட சிறை தண்டனையை விதித்தார்.


தீர்ப்பளிக்கும் போது நீதிபதி உணர்ச்சி மிகுதியால் தவித்தார். குருஷேத்திர போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனன் நிலைமையில் தாம் இருப்பதாகக் கூறி, 'தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரம் உண்டு. அதன் பயன்களில் எப்போதுமே அதிகாரம் இல்லை. செய்கையின் பயனை கருதாதே தொழில் செய்யாமலும் இராதே' என்ற கீதையின் வாசகத்தை மேற்கோள்காட்டி , ' அவ்விதமே நானும் என் கடமையை செய்ய வேண்டி இருக்கிறது . நீங்கள் விரைவில் விடுதலை பெற்று பெருமையுடன் வாழ வேண்டுகிறேன் ' என்றார்.


அறிஞர் அண்ணா


History of CN Annadurai


ரோமாபுரியை ஸ்தாபித்தவர்கள் ரோமுலஸ் - ரேட்ஸ் என்ற இரட்டையர். அதுபோல தமிழக அரசியலிலும் கல்வித் துறையிலும் அழுத்தமான சுவடுகள் பதித்த இரட்டையர் ராமசாமி முதலியாரும் , லட்சுமணசாமி முதலியாரும். மறக்க முடிகிற இரட்டையரா இவர்கள். இவர்கள் வாழ்வில்......


வழக்கறிஞர் ராமசாமி முதலியார் இன்றைய திராவிட இயக்கங்களின் மூலதனமான நீதிக்கட்சியின் துறைகளில் ஒருவர். இவர் பதிப்பாசிரியராக இருந்து ஜஸ்டிஸ் பத்திரிகையில் 'ஒரு நாடோடியின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பரபரப்பான அரசியல் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோதுதான் அறிஞர் அண்ணா இவரிடம் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்து சுமார் நான்கு ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பயிற்சி பெற்றார். அண்ணா முதலமைச்சரான பின்னர் சென்னை மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்ட அண்ணா சிலையை யார் திறப்பது என்ற கேள்வி எழுந்தபோது அண்ணாவே தலையிட்டு என் சிலையை ராமசாமி முதலியார்தான் திறக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டு அதன்படி நடந்தது. 


ராமசாமி முதலியார்


History of Ramaswami mudaliar


ஜஸ்டிஸ் பத்திரிகையில் அரசியல் கார்ட்டூன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நையாண்டி முறையை இந்தியப் பத்திரிகை உலகில் பிரபலப்படுத்தியவர் ராமசாமி முதலியார்தான். இவர் சென்னை மாநகராட்சியின் தலைவர் பதவியிலிருந்த போது தான் 1926 - இல் பி.தியாகராயர் அறிமுகப்படுத்தி இடையில் நின்று போயிருந்த மதிய உணவு திட்டத்தை இருபத்தைந்து பள்ளிகளில் தொடங்கி வைத்தார். அத்துடன் 1930 - இல் மாநகராட்சிப் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவுத் திட்டம் கொண்டுவந்து அதை நடைமுறை படுத்தினார். கடுமையான எதிர்ப்புக்கிடையில் சென்னை வானொலி நிலையம் உருவாகக் காரணமாயிருந்தார். இவர் முயற்சியால்தான் 1930 - இல் ஏப்ரல் 1 - ம் தேதி முதல் சென்னை வானொலி ஒலிபரப்பு துவங்கியது. இரண்டாம் உலகப் போர் நடந்த போது இந்தியாவின் சார்பாய் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட போது அதன் கொள்கைகளை உருவாக்கியதில் ராமசாமி முதலியாருக்கும் பங்கு உண்டு.


லச்சுமணசாமி முதலியார்


History of lakshmanaswami mudaliar


ஒரு புறத்தில் அண்ணன் அரசியல் அரங்கை கலக்கிக் கொண்டிருந்த போது தம்பி லட்சுமணசாமி முதலியார் மருத்துவ உலகில் பிரகாசித்தார். மகப்பேறு மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னையைத் தேடி வந்து கற்றுச் செல்லும் நிலையை உருவாக்கினார். சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பதவியை ஆங்கிலேயரைத் தவிர வேறு யாரும் நினைத்துப் பார்க்க முடியாது என்ற சமயத்தில் தன் அறிவாற்றலால் அந்த உயர் பதவியை கைப்பற்றி ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர ஊக்கம் தந்தார். உலகில் ஒரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருபத்தேழு ஆண்டுகள் துணை வேந்தராக இருந்த பெருமை லட்சுமணசாமி முதலியாருக்கே உண்டு. வெளிநாடுகளில் சென்னைப் பல்கலைகழகத்தை முதலியார் பல்கலைக்கழகம் என்று அழைக்குமளவுக்கு புகழ் பெற்றிருந்தார்.


தமிழனின் மருத்துவம்


ஒருமுறை லட்சுமணசாமி முதலியார் லண்டன் சென்றுவிட்டு சென்னை வந்து இறங்கியதும் லண்டனிலிருந்து ஓர் அவசர போன் கால். என்ன விசயம் என்றதும், அங்குள்ள சில பிரபலமான மருத்துவர்கள் ஒரு சிக்கலான பிரசவ கேஸ் என்ன செய்வது என்று தெரியவில்லை சிசேரியன் கூட முடியாது. உடனே நீங்கள் மறு விமானத்தில் புறப்பட்டு லண்டன் வரமுடியுமா என்று பதறி இருக்கின்றனர்.


அதற்கு லட்சுமணசாமி முதலியார் நிதானமாக நிலைமையை போனிலேயே விவரமாக சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறார். பின்னர் இதற்கு நீங்கள் சிகிச்சை எதுவும் அளிக்க வேண்டாம் சம்பந்தப்பட்ட பெண்மணியை தொடர்ந்து சில முறை மாடிப்படியில் ஏறி இறங்க செய்யுங்கள் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.


நீங்கள் சொன்னபடி செய்தோம் குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது என்று லண்டனிலிருந்து லட்சுமணசாமி முதலியாருக்கு மற்றொரு போன் வந்தது.


இந்த இடத்தில் உங்களுக்கு என்ன புரிகிறது என்று மறக்காமல் கீழே கமெண்டில் பதிவிடவும்.




You have to wait 121 seconds.

Download Timer Starts Now Please Wait And Download

டைமர் முடிந்தவுடன் PDF DOWNLOAD செய்து கொள்ளவும்


(பிரபலங்களின் வாழ்வில்)

இதற்கான இரண்டாம் பகுதி விரைவில் தொடரும்.......






2 Comments

  1. Innum neraya post poodunga...Ellame useful ah irukku.....😉

    ReplyDelete
    Replies
    1. Kandippanga nerayave pooduvoom... Unga aadharavukku mikka nadrikal...🙏

      Delete