நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்..!

மனிதர்களாகிய நாம் நீண்ட நாள் உயிருடன் வாழ வேண்டுமானால், அதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு நுரையீரல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் நுரையீரல் தான் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை வடிகட்டி, நமது ஒட்டுமொத்த உடலுக்கும் சுத்தமான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. நுரையீரலில் பிரச்சனை ஏற்படும் போது, நமது உடலில் ஆக்சிஜன் ஓட்டம் தடைபட ஆரம்பிக்கிறது. இதனால் நமது உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்படலாம். இதுமட்டுமின்றி, ஒருவர்
- ஆஸ்துமா,
- மூச்சுக்குழாய் அழற்சி,
- நிமோனியா,
- காசநோய்,
- ஐஎல்டி,
- நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பலியாகலாம்.
ஆனால் பெரும்பாலும் நமது மக்கள் ஆரம்பத்திலேயே அவரவர் உடலில் உள்ள நோயைப் புரிந்து கொள்வதில்லை. இதனால் பிரச்சனை தீவிரமாகும் போது, அதைக் கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில், நாம் ஒவ்வொருவரும் நமது நுரையீரல் பெரிய ஆபத்தில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதனை தெரிந்து கொள்வதன் மூலம் நுரையீரல் பிரச்சனையை ஆரம்பதிலேயே தீர்க்க முடியும். வாங்க தெரிந்து கொள்வோம்.
நுரையீரலானது நோயின் பிடியில் இருப்பதைக் அறிந்துகொள்ள இங்கு 5 முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நெஞ்சு வலி

உங்களுக்கு நீண்ட காலமாக நெஞ்சு வலியானது இருந்து வந்தால், அதனை சற்றும் புறக்கணிக்காதீர்கள். ஏனென்றால், இது நுரையீரல் நோயின் முக்கிய அறிகுறியாக கூட இருக்கலாம். இது மட்டுமல்லாமல், நீங்கள் இருமல் அல்லது மூச்சுத் திணறலை நீண்ட காலம் அனுபவித்து வந்தால், அதனையும் தவிர்க்க வேண்டாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்ல தீர்வை தரும்.
சளி

உங்களுக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக 'சளி' யின் பிடியில் பெரும் பிரச்சனை இருந்தால், உங்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது மிக அதிகம் என்பதைப் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில், சிறிதும் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
மூச்சுத் திணறல்
உங்களுக்கு மூச்சு விடுவதில் ரொம்ப சிரமம் இருந்தால், அதுவும் சுமார் 15 நாட்கள் மேல் நீடித்திருந்தால், உடனே மருத்துவரை அனுகி, பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் சிகிச்சையை எடுக்காவிட்டால், இந்த நிலைமை உங்களுக்கு தீவிரமடைந்துவிடும்.
இருமலின் போது இரத்தம் வருவது
உங்களுக்கு ஒரு வாரத்திற்கும் அதிகமாக இருமல் இருந்து வந்தால் அல்லது இருமலின் போது உங்களுக்கு இரத்தம் வந்தால், அந்நிலை உங்களுக்கு சுவாச அமைப்பில் செயலிழப்பை ஏற்ப்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெறும் வீட்டு வைத்தியத்தை அதாவது உங்களுக்கு நீங்களே மருத்துவராக இருந்து சாதித்துக்கொள்ளலாம் என்று உங்களை நீங்களே மருத்துவர் என நம்ப வேண்டாம். அப்படி நம்புனவங்களில் பலர் இன்று சாம்பலாக ஆற்றிலும் அழுகி போய் மண்ணுக்குள்ளயும் இருக்காங்க. நீங்க அந்த தவறை செய்யாமல் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்க்கொண்டு, உங்களை நீங்கள் காப்பாற்றுவீராக மேலும் உங்களை நம்பி இருக்கும் குடும்பத்தையும் காப்பாற்றுவீராக.
எடை இழப்பு

உங்கள் உடல் எடை திடீரென குறைய ஆரம்பித்தால், அதனை நினைத்து நீங்கள் என்றும் சந்தோஷப்படாதீர்கள். ஏனென்றுல் அது உங்கள் உடலுக்குள் வளரும் புற்று கட்டிகளின் எச்சரிக்கை மணியாகவோ அல்லது எமனின் அழைப்பாகவும் இருக்கலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில், உடனடியாக நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். ஒருபோதும் இதனை சாதாரணமாக நினைத்து உங்கள் உயிரை விட்டுவிடாதீர்கள். பின் மோசமான விளைவை உங்கள் குடும்பம் சந்திக்க நேரிடும். மேலே சொன்னபடி அறிகுறிகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், அவற்றை சாதாரணமாக நினைத்து விட்டு விடாமல், மருத்துவரை சந்தித்து உங்களை பரிசோதினை செய்து கொண்டு உங்கள் உடலுக்கு என்னவென்று தெரிந்து கொண்டு, சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.
நமது நுரையீரல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக் காப்பது

நாம் அனைவரும் கொரோனா என்னும் பெருந்தொற்று காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகவும் மோசமான இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் நமது நுரையீரல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது மிகவும் அவசியமானவைகளில் ஒன்றுகும். சில ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நமது உடலில் நுரையீரல் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாக்க முடியும். நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை வழங்க கூடிய சில பல உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த கொரோனா காலகட்டத்தில் பலரும் நுரையீரல் பாதிப்புகளின் காரணமாக இறக்கிறார்கள் என்று கேட்கும்போது நமக்கு பயம் சற்று அதிகமாகிறது. நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் ஒழுங்காக செயல்பட உதவுவதில் நுரையீரலிற்க்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. நாம் வாழும் இக்காலத்தில் காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது இதன் காரணமாக,
- ஆஸ்துமா,
- நுரையீரல் நோய்
போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன. காற்று மாசுபாட்டின் காரணமாக மட்டும், இன்றைக்கு உலக அளவில் ஒரு வருடத்திற்கு தோராயமாக 4.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
நுரையீரல் பலம்

நமது நுரையீரலுக்கு மிக அதிகமாக காற்று மாசுபாடு தான் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த காற்று மாசுபாட்டால் நோய்க் கிருமிகளையும், நுண்ணுயிரிகளையும் நுரையீரலில் உணடாக்கி சளியைக் சேகரிக்கிறது. இதன் காரணமாக மார்பு முழுவதும் சளி சேர்கிறது. உங்கள் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக நுரையீரலிற்க்கு தீங்கு விளைவிக்கும் மாசுபாட்டில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். மேலும் இதனால் நமக்கு சுவாசம் சமந்தமான பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
ஆரோக்கியமான நுரையீரலை பெறுவதற்கு நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள்கள்

நாம் சாப்பிடும் ஆப்பிளில் உள்ள பினோலிக் கலவைகள் மற்றும் பிளவனாய்டுகள் என்னும் அமிலங்கள் காற்று பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடித்துவரும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை மிகவும் குறைவாகவே உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கிரீன் டீ

நாம் அருந்தும் கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மிகுதிகயாக உள்ளதால் அவை நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எளிதில் குணமாக வழி வகுக்கிறது. கிரீன் டீ யில் உள்ள ஆக்சிஜனேற்ற குர்செடின் ஆன்ட்டி ஹிஸ்டமைன் ஆக செயல்படுகிறது. இது ஒவ்வாமையினால் ஏற்படும் ஹிஸ்டமைன் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. கொரியாவில் ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீ அருந்திய ஆயிரம் முதியவர்களை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொண்ட போது, கிரீன் டீ யை குடிக்காதவர்களைவிட, குடித்தவர்களின் நுரையீரல் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்ததாக 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கானாங்கெளுத்தி மீன்

மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் பல வருட அதாவது பலநாட்களாக இருந்து வரும் நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.மீன்களில் ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலம் உள்ளது இதனால் மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் நுரையீரல் சமந்தமான நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள் நமது நுரையீரலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மற்றொரு சிறந்த உணவாகும்.
- பாதாம்,
- முந்திரி,
- வால்நட்,
- பிஸ்தா மற்றும்
- பூசணி விதைகள்,
- ஆளி விதைகள்,
- சூரியகாந்தி விதைகள்
ஆகியவை மனித உடலுக்கு தேவையான மெக்னீசியத்தை தருகின்றன. இது நமது சுவாச பாதைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் என்றழைக்கப்படும் ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை நமது நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், மேலும் நுரையீரலில் ஏற்படும் திசு சேதத்தை தடுக்கவும் மிகுந்த அளவில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.
ப்ரக்கோலி or காளிஃபிளவர்

காளிஃபிளவரில் உள்ள சல்போராபேன் எனும் கலவை நமது நுரையீரலில் உள்ள உயிரணுக்களில் காணப்படும் மரபணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் நுரையீரலில் உண்டாகும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் நமது நுரையீரலில் காற்றோட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இஞ்சி

பொதுவாக நம்முடைய சமையலறையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருட்களில் தக்காளிக்கு அடுத்த படியாக இஞ்சியும் அடங்கும் எனச் சொல்லாம். நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் இஞ்சியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது நமது நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், மேலும் நுரையீரலில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது. மேலும் சுவாச பாதைகளை சீராக்கி நுரையீரலை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் நுரையீரலின் ஆரோக்கியம் மென்மேலும் அதிகரிக்கிறது.
பூண்டு

பெரும்பாலும் நமது சமையலறையில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த உணவில் பூண்டும் ஒரு முக்கிய பொருளாகும். இந்தப் பூண்டில் உள்ள பிளேவனாய்டுகள் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. இதனால் நுரையீரலின் செயல்பாடானது மேம்படுகிறது. மூன்று பல் பூண்டுகளை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைவு என்று ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
முழு தானியங்கள்

அன்றாடம் உங்கள் உணவில் பிரவுன் ரைஸ் மற்றும் முழு கோதுமை போன்ற தானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இம்மாதிரியான உணவுகள் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. மேலும் நம்முடைய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இவ்வகை உணவுகள் உதவுகிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் அதன் சேர்மங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பீட்ரூட்டில் நைட்ரேட் சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன. இதன் காரணமாக நுரையீரல் செயல்பாடு மிக எளிதாக நடக்கிறது. இந்த நைட்ரேட்கள் நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை, விரிவுபடுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மேலும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் உதவுகிறது.




0 Comments