சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?

நமது உடலில் பிரதானமாக விளங்கும் சிறுநீரகங்கள், இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி பிரித்து எடுத்து உடலுக்கு வெளியே தள்ளும் ஓர் உன்னதமான பணியை செய்து வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் மேலும் உபரியான திரவங்களை வெளியேற்றும் பணியினையும் மற்றும் நமது உடலில் மின்சாரத்தை கடத்தும் திரவங்களின் நிலையினை சமநிலையாக்குவதன் மூலம் உடலில் அமிலங்களின் அளவை சரியான நிலையில் வைக்கிறது. இத்தகைய வேலையை அது சரியாக செய்ய முடியாத நிலையை தான் சிறுநீரகங்கள் செயலிழப்பது என்கிறோம்.

சிறுநீரகங்களின் செயலிழப்பை எப்படி கண்டுபிடிப்பது? 

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

இரத்தத்தில் இருக்கக்கூடிய கிரியேட்டினைனின் அளவையும் மற்றும் யூரியாவின் அளவையும் கொண்டுதான் சிறுநீரகத்தின் செயல் திறனை கண்டறிய உதவுகிறது. அவற்றின் அளவுகளானது கூடிவிட்டாலோ அல்லது மேலே சொன்ன இரசாயனப்பொருளின் அளவுகளாது 1.6 மி.கி/டெ. லி ஆக இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடானது சரியான முறையில் இல்லை என்று அர்த்தம். 

நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகம் மட்டும் செயலிழந்து போகும் நிலையை முழு சிறுநீரக செயலிழப்பு என்று கூற முடியுமா?

இல்லை என்றுதான் கூறவேண்டும்...!

நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகத்தில் ஒன்னே ஒன்னு மட்டும் செயலிழந்து போனால் ஒட்டு மொத்தமாக சிறுநீரக செயல்பாட்டை இழந்துவிட்டதென்று அர்த்தமில்லை ஏனென்றால் ஒன்று செயல்பாட்டை இழந்துவிட்டால் மற்றன்று ஆரோக்கியத்துடன் இருப்பதால் இரண்டு சிறுநீரகங்களின் ஒட்டு மொத்த வேலையையும் அது ஒன்றே செய்து வருகிறது. 

சிறுநீரக செயலிழப்பானது இரண்டு வகைகள் உண்டு. 

  • கடுமையான சிறுநீரக செயலிழப்பும் (Acute kidney failure)
  • நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பும் (chronic kidney disease)

கடுமையான சிறுநீரக செயலிழப்பு 

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

இவ்வாறான செயலிழப்பில் சிறுநீரகங்களின் செயலானது மிகவும் குறைந்த காலத்திற்கே இழக்கப்படுகிறது. இது பல்வேறு காரணங்களினாலும், நமது உடலில் ஏற்படும் பலவித தாக்கங்களினாலும் இந்த செயலிழப்பானது ஏற்படுகிறது. இந்த மாதிரியான சிறுநீரக செயலிழப்பு பெரும்பாலும் தாற்காலிகமானதாக மட்டும் இருக்கிறது. இதற்கு முறையான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களானது வெகு சீக்கிரத்தில் இயல்பான நிலைக்குத் திரும்பி விடுகின்றன.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு 

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

இச்செயலிழப்பானது பல மாதங்களுக்கு,  தொடர்ந்து மோசமாகிக் கொண்டு, இயல்பு நிலைக்குத் திருப்ப முடியாதவாறு சிறுநீரகங்கள் செயலிழப்பதற்குத்தான் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்று பெயர். இதனை CRF என்று சொல்லுவர். 

குணப்படுத்தவே முடியாத இந்த சிறுநீரக நோயின் தாக்குதலால் சிறுநீரகத்தின் செயல்பாடானது மெல்ல மெல்லக் குறைந்து கொட்டே வரும். சிறிது நாட்களுக்குப் பிறகு இரண்டு சிறுநீரகங்கள் முற்றிலுமாக செயலிழக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கும். இந்த முற்றிய நிலைக்கு தான் முடிவு நிலை என்று கூறுவார்கள் அதாவது சிறுநீரக நோய் (End stage kidney disease (ESKD)) என்று சொல்லுவர்.

இதுவரை நாம் சிறுநீரக செயலிழப்பு வகைகளை பற்றி பார்த்தோம் இதற்குமேல் அதன் வகைகளின் தன்மையைப் பற்றி பார்ப்போம் வாங்க...

கடுமையான சிறுநீரக செயலிழப்பு

கடுமையான சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?

இவ்வகை சிறுநீரக நோயின் தாக்குதலால், சிறுநீரகங்களின் செயல்திறன் குறைதலோ அல்லது முற்றிலும் சிறுநீரக செயலிழப்போ வெகு குறைந்த காலத்திற்குள் அதாவது ஒரு சில மணி நேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்குள் ஏற்பட்டு விடுகிறது. இவ்வகை செயலிழப்பு தாற்காலிகமானதும் மற்றும் சாதாரண நிலைக்கு திரும்பக் கூடியதுமான ஒரு நோயாகும்.

கடுமையான சிறுநீரக செயலிழப்பு எப்படி ஏற்படுகிறது? 

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

இது பல காரணங்களினால் உருவாகலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

மிக முக்கியமான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்தம் குறைதல். 

2. வயிற்றுப் போக்கினால் உடலில் கடுமையாக நீர்வற்றிப் போதல்.

3. கடுமையான நோய்த்தொற்று மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயுறுதல்.

4. சிறுநீர் கழிப்பதில் திடீரென்று தடங்கல் ஏற்படுதல். இது பெரும்பாலும் சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கல்லே அதாவது அடைப்பானது இதற்குக் முக்கிய காரணமாக இருக்கும்.

5. இதுமட்டுமின்றி மற்ற காரணங்களும் உண்டு அதாவது 

* ஃபால்ஸிபாரம் மலேரியா,

* லெப்டோபைரோஸிஸ், 

* பாம்புக்கடி, போன்றவைகளாலும்

* குறிப்பிட்ட சிறுநீரக நோய்கள், 

* கர்ப்ப கால சிக்கல்கள் மற்றும் 

* சில மருந்துகளின் பக்க விளைவுகளினாலும் இம்மாதிரியான நோய் ஏற்படுகிறது.

கடுமையான சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் 

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

இந்நோயானது தாக்கும்போது, சிறுநீரகத்தின் செயல்பாடானது மிகவும் குறுகிய காலத்திலேயே மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. இதன் காரணமாக நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அப்படியே அதிகமாகி பிறகு உடலிலேயே தங்கி விடுகின்றன. இதன் காரணமாக உடலில் இருக்கும் திரவங்களில் சமநிலையானது கெடுகிறது. இதனால் இரண்டு சிறுநீரகங்களும் திடீரென்று செயலிழக்கின்றன. ஆகவே இதனால் அறிகுறிகளும் மற்றும் குறிப்பான சில தடயங்களும் சற்று விரைவில் உருவாகின்றன.

இந்த பாதிப்பின் தீவிரமானது ஒரு நோயாளிக்கும் மற்றவருக்கும் கொஞ்சம் வேறுபட்ட நிலைகளில் இருக்கும்.

அதாவது இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் இந்த நோயானது அறிகுறிகளை காட்டும். எவ்வாறு அறிகுறிகளால் இவைகள் தென்படுகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 

* வயிற்றுப் போக்கு, 

* இரத்தம் இழப்பு, 

* காய்ச்சல், 

* உடல் சில்லிட்டுப் போதல்

*சிறுநீர் குறைவாகப் போக ஆரம்பித்தல். (ஒரு சிலருக்கு சாதாரண நிலையில் இருக்கும்.)

* திரவங்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுவதால், தோள் பட்டை அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படுதல்.

* பசியின்மை, 

* வாந்தி, 

* விக்கல், 

* உடல் அசதி, 

* சோம்பல், 

* மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுதல் 

இவ்வாறான நிலைகளில் ஒவ்வொருவருக்கும் இந்த நோயின் அறிகுறிகள் தென்படும். 

இந்நிலையில் யாரும் நோயினை கண்டறிய மாட்டார்கள் இது எப்போதும் போல நமது உடலில் வரக்கூடிய சாதாரண நிகழ்வுகள் என்று அசால்டாக நாம் இருந்துவிடுவோம் இதனைத் தவிர மேலும் மிகவும் மோசமான சில அறிகுறிகளும் இருக்கு.

மிக மோசமான அறிகுறிகள் 

சிறுநீரக செயலிழப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் பல சுவாரசியமான தகவல்கள்

* மூச்சுத் திணறல், 

* மார்பில் வலி, 

* நடுக்கங்கள் அல்லது நினைவிழத்தல்,

* இரத்தமாக வாந்தி எடுத்தல்,  

* சீரற்ற இதயத் துடிப்புக்கள் (இந்நிகழ்வு நமது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் வருகிறது)

இவை அனைத்தும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு காரணமாக இருக்கும் அறிகுறிகளாகும்.

இந்த நோயானது தாக்கப்படும் போது ஆரம்ப காலத்தில், ஒரு சில நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாது.  அவ்வாறான நோயாளிகளுக்கு எப்போது தெரியவரும் என்றால் வழக்கமான இரத்த பரிசோதனைகள் செய்யும் பொழுது தான் தெரியவரும். 

இதனைத் தொடர்ந்து நாளைய பதிவில் இந்நோயினை எவ்வாறு கண்டறிந்து அதனை சரி செய்வது பற்றியும் மேலும் நாள்பட்ட சிறுநீரக நோயைப் பற்றியும் தெளிவாக பார்ப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் உங்கள்

SMART INFO WORLD 

                                              நன்றி





இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE

0 Comments