அடேங்கப்பா வியர்வைக்குள் இவ்வளவு மர்மமா...!
இந்த வியர்வையானது, நன்பர்கள் மற்றும் உறவினர்களின் வட்டாரத்தை பிரித்து மனச்சங்கடங்களை ஏற்படுத்துவது சமூக நிகழ்வுகளில் சாதாரணமானது.
உதாரணத்திற்கு
- ‘அடேய் என்னடா உன் மேல ஒரே வியர்வை நாற்றம்...!’
- ‘உன்கிட்டே வந்தாலே பொண வாடை அடிக்குதுடா...!’
- ‘நீ குளிச்சியா இல்லையா குளிச்சி எத்தனை மாசம் இருக்கும்...!’ என்பது போன்ற நண்பர்களின் கிண்டலும்..
- ‘ஏங்க...! என்னாங்க எப்ப பாத்தாலும் உங்க மேல வியர்வை வாடை வீசுது!
ஏதாவது தோல் டாக்டரை போய் பாருங்க மொதல..!’ என்பது போன்ற மனைவியின் கோபமும் பல இடங்களில் ஒலிக்கிறது.
இந்த வியர்வையானது, நன்பர்கள் மற்றும் உறவினர்களின் வட்டாரத்தை பிரித்து மனச்சங்கடங்களை ஏற்படுத்துவது சமூக நிகழ்வுகளில் சாதாரணமானது. அதைப்பற்றி நன்கு அறிந்துகொள்வோம் வாங்க.
நமது உடலில் மொத்தம் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, உடல் முழுவதும் காணப்படும் வியர்வை சுரப்பிகள். அது வியர்வை மட்டும் தான் சுரக்கும். மற்றொன்று தலை, அக்குள், மர்ம உறுப்புகள் (ஆண்குறி, பெண்குறி) போன்ற இடங்களில் மட்டும் சுரக்கும். இந்த வியர்வை சுரப்பிகள், உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளுடன் சேர்ந்து மயிர்கால் வழியாக வியர்வையை சுரக்கின்றன.
நம் உடலின் வெப்ப நிலையை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள வியர்வை உதவுகிறது. அது மட்டுமல்லாமல் உடலில் உருவாகும் கழிவு பொருட்களை சிறுநீரகத்திற்கு சக நன்பனாக கைகோர்த்து கழிவுகளை வெளியேற்றுகிறது. வியர்வையின் வழியாக தாது உப்புகள் மற்றும் உடலில் உள்ள நச்சுகள் போன்றவை வெளியேற்றப்படும். வியர்வையானது வெயிலில் காயும்போது நமது தோலில் மற்றும் சட்டையில் வெண்மை நிறத்தில் உப்பு படர்வதை நாம் அனைவரும் உணரலாம்.
வியர்வையின் பணிகளை ஆளுமை செய்வது நமது உடலின் மாஸ்டரான மூளையும், நரம்புகளும் தான். எனவே ஒவ்வொருவரின் உடலின் இயக்கத்தை மையமாக மற்றும் மனதை மையமாக கொண்டும் வியர்வையானது சுரக்கிறது. வியர்வையின் தன்மையானது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒரு சிலர் சிறிய வேலை செய்தாலே போதும் அவர்களுக்கு அதிகம் வேர்த்து விடும். காரணம் அவர்களின் மனதில் அதிக பயம் ஏற்படுவதால் அவர்கள் வியர்வையில் குளித்துவிடுகிரார்கள். ஒரு சிலர் தனக்கு வியர்வையே வராது என்று கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு முகத்தில், தலையில், மார்பில், மற்றும் உள்ளங்கால்களில் மட்டும் அளவுக்கு அதிகமாக வியர்வை சுரக்கும். அதிலும் மாணவர்களில் சிலருக்கு உள்ளங்கையில் வியர்வை அதிகமாகி, அவர்கள் தேர்வு எழுதும்போது மிகவும் அவஸ்தைப்படுகிறார்கள். அதனால் விடைத்தாள்கள் அனைத்தும் கூட நனைந்துவிடலாம்.
பொதுவாக நம்மில் பலர் வியர்வையின் வாடையை சகித்துக் கொள்ளவார்கள் ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வியர்வை துர்நாற்றமடிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணம் சருமத்தில் இருக்கும் நோய் நுண்கிருமிகள் மற்றும் உடலில் உள்ள நோய்களை குறிப்பிடும் தன்மையே. உதாரணத்திற்கு ஒருவர் காய்ச்சலில் படுத்திருக்கும் போது அவரின் உடலில் தோன்றும் வாடையானது, அவரது உடலில் உள்ள நோய்கிருமிகளின் கழிவுகளை வெளியேற்றம் அடையச் செய்து மேலும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
உடலானது வெப்பமாக இருக்கும் போது நமது உடலில் வியர்வை வாடை அதிகமாக இருந்தால் நாமே தெரிந்து கொள்ளலாம் அது காய்ச்சல் என்று.
நாம் குடிக்கும் நீருக்கு எப்படி நிறமில்லையோ அதுபோல நம் வியர்வைக்கும் நிறமில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வியர்வை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அக்குள், மர்ம உறுப்புகளில் சுரப்பது அதன் தனித்தன்மையை காட்டுகிறது. ஒரு சிலருக்கு அணியும் துணிகள், மற்றும் உள்ளாடைகள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு அவர்களின் வியர்வையே காரணமாக இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு வித்தியாசமாக ஒரு பகுதியில் மட்டும் வியர்வை ஏற்படும்.
உள்ளங்கை வியர்வையைக்கு சிகிச்சை |
பொதுவாக நமக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வெளியேறும் வியர்வையானது ‘சூடாக’ இருக்கும். அதுவே மனப் பயம், மயக்கம் ஏற்படும்போது வியர்வையாது ‘குளிர்ச்சியாக’ இருக்கும். அதுவும் ஒரு நபர் மரண படுக்கையில் படுத்திருக்கும் போது அவரது சருமம் ‘களிமண்’ போல காட்சியளித்து, குளிர்ந்த வியர்வை அரும்புகள் தோலின் வெளியே தென்படும். அப்படி தென்பட்டால் அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அறிவுறுத்தும்.
தூங்கும் போது ஒருவருக்கு வியர்வை ஏற்பட்டால் அது அவர்களின் உடல் இயக்க கோளாறுகளை பிரதிபலிக்கும். உடல் இயக்க கோளாறு என்பது உடல் பருமன்
- ரத்த கொதிப்பு
- நீரிழிவு நோய்கள்
போன்றவை இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூங்கும் போது அதிக அளவில் வியர்வை ஏற்படலாம்.
அக்குள் மற்றும் மர்ம உறுப்புகளில் தோன்றும் எண்ணெய் பசையுடன் வரக்கூடிய வியர்வையானது ஆண், பெண் இருபாலருக்கும் பால் உணர்வை தூண்டும் சக்தியை கோண்டது. இது போன்ற நிகழ்வுகள் விலங்கினங்களில் அதிகமாக இருக்கும். மனிதனும் ஓர் விலங்கு என்பதை நாம் அறிந்ததே...! இதன் அடிப்படையில்தான் ஆண், பெண் இருபாலருக்கும் தேவையான பிரத்யேக வாசனை திரவியங்கள் பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதை பல்வேறு விளம்பரங்களில் பார்க்கலாம்.
நமது உடலின் இயக்கமானது சீராக இருக்கிறது என்பதை அரிய வைப்பது ‘பசி’ என்னும் உணர்வுதான். இதனை காரணம் காட்டிதான் ‘பசி நன்றாக எடுக்க்கிறதா?’ என்று மருத்துவர்கள் கேட்பார்கள். அதுமட்டுமல்லாமல் அது தொடர்புடைய இதர கேள்விகளையும் கேட்பார்கள். ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டுமே ‘உங்களுக்கு வியர்வை அதிகமாக வருகிறதா?’ என்ற கூடுதல் கேள்வியை கேட்பார்கள். இதன் மூலமாக அவர்கள் முழுமையாக வியர்வையின் தன்மைகளை கேட்டறிந்து, உடலின் இயக்கம் பற்றி முழுமையாக அறிந்துகொள்கிறார்கள்...!
இதனால் தான் டாக்டர்ரிடம் பொய் சொல்ல கூடாது என்று கூறுவார்கள்.
இன்னும் ஒரு சிலர் ‘என் உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறது...’ என்று குறிப்பிடுவது நமக்கு வேடிக்கையாக தோன்றும். ஆனால் அது வேடிக்கை அல்ல அதற்கு பலவிதமான அர்த்தங்கள் உண்டு என்பதை மறவாதீர்கள். என்ன அர்த்தம் என்று யோசிக்கிரீங்கலா...!
அது ஒன்றும் இல்லை அவர்கள் இயல்பாக நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் காரணமாக எப்போதும் துருதுருவென்று இருப்பார்கள். மேலும் அவர்களின் சிந்தனைகள் விறுவிறுப்பாக இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லலும்னா அவர்கள் ஏதாவது சாதிக்க துடிப்பார்கள். இதுவே அவர்களின் உடல் சூடாக வைத்திருக்க முக்கிய காரணம். நல்லா யோசித்து பார்த்தால் உங்களுக்கே உண்மை என்னவென்று புரியும்.
இன்னும் சிலர் எப்போதும் என் உடம்பு குளிர்ந்த நிலையிலேயே இருக்கு என்னான்னு தெரியலனு புலம்பி நாம் கேட்டிருப்போம். ‘குளிர்ந்த உடம்பு’ என்று குறிப்பிட்டு சொல்கிறவர்கள் ‘ஏனோ தானோ’ என்று அசால்டாக இருப்பார்கள். செய்கின்ற பணியை முழுமைப்படுத்தாமல் தவிப்பார்கள். இதுபோன்ற வித்தியாசமான கருத்துகளுக்கு ஹோமியோபதி மருத்துவர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் தாகம், தூக்கம் மற்றும் பிற உடல் சார்ந்த குறிகளுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். எனவே இது போல நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஒரு பதினைந்து வயது மாணவனுக்கு முகத்திலும், கைகளினின் பின்பகுதி அதாவது புறங்கை பகுதியில் ஏற்பட்ட மருக்கள் சரியாக ஹோமியோபதி சிகிச்சையை பெற அணுகி வருகிறார்கள். மேலும் அவர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் அதிகமாக வியர்ப்பதையும் சரி செய்யவும் ஹோமியோபதியை அனுகுகிறார்களாம். குறிப்பாக அவர்கள் கூறுவது என்னவென்றால் “தேர்வு எழுதும்போது கையில் கைக்குட்டை வைத்து, துடைத்துக் கொண்டுதான் தேர்வை எழுதுவேன், இல்லையென்றால் என் விடைத்தாள்கள் நனைந்துவிடும். எனது தனித்திறமையை காட்ட முடியாமல் நான் வியர்வையால் தவிக்கிறேன்” என்று பலரும் புலம்பியவாரே உள்ளனராம். ஏன் எனக்கும் அப்படி தான். உங்களில் எத்தனை பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது என்று கமெட்ல சொல்லுங்கள்.
30 வயது பெண் சிகிச்சைக்கு சென்றபோது அவர்கள் கூறிதை சற்று பார்ப்போம்.
ஒரு 30 வயது பெண்மணிக்கு மாதவிடாய் கோளாறு. அவருக்கு கர்ப்ப பையில் கட்டிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் மருத்துவ ஆலோசனையை பெற சென்றிருந்த போது அவரின் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது. அதனால் அப்பெண் பெரும் அவதிப்படுவதாக கூறினார். தனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகுவதாகவும், விவாகரத்து பெறுவதற்க்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார் அந்த பெண்.
இதையெல்லாம் ஏன் இப்பொது நீ சொல்லிக்கிட்டு இருக்கனு நீங்க நினைக்கலாம். அப்பெண்ணிற்க்கு வியர்வையால் விவாகரத்து வரைக்கும் போயிருக்காங்கல அதான் இந்த சின்ன கதை முழுவதையும் படிங்க.
வியர்வையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சில ஹோமியோபதி மருந்துகள் அவரது மாதவிடாய் கோளாறுகளை சீராக்கியது. மேலும் கார்ப்பபையிலிருந்த கட்டிகளும் மறைந்தது. அதுமட்டுமல்லாமல் அப்பெண்ணின் உடலில் வியர்வையின் தன்மையும் மாறிவிட்டது மற்றும் மன நலத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. இதிலிருந்து நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் நமது உடல்குறிகள் மற்றும் மனக்குறிகள் அடிப்படையில் மருந்துகள் வழங்கினால் முழுமையான குணம் கிடைக்கும். இது ஹோமியோபதி மருத்துவத்தின் தனிச்சிறப்பு என்று அப்பெண் கூறுகிறார்.
நோய் ஒன்று உடலில் மெதுவாக தோன்றும் போது, நம் உடலின் மைய இயக்கங்களான
- பசி,
- தாகம்,
- மலம்,
- சிறுநீர்,
- வியர்வை
போன்றவைகளில் பல மாற்றத்தை கொடுக்க மூளையானது பிறப்பிக்கின்ற உத்தரவுகளால் மனித உடலில் பல அறிகுறிகளாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தோன்றும். அதே போல மன அளவில்
- கோபம்,
- தாபம்
என பல மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தும். இதற்க்கு ஹோமியோபதி சிகிச்சையில் முக்கியத்துவம் அளிக்கக் காரணம் என்னவென்றால் உடலானது தன்னைத்தானே தாயாராக்கிக் கொண்டு நோயை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றலை உடலில் ஏற்படுத்தத்தான். இதுவே முழுமையாக குணம் அளிக்கும். இது பல்வேறு நோய்களுக்கும் பொருந்தும்.



0 Comments