கண்ணீர் விட்டு கதறிய சிம்பு...உங்களுக்கு காரணம் தெரியுமா...?
வரேன் திரும்ப வரேன்...!
எனக்கா ரெட் கார்டு...!
எடுத்துபார் ரெக்கார்டு...!
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு (STR) தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சின்னஞ்சிறு வயதிலிருந்தே தன்னுடைய அப்பாவின் உதவியால் கடும் உழைப்புடன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு நடுவில் சில பல வருடங்கள் உடல் எடையினால் பருத்து அதிகரித்து காணப்பட்டார். இதனால் சிம்புவுக்கு சினிமாவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் சிம்புவின் உடல் எடை குறித்து பல்வேறு விதமான விமர்சனங்களும் எழுந்தது.
அதன் பிறகு சில பல மாதங்களாக சிம்பு எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் தனது உடல் எடையை குறைப்பதில் மட்டும் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார். அதன் பலனாக அவர் தன்னுடைய உடல் எடையை பாதிக்கு மேல் குறைத்து மிகவும் இளமையாக மாறினார். உருண்டையா பந்து மாதிரி இருந்த சிம்புவை திடீரென இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்த அனைவருக்கும் பெருத்த ஆச்சரியமும், வியப்பும் ஏற்பட்டது.
வந்துடேனு சோல்லு திரும்ப வந்துடேனு சோல்லு
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய சிம்புவுக்கு அனைவரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் எப்ப தலைவா கம்பேக் என்று பல்வேறு விதமான பதிவுகளை சோசியல் மீடியாவில் பதிவு செய்தவாறு இருந்தனர்.
ஆனால் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அவர் இந்த உடல் எடையை மிகவும் சாதாரணமாக குறைத்துவிடவில்லை. மாறாக அவர் தன்னுடைய பெருத்த உடலை குறைக்க பல கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
சிம்பு மேற்கொண்ட உடற்பயிற்சி
அதாவது சிம்பு மேற்கொண்ட உடற்பயிற்சிகள் எதுவென பார்ப்போம் வாங்க....!
01.பாஸ்கெட் பால்,
02.பேட்மிட்டன்,
03.டென்னிஸ்,
04.கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் மூலமும், 05.ஜிம்மில் பல மணி நேரம் வொர்க் அவுட்டும் செய்துள்ளார்.
இதுதவிர
06.ரன்னிங்,
07.களரி,
08.யோகா,
09.பரதநாட்டியம்,
10.மசாஜ்
போன்றவைகளையும் அவர் செய்துள்ளார்.
அதோடுமட்டுமல்லாமல் சில ஆயுர்வேத உணவுப் பழக்கங்களையும் சிம்பு மேற்கொண்டு வந்ததால் கிட்டத்தட்ட தன்னுடைய உடலின் எடையிலிருந்து 30 கிலோ வரை அவர் குறைத்துள்ளார். சிம்புவா இது சூட்டிங் ஸ்பாட்க்கே ஒழுங்கா வரமாட்டாரே எப்படிபா இப்படி...? என்று சினிமா வட்டாரங்களில் ஒவ்வொருவரும் சிம்பு உடல் எடையை குறைப்பதற்கு இந்தளவு கஷ்டப்பட்டிருப்பது அனைவரையும் அதிகளவு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவருடைய இந்த கஷ்டத்துக்கு பலனாகத்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் 100 கோடி வரை வசூலித்து பாஃஸ் ஆஃபீஸில் வசூல் சாதனையை படைத்தது. மீண்டும் புத்துணர்வுடன் எந்த ஒரு ரெட்கார்டும் இல்லாமல் நடிக்க ஆரம்பித்துள்ள சிம்பு தமிழ் சினிமாவில் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.



0 Comments