பெண்கள் ஆண்களைப் பற்றி நினைப்பார்களா..?

பெண்கள் ஆண்களைப் பற்றி நினைப்பார்களா..?


பெண்கள் ஆண்களைப் பற்றி நினைப்பார்களா..?

ஒரு கணம் ஒரு போதும் பிரிய கூடாதே என்னுயிரே என் உயிரே நீ பிரியகூடாதேனு பலவிதமான காதல் பாட்டுகளை நாம் கேட்டிருப்போம்... அதிலும் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக பெண்களை பற்றின நினைப்பில் இருப்பார்கள்... உதாரணத்திற்கு SJ சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் வரும் சீனை கற்பனை செய்து கொள்ளுங்கள்.... 

அதாவது ஆண்களை போல பெண்கள் எப்போதும் ஆடவர்களை பற்றி நினைப்பார்களா என்பது குறித்து இன்றைய தொகுப்பில் எனக்கு வந்த பதில்களை பற்றி பார்ப்போம்...

மிகவும் சுவாரசியமான கேள்வியல்லவா...!

உங்களுக்கும் என்னை போல ஆர்வம் இருந்தால் உடனே இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள்...

கேள்வி: பெண்கள் ஆண்களைப் பற்றி நினைப்பார்களா..?

பதில் 1

ஆண்கள் பெண்களைப் பற்றி நினைக்கும் அளவுக்கு பெண்கள் ஆண்களை பற்றி நினைக்கமாட்டார்கள். ஆணுக்கு எதிர்பாலின ஈர்ப்பு ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.

ஆண் காற்றை சுவாசிப்பது போல் எப்பொழுதும் பெண்கள் மீது நாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பெண்ணுக்கு ஆண் தண்ணீரைப்போல தாகம் எடுக்கும் பொழுது மட்டும் தான் தேவைப்படும்.

எல்லா நேரங்களிலும் ஆணைப்பற்றி சிந்தித்து கொண்டிருக்கமாட்டார்கள். ஆணுக்கு கலவியை விட மிகப்பெரிய சந்தோஷம் வேறு எவற்றாலும் தரமுடியாது. பெண்ணுக்கு எது மிகப்பெரிய பேரானந்தத்தைக்கொடுக்கும் என்று இன்று வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.அது இன்னும் மர்மமாகவே உள்ளது.

ஒரு பூவில் உள்ள தேனை ருசிக்க ஆயிரம் தேனீக்கள் ரீங்காரமிடும். பூவோ தேனீக்களுக்காக பெரிதாக ஏங்கிக் கெடக்காது.

பதில் 2

பெண்கள் என்ன வேற்றுக்கிரக வாசிகளா..?

ஆண்களை நினைக்காமல் இருப்பதற்கு..! 

அவர்களும் மனித இனத்தவர்கள்தானே..! 

ஆண்களுக்குரிய சகல உணர்வுகளும் அவர்களுக்கு இருக்கும். விதிவிலக்குகள் நீங்கலாக, கூடுதலாகச் சில பொறுப்புணர்வுகளும், பாதுகாப்பு சார்ந்த சுய கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு இருக்கும் (எ.கா: தாய்மை, குடும்ப மேலாண்மை நிர்வாகம்). மற்றபடி பெண்களும், ஆண்களை நினைக்கவே செய்வார்கள்.

அவர்கள், ஆண்களை எப்படி, எந்தவகையில் நினைக்கிறார்கள்? என்பது, அவரவருடைய விருப்பு, வெறுப்புகள், வாழ்வியல் சூழல்கள் சார்ந்து அமையும். பெரிய வேறுபாடு என்னவென்றால், ஆண்கள் பெண்களை நினைப்பதை, எளிதாகக் கணிக்க முடியும். ஆனால், பெண்கள் ஆண்களை நினைப்பதை, அவ்வளவு எளிதாகக் கணிக்க முடியாது (விதிவிலக்குகள் நீங்கலாக).

பெண்கள், ஆண்களையே நினைக்கக்கூடாது என்பது கண்டிக்கத்தக்க, மூடப்பழமைவாதம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எதிர்பாலினரை நினைக்கின்ற விதத்தைப் பொறுத்துதான் சரியும், தவறும் அமையும்.

நான் கேட்ட இந்த கேள்விக்கு எனக்கு வந்த பதில்களை இங்கு நான் கூறியிருக்கிறேன் உங்களிடம் பல பதில்கள் இருக்கலாம் உங்களது கருத்துக்கள் என்னவென்று மறக்காமல் கமெண்டில் கூறுங்கள்...

கேள்வி: பெண்கள் ஆண்களைப் பற்றி நினைப்பார்களா..?

உங்கள் பதில் என்ன...?

1 Comments