பெண்கள் பின்னால் செல்லாத அல்லது பெண்களை கவர முயற்சிக்காத ஆண்களை ஒரு பெண் எப்படி பார்ப்பார்..?

பெண்கள் பின்னால் செல்லாத அல்லது பெண்களை கவர முயற்சிக்காத ஆண்களை ஒரு பெண் எப்படி பார்ப்பார்..?

பெண்கள் பின்னால் செல்லாத அல்லது பெண்களை கவர முயற்சிக்காத ஆண்களை ஒரு பெண் எப்படி பார்ப்பார்..?


பதில் 1

கேள்வி: பெண்கள் பின்னால் செல்லாத அல்லது பெண்களை கவர முயற்சிக்காத ஆண்களை ஒரு பெண் எப்படி பார்ப்பார்..?


குறைஞ்ச பட்சம் இரண்டு அக்கா தங்கச்சி கூட பிறந்திருப்பான் போலையே இந்த பையன். அப்படினு தான் முதலில் தோன்றும். பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேல் சகோதரிகளுடன் பிறந்த ஆண்கள் பெண்களை கவர முயற்சிப்பது இல்லை. அதனால் பெரும்பாலும் பெண்களை கவர்ந்து இழுக்க முயற்சிக்காத ஆண்கள் மீது ஒரு மரியாதை கூடும். 

மாலில் நின்று மாங்கு மாங்குனு கண்விழி பிதுங்க பார்க்குமே ஒரு நண்பர்கள் கூட்டம். அந்த கூட்டத்தை பார்த்தாலே தெரியும் பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சிட்டு வந்த கூட்டம்னு. ஆனால் அந்த கூட்டத்திலும் ஒரு அம்மாஞ்சி பையன் பொண்ணுங்கள பார்த்தாலே பாவம் என்பது போல் நிற்பான் பாருங்க. உண்மையிலே அந்த அம்மாஞ்சி பையன்கிட்ட மட்டும் தான் பேசனும்னே தோணும். அவர்கள் தான் பெண்களின் கண்களை தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள்.

சிலர் ஓவரா சீனை போடுவாங்க. பொண்ணுங்க என்றாலே இவர்களுக்கு எதிரணி என்பது போல். கொஞ்சம் கூட கண்டுக்காம ரூடா இருப்பாங்க. பெண்கள் போய் பேசினாலே யாருகிட்டையோ பேசுற மாதிரி பதில் சொல்வது, அவர்களை பார்த்தால் கொஞ்சம் கூட முதிர்ச்சியே இல்லனு தோணும். இந்த ரக ஆண்களும் பெண்களை கவர்ந்திழுக்க கூடாது, தான் தான் பெரிய ஹீரோ என்ற மெதப்பிலே சுத்திட்டு வருவாங்க. இவர்கள் மீது கொஞ்சம் கூட நல்லெண்ணம் வருவதில்லை. ஓவர் சீன் போடும் இந்த ரக ஆட்களை பார்த்தால், போடா டேய்னு தான் தோணும்.

சிலபேர் இருக்காங்க. சமூக நலனில் ரொம்பவே அக்கரை இருக்கும். சமூகத்திற்காக ஏதாவது செஞ்சிட்டே இருப்பாங்க. ரத்த தானம் கேம்ப் நடத்துவது, ஊர் குளத்தை தூர் வாருவதுனு எதையாவது செய்வார்கள். இந்த ரக ஆண்களும் பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்று எதையும் மெனக்கெட்டு செய்ய மாட்டாங்க. ஆனால் பெண்களை மதிப்பார்கள். இவர்களை எல்லாம் பார்த்தால் இன்னொரு முறை நம்மளை கிராஸ் பண்ணி போக மாட்டாங்களா என்றே நினைக்க தோன்றும்.

சில பேர் பொண்ணுங்க பக்கமே திரும்ப மாட்டாங்க. அநியாயத்துக்கு நல்லவன்னு பெயர் வேற வாங்கி வச்சிருப்பாங்க. இவர்களுக்கு இந்த உலகில் பெண் என்ற இனம் இருக்கிறது என்பது கூட நினைவில் இருக்குமானு தெரியாது. சரிடா, நீ சாமியாராவே ஆகுடா. என் ஆஸ்ரமத்துல ஆண்களை தவிர எவருக்கும் இடம் இல்லைனு போர்ட் ஒன்னு மாட்டி தொங்க விட்ருப்பா. நல்லா இரு நல்லா இரு. போ போய்கிட்டே இரு என் கண்ணு முன்னாடி நிற்காத என்றே சொல்ல தோன்றும் இந்த ரக ஆண்களை பார்த்தால்.

சில ஆண்கள் இருக்காங்க. இவர்களும் பெண்களை கவர்ந்திழுக்க ஏதும் பண்ண மாட்டாங்க. ஆண்களுடனே தங்கள் காலத்தை கழிப்பார்கள். அவர்களுக்கு ஓர் பாலின ஈர்ப்பாக இருக்கலாம். ஓகே ரைட்டுப்பா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கட்டும் என்றே எண்ண தோன்றும். அதிலும் பாவக்கதைகளில் அந்த தங்கமே எபிசோட் பார்த்த பிறகு இவர்கள் மீது பாசம் எக்கச்சக்கமா கூடிட்டு. கண்டிப்பா பாருங்க அந்த எபிசோட், சமூகத்தில் நம்முடனே வாழ்ந்து நிராகரிப்பை மட்டுமே அனுபவிக்கும் இவர்களின் மீதான நமது பார்வை மாறும்.


சில பேர் இருக்காய்ங்க பாருங்க. பெண்களுக்கும் அவிங்களுக்கும் எந்த காலத்து வாய்க்கா தகராறோ தெரியாது. ஒரு புள்ள பேச போனாலே, இந்தாரு அடிச்சேனு வச்சிக்கேயவேன் ஆறடி அங்குட்டாம போய் விழுவனே லந்து பேசிட்டு திரிவாய்ங்க. இவங்கள எல்லாம் போலிஸ் திருட்டு கேஸ்ல பிடிச்சி டிரவுசரோட உட்கார வச்சி போட்டோ எடுத்து பேப்பர்ல போட்டு விடனும் இறைவானு வேண்டுதல் செய்ய தான் தோணும். பின்ன என்னங்க? பொம்பள புள்ள பேச போனாலே கல்லை கையில எடுத்தா இப்படி தான நினைக்க தோணும். (கடவுளே இந்த கேள்வியை பின் தொடரும் அந்த 37 பேரில் ஒருவருக்கும் இந்த நிலமை வராம பார்த்துக்கப்பா.)

இந்த பெண்களை கவர முயற்சிக்காத சங்கத்தின் தலைவரே நான் தாண்டா என்னும் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குற ஒரு கூட்டம் இருக்கு பாருங்க. பார்க்க இத்துனோண்டு நல்லா இருப்பான் அதுக்காக மனசுக்குள்ள தான் தான் க்ரித்திக் ரோஷன் என்ற அளவுக்கு நினைச்சி வச்சிருப்பான். பெண் பிள்ளை தெருவில் நின்று கோலம் போட்டாலே பைக்க அப்டிக்கா வளைஞ்சி ஓட்டிட்டு போவாரு சார். பெண் நிழல் கூட இவர் மேல விழுந்துட கூடாதாமாம் இவனுங்கள எல்லாம் பார்த்தால், உங்களை எல்லாம் கல்யாணம் பண்ணி கஞ்சி ஊத்தாமலே பட்னி போடனும்டா சீனா போடுற சீன் அப்படினு தான்ங்க தோணும்.

இந்த சங்கத்தின் பொருளார் பத்தி தெரியாதே? பெரும்பாலும் இந்த பசங்க அந்த ஒரு நடிகர் மாதிரியே இருப்பாங்க. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன், பெண்கள் இல்லா உலகிற்கு சென்று வாழ விரும்புகிறேனு பேட்டி குடுத்துட்டு பட்டை போட்டு கழுத்தில் ஒரு ருத்ராட்ச கொட்டையும் போட்டுட்டு காவி வேட்டியும் கட்டிட்டு பெண்கள் தாண்டி சென்றாலே சிவ சிவா என்று சொல்லிட்டு இருப்பாங்க. மற்ற எல்லா ரகத்தை விட இந்த ரகம் கொஞ்சம் கூடுதல் சீனா இருக்கும். அநியாயத்துக்கு சீன் போடுவாங்க. சீனாடா போடுற சீன் பெரிய அர்னால்ட் ரேஞ்சுக்கு. இருடா இதே தெருவுல ஒருநாள் இல்ல ஒருநாள் தெரு நாய் உன்னை எலும்புத்துண்டுனு நினைச்சி கவ்விட்டு போகுதா இல்லையானு பாரு. அப்படினு தான் நினைக்க தோணுது எபன் என்று என் தோழிகள் கருத்து சொல்றாங்ய்ங்கப்பா அதனால ஓவர் சீன் போடாம, நான் தான் வருத்தப்படாத வாலிபர் சங்க பொருளாளர் என்ற ரேஞ்சுக்கும் சீன் போடுறத விட்டுட்டு எப்படி பொண்ண மயக்குறதுனு யோசி....

பதிலை சீரியஸாக பார்க்க வேண்டாம். தவறாக எழுதியிருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து ரெண்டு தேன் மிட்டாய் வாங்கி தந்து மன்னித்து விடவும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இந்தத் தொடரில் முக்கியமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் யார் என்றால் 19s கிட்ஸ் தான் அதற்கு ஒரு உதாரணமாக இதை பாருங்களேன்...

ஆரம்ப கால எம்.ஜி.ஆர்., சிவாஜி, படங்களை பார்த்து வளர்ந்த காரணத்தால் என் கணவர் மத்திய வயது பெரியவர்கள் தான் காதலிக்கலாம், கதாநாயகர்கள் அம்மா, தங்கை, குடும்பத்திற்கு தான் முக்கிய இடம் கொடுப்பார்கள், காதல் பற்றிய யோசனை எல்லாம் கதாநாயகிகள் அவர்கள் பின்னால் சுற்றி வந்து கனவு காண ஆரம்பித்த பிறகு தான் வரும் என்று நம்பியதாக சொல்வார். அதனுடைய தாக்கத்தால் பெற்றோராக பார்த்து திருமணம் செய்யும் வரை சமர்த்துப் பிள்ளையாக இருந்ததால் எனக்கு நல்ல கொடுப்பினை என்றே வாழ்கையை ஓட்டிவிட்டனர். அந்த காலத்திய பெற்றோர்களால் தான் இப்பொழுது இருக்கக்கூடிய 90ஸ் என்டு மற்றும் 2kல் சிலர் இவ்வாறாக திரிகிறார்கள்

இந்த கால படங்களில் பெண்களை 'உஷார்' பண்ணுவது பற்றி சின்ன பையன்கள் கூட பேசுவதாக வரும் போது இக்கால இளைஞர்கள் எப்படி பெண்கள் பின்னால் சுற்றுவதைத் தவிர்த்து தாக்கு பிடிக்கிறார்கள், அவர்களைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இளைய தலைமுறை பெண்கள் தான் மேலே சொன்னபடி திரியும் ஆண்களுக்கு ஐடியா தர வேண்டும்....

இந்த கட்டுரையை பற்றி உங்களது கருத்துக்கள் என்னவென்று மறக்காமல் கீழே கமெண்டில் பதிவிடுங்கள், மேலும் இது போல உங்களது கேங்கில் யாரேனும் பசங்க இருந்தால் அவர்களுக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்துங்கள்....

0 Comments