ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணமானாலும் ஆண் மற்ற பெண்கள் மீதும், பெண் மற்ற ஆண்கள் மீதும் ஆசைப்படுவது ஏன்..?

திருமண பந்தம் இறைவன் நிச்சயிப்பது. திருமணத்திற்கு முன் எல்லோருக்கும் வாழ்க்கை துணையை பற்றி நிறைய ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருக்கும். பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்சம் காலம் ஆகும். காதல் திருமணத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வதால் ஆரம்ப காலத்தில் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

பெண்கள் பின்னால் செல்லாத அல்லது பெண்களை கவர முயற்சிக்காத ஆண்களை ஒரு பெண் எப்படி பார்ப்பார்..?

எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தால் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற் போல் வாழ்க்கை துணை அமையவில்லை என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ பார்க்கும் போது அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இது தவறு. திருமண வாழ்க்கை மிகவும் புனிதமான உறவு. எனவே வாழ்க்கை துணையின் குறை நிறைகளை அவர்களிடமே நேரிடையாக தனிமையில் தெரிவித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஆசை படுவது இயல்பு தான் ஏதோ ஒரு வகையில் அதை அனுபவிக்க வேண்டும் என நினைப்பது தவறு, ஆகையால் ஆணோ பெண்ணோ மனமுடித்த பின் அவரவருக்கு உண்மையாய் இருப்பது நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன்...🙏

0 Comments