சுய இன்பத்தால் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை கூற முடியுமா?

சுய இன்பத்தால் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை கூற முடியுமா?


சுய இன்பத்தால் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை கூற முடியுமா?


ஒரு மனிதன் எதிலும் வெற்றி பெற வேண்டும், குறிப்பாக காதலில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

சரியான பதில் என்ன தெரியுமா?

முதலில் நீ உன்னை நீ, காதலிக்க வேண்டும். கண்ணாடியில் உன்னை பார்த்தால் நீ உன்னை முதலில் விரும்ப வேண்டும். நீயே உன்னை காதலிக்காத பொழுது, வேறு ஒரு பெண் எப்படி காதலிப்பாள்?

இதுதான் சரியான விடை. You should love your self first. You should love your body, your every actions, then only others will do! அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களையும் உங்கள் உடலையும் மாற்ற முயற்சி செய்வீர்கள்!

Self Love Self Care இவை செய்வதுதான் வாழ்க்கையில் முன்னேற்றம், என்பது உண்மையானால், காமம் என்பதை நீங்கள் உங்கள் உடலோடு வைத்துக் கொள்வது, எப்படி தவறாகும்?

என் அறிவை ரசிக்க யாருமே இல்லை, என் உடலை ரசிக்க யாருமே இல்லை என்றால் உங்கள் அழகு போய்விடும். நான் எதற்கு அழகாக இருக்கிறேன்?

கண்ணாடியில் என்னை பார்க்கும் போது எனக்கே ஒரு நம்பிக்கை வர வேண்டும். நான் அழகாக இருப்பது எனக்காகத்தான், பக்கத்து வீட்டு பங்கஜகத்துக்காக இல்லை! என்று கண்ணாடியை பார்த்தவுடன் முடிவு செய்யுங்கள். உங்களை பங்கஜம் மட்டுமல்ல, ஊரில் உள்ள அத்தனை பெண்களும் காதலிப்பார்கள்!

Self love, Self care உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவும் என்றால், உங்கள் காம வாழ்க்கை முன்னேற வேண்டும் என்றால், சுய இன்பம் அங்கே அவசியமாகிறது!

இன்னும் சொல்லப்போனால் சுய இன்பம் செய்துவிட்டு, நீங்கள் பெண்களுடன் காமத்தில் ஈடுபடும் பொழுது, ஒரு Control கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே ஒரு, idea அடைந்து விட்டீர்கள்.

சரி சுய இன்பத்தால் என்ன பிரச்சனை?

அது அளவுக்கு மீறும் பொழுது, அது தவறாக முடிகிறது.

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சுதான்! இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறோமா? கேவலமான சினிமாக்கள் பார்க்காமல் இருக்கிறோமே ( நான் சொல்லுவது தமிழ் சினிமா ). தமிழ் சினிமாவை எந்தவித வெட்கமும் இல்லாமல் நாம் பார்க்கும் பொழுது, Porn பார்ப்பது தவறு என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.


இப்பொழுது உள்ள முன்னணி ஹீரோக்கள், ஆபாச படத்தில் அரங்கேறும் அத்தனை விஷயங்களையும் உடையை போட்டுக் கொண்டு செய்கிறார்கள். அதாவது ஆண்கள் மட்டும் உடையை போட்டுக் கொள்வார்கள், கதாநாயகி அரைகுறை உடை போட்டுக் கொண்டிருப்பார். மற்றபடி அது ஒரு P-orn movie போலத்தான் இருக்கும். கேட்டால், ஐட்டம் சாங், குத்து பாட்டு என்று ஏதேதோ காரணம் சொல்லுவார்கள். அதை நாம், தொலைக்காட்சிகளில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கிறோம். கலை என்ற பெயரில் இதை நாம் அங்கீகரிக்கும் பொழுது, சுய இன்பம் கூட ஒரு கலை தான்!

சரி சுய இன்பம், எப்பொழுது உங்களுக்கு தவறாக தோன்றுகிறது ?

அதை நீங்கள் வெளியே செல்லும் போது தான். நீங்கள் வாழ்க்கையில் செய்யும் எல்லாவற்றையும் வெளியே சொல்வது கைவிட வேண்டும். நீங்கள் கைவிட வேண்டியது உங்கள் open loose talks. நீங்கள் சுய இன்பம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன? ஒருவரும் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. அப்புறம் எதற்கு அதைச் சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள்? இன்னும் சொல்ல போனால் உங்கள் மேல் வெறுப்பு தான் வரும்.

நீங்கள் உங்களுடைய உடலை தொட்டு இன்பம் அடைவதற்கு அருவருப்பாக இருக்கிறது என்றால், வேறொரு பெண் வந்து உங்கள் உடலை தொட்டால் தான் அது சாத்தியம் என்றால்,

1. அது ஆண் ஆதிக்கம். எனக்கு இன்பம் தரும் வேலையை நான் செய்ய மாட்டேன், ஒரு பெண் தான் செய்ய வேண்டும் என்பது பெண் அடிமைத்தனம்!

2. திருமணம் செய்து கொண்டு காமம் அடைய வேண்டும் என்றால், அதற்காக ஆண்கள் பெண்கள் பல விஷயங்களை இழக்க வேண்டி இருக்கும். அத்தனை விஷயங்களையும் இழந்து அந்த காமத்தை அடையும் பொழுது, அது வெற்றி அல்ல. கிடைக்கும் இன்பம் பெரிது, ஆனால் நீங்கள் அதற்கு கொடுக்கும் விலை அதிகம். ஆனால் நீங்களே உங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டால், நீங்கள் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். இது ஒரு Control mechanism.

3. இப்பொழுது ஆண்கள் பெண்கள் திருமணத்தை தள்ளிப் போட முக்கியமான காரணம், ( சில சமயம் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் ), திருமணத்தால் வரும் இன்பங்களை விட சிக்கல்கள் தான் அதிகம். ஆனால் ஒரு சின்ன Escape from reality தான் Masturbation. Marraige என்பது அந்த காலத்தில் பால்யா விவாகம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் காலத்திற்கு சுய இன்பம் தேவைப்படவில்லை. பெண் எல்லாவற்றுக்கும் சம்மதம் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் சுய இன்பம் தவறாக இருந்தது. இப்பொழுது பெண் எதற்குமே சம்மதிக்காத போது, குழந்தை திருமணத்தை கைவிட்ட நாம், காமத்தை கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். இப்படி பல கோணங்களில் இதை பார்க்க வேண்டும்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் எல்லாவற்றையும் பற்றி பல கோணங்களில் அலசுவார். அவர் ஒரு முறை குடியைப் பற்றி இப்படி குறிப்பிட்டார் :

" குடி என்பது எப்போது தவறாகிறது? எக்கச்சக்கமான குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்தால், அது உங்களுக்கு மட்டுமல்ல மதுவுக்கு அசிங்கம். உங்களுக்கு சந்தோஷம் தரும் மதுவை அளவோடு அருந்துங்கள். அதன் மூலம் நீங்கள் அதற்கு ஒரு மரியாதை கொடுக்கிறீர்கள். உங்களுக்கு சந்தோஷம் தரும் ஒரு விஷயத்தை, தவறாக அல்லது அதிகமாக செய்து, அந்த விஷயத்தை அவமானப்படுத்துவது எப்படி நியாயம்? மதுவுக்கு மோசமான பெயர் வாங்கி கொடுத்ததுதான், சில மது அருந்துபவர்கள் செய்யும் தவறு!" என்று குறிப்பிடுகிறார்.

இங்கே மதுவுக்கு பதிலாக கை மதுனம் அல்லது சுய இன்பம் என்று மாற்றிப் பாருங்கள். இன்னும் கச்சிதமாக பொருந்தும். அந்தஸ்து இல்லாமல் அதனால் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆண்மகன் வேறு என்ன செய்வான்? ஆன்மீகம் மூலம் அந்த காலத்தில் மனதை திருப்பலாம். ஆனால் இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் தொலைக்காட்சி இன்டர்நெட் மூலம், ஏன் பெண்கள் ரோடில் உடை உடுத்தும் லட்சணமே கூட கண்டிப்பாக அடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்மகனையும் தூண்டிவிடும். அது போன்ற இடங்களில் இதுதான் ஒரே தீர்வு! பெண்களின் சில ஆடை கலாச்சாரம் ஆண்களை கண்டிப்பாக ஒரு வழி செய்கிறது! MEN ARE VISUAL, பார்ப்பதால் ஆணின் மனம் எளிதில் தூண்டப்படும் என்பது அறிவியல் உண்மை! அதுதான் PORN INDUSTRY இன்று உலகில் பில்லியன் கணக்கில் சம்பாதிப்பதற்கு காரணம்!

சுய இன்பம் செய்வதற்காக சட்டம் தண்டிக்காது. ஆனால் சுய இன்பம் செய்யாமல், கட்டுப்படுத்த முடியாமல் பெண்களை தொட்டால் சட்டம் தண்டிக்கும்!

ஒருவர் யாருக்கும் தெரியாமல் திருட்டு செய்கிறார் என்றால், அதை கண்டுபிடித்து தண்டனை வழங்குவார்கள். ஏனென்றால் அது அடுத்தவர்களை பாதிக்கிறது. அதனால் யாருக்கும் தெரியாமல் செய்தால் திருட்டு என்பது ஒரு குற்றம். ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்யும் எல்லாமே குற்றமாகி விடாது!! வெளிநாடுகளில் எடுத்த ஒரு சர்வேயில், அதிகம் படித்தவர்கள் தான், சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது சுய இன்பம் என்பது புத்திசாலித்தனத்தின் உச்சகட்டம் என்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். அது எப்படி செய்ய வேண்டும், எந்த அளவில் செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்யும்போது அது தவறாகாது. இப்பொழுது ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்கிறார்கள். பெண்கள் வேலைக்கு போவது போல், நாகரிக உடை உடுத்துவது போல் பல விஷயங்கள் சாதாரண விஷயமாகி விட்டது. இது நாகரிக முன்னேற்றத்தின் ஒரு அம்சம். வெளியே தெரியாமல் செய்வது Decency, குற்றமல்ல!

குற்ற உணர்ச்சியுடன் நீங்கள் எது செய்தாலும் உங்களுக்கு சந்தோஷம் தராது. சந்தோஷம் தரும் ஒரு விஷயத்தை, கஷ்டம் தரும் விஷயமாக நீங்கள் மாற்றிப் பார்ப்பது தான் எல்லா துன்பத்திற்கும் அடிப்படை காரணம். முதலில் உங்கள் Attitude மாற்றிக் கொள்ளுங்கள். சுய இன்பம் என்பது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு யுக்தி, மற்ற விஷயங்களில் இருந்து கவனங்கள் திசை திரும்பாமல் இருக்க, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஒரு கவசம் என்று கூட சொல்லலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்!

சுவையான ட்ரிவியா தகவல் : இதை படிக்கும் இத்தனை நபர்கள், இதற்கு ஆதரவு வாக்கு கொடுக்காமல் ரகசியமாக படிப்பதிலிருந்து ஏதோ ஒரு பயம் தடை எல்லோரையும் இந்த சுய இன்பம் பற்றி பேசுவதற்கு ஒரு Taboo போல் நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்று நன்கு புரிகிறது. Boys என்ற திரைப்படத்தில் எழுத்தாளர் சுஜாதா அதைப்பற்றி எழுதி காட்சிகள் வைத்த போது, எல்லோரும் டைரக்டர் சங்கரை விட்டு விட்டு சுஜாதாவை கண்டித்தார்கள். எல்லாவற்றையும் எழுதக்கூடாது என்று.

சுஜாதா அதற்கு ஒரு பெரிய நீண்ட விளக்கம் ஆனந்த விகடனில் கொடுத்திருந்தார். அன்று சுஜாதா எழுதியதை போல் நான் இன்று எழுதி இருக்கிறேன். இதைப் படிப்பதற்கு அல்லது ஆதரவு கொடுப்பதற்கு யோசிக்கும் நீங்கள், எனக்கு ஆதரவாக்கு கொடுக்க மாட்டீர்கள். Judge செய்ய தான் மனித மனம் விரும்பும்.முதலில் ஆண்கள் என்றால் தைரியம் வேண்டும்.நீங்கள் feedback கொடுக்காமல் படித்துக் கொண்டிருந்தால், எனக்கு இதைப் பற்றி எல்லாம் எழுத ஆர்வம் வராது. நான் பழையபடி அரசியல் சினிமா என்று எழுத வேண்டும். இந்த பதில் நான் அறிவியல் பூர்வமாக எழுதிய பதில் என்பதை நினைவில் நிறுத்தி, ஆதரவு கொடுங்கள்..!

0 Comments