மூட்டு வலியை இயற்கையாக சரி செய்வது எவ்வாறு? எவரேனும் இயற்கையாக சரி செய்து உள்ளீர்களா? எந்த முறையை பின்பற்றி சரி செய்தீர்கள்?

மூட்டு வலியை இயற்கையாக சரி செய்வது எவ்வாறு? எவரேனும் இயற்கையாக சரி செய்து உள்ளீர்களா? எந்த முறையை பின்பற்றி சரி செய்தீர்கள்?


மூட்டு வலியை இயற்கையாக சரி செய்வது எவ்வாறு? எவரேனும் இயற்கையாக சரி செய்து உள்ளீர்களா? எந்த முறையை பின்பற்றி சரி செய்தீர்கள்?


மூட்டு வலி என்பது திடீரென்று ஒருநாள் வரும் நோய் அல்ல. பல ஆண்டுகளாகவே ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு இரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்படுவதால் இது ஏற்படுகிறது. உறுப்புகள் அசைந்து கொண்டே இருக்க வேண்டும். உட்கார்ந்தே இருப்பவர்கள் எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். நின்று கொண்டே இருப்பவர்கள் சிறிது நேரம் உட்கார வேண்டும்.

உடல் பருமன், உழைப்பின்மை, சரிவர உடற்பயிற்சி செய்யாதது இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை மூட்டு வலிக்கு முக்கிய காரணமாகும்.

எலும்புகளையும் மூட்டுகளையும் தசையோடு சேர்த்து பிடித்துக் கொள்ள உடலுக்கு தேவைப்படுவது கொலாஜன் எனும் புரதம். கார்டிலேஜ் என்ற வழுவழுப்பு தரும் திரவம் உற்பத்தியாக ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் உதவுகிறது. மாதவிடாய் முடியும் காலத்தில் இதன் உற்பத்தி மிகவும் குறையும். இதனால் பெண்களுக்கு மூட்டு வலி வரும் வாய்ப்பு அதிகம். உடல் பருமன் விஷயத்திலும் அதிக கவனத்தை பெண்கள் செலுத்தாததால் மூட்டு வலியால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்களே.

மூட்டு வலியை தற்காலிகமாக நிறுத்தும் வலி நிவாரணிகள், களிம்புகள் கடைகளில் கிடைக்கின்றன. அவையெல்லாம் வலியை உணரும், மூளைக்கும் செல்லும் நரம்பை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்வதாகவே இருக்கும். அது நிரந்தர தீர்வு அல்ல.

மூட்டு வலிக்கு முதல் காரணம் உடல் பருமன். உடல் எடை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாக்கெட் உணவுகள், எண்ணெயில் பொரித்தவை, மைதா, கேக், கூல்டிரிங்ஸ், மாவுச்சத்து உணவுகள் சாப்பிடக் கூடாது.

மூட்டுகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமாகிறது. அது விளக்கெண்ணை ஆக இருக்கலாம் வேப்பெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் எது வேண்டுமானாலும் இருக்கலாம். இதனால் மூட்டுகளில் இரத்த ஓட்டம் அதிகமாகிறது.

எலும்பு தேய்மானத்துக்கு கால்சியம் அதிகம் உள்ள பால், பாதாம், கொண்டைக்கடலை, கீரைவகைகள், அத்திப்பழம், ராகி, ஆரஞ்ச் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் உள்ள இந்த பொருட்களை தினமும் தவறாது சேர்த்து கொள்ள வேண்டும்.

அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
நடைப்பயிற்சி அல்லது சைக்கிளிங் அல்லது நீச்சல் போன்ற உடல் அசையும் பயிற்சிகளை தினமும் நாற்பது நிமிடம் எடுக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அல்லது மூட்டுகள் அனைத்திலும் தினமும் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது போல தேய்த்து விட வேண்டும்.

ஒமேகா 3 உள்ள காட்லிவர் ஆயில் மூட்டு தேய்மானத்தை தடுக்கும் சைனோவியல் என்ற பசை போன்ற திரவம் சுரக்க உதவுகிறது. இரவு முழுவதும் ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை ஊறவைத்து காலையில் அந்த ஊறிய எள்ளை சாப்பிடுவதாலும் மூட்டு வலி குறைய வாய்ப்புள்ளது.

எலும்பு பலம் இழப்பதற்கு விட்டமின் டி குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். விட்டமின் டி சத்தினை எளிதில் பெற சூரிய ஒளியில் நாற்பது நிமிடம் வாக்கிங் செல்வது எளிமையான செலவில்லாத ஒரு தீர்வாகும்.
அல்லது, சூரிய ஒளியில் உடல் படுமாறு பதினைந்து நிமிடமாவது இருக்க வேண்டும்.

0 Comments