ஒரு பெண்ணிற்கு ஏன் ஆண் தேவை?

ஒரு பெண்ணிற்கு ஏன் ஆண் தேவை?


ஒரு பெண்ணிற்கு ஏன் ஆண் தேவை?



பிரச்சனையை கையாள்வதில் வித்தியாசமான போக்கு. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்று நடந்து கொள்வது, ஒரு விஷயத்தை உணர்வு ரீதியாக பார்க்காமல் காரண காரியம் யோசிப்பார்கள்.

வேற்றுமை உணர்ச்சி பெண்கள் அளவிற்கு இல்லாத காரணத்தால், உதவியை எதிர்பார்க்கலாம்.

எவ்வளவு மோசமான பெயரோ , பிரச்சனையோ, இழப்போ நேர்ந்தாலும், அடுத்தது என்ன என்று யோசித்து செயல்படுபவர்கள் ஆண்கள்.

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.
பொதுவாக வீட்டு பெண்களால் குடும்பம் பிரியும் ஆண்டிகள் முதல் அம்பானிகள் வரை. ஆகையால் ஆண்கள் விட்டு கொடுத்து செல்பவர்கள்.

ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கும் சுபாவம் உள்ளவர்கள் . பேச்சு கம்மி என்பதால் மோசமான கோபம் உள்ளவர்களோ , தன்னை பற்றியே யோசிக்கும் சுயநல பெண்களோ , தான், தான் தான் உசத்தி என்கிற பெண்களோ, நல்ல கணவன் அமைந்து விட்டால் அவன் எப்பாடுபட்டும் அரண் போல் அவளை காக்கிறான் . அவன் அறிவு ஆன்ம ரீதியாக செயல்படுவதால்.

பாவம் மன்னிப்போம் என்கிற சுபாவம் ஆண்களுக்கு அதிகம் .

பொறுப்பு ஏற்று கொண்டால் தலையே போனாலும் காப்பாற்றுவார்கள். உணர்வை கடந்தவர்கள்.

பெண்ணால் கூட ஆண் இல்லாமல் மாத கணக்கில் இருக்க முடியும், அவர்களால் சில நாட்களுக்கு கூட இருக்க முடியாது கஷ்டம் . இதனாலேயே எல்லா விதத்திலும் உதவுவர்.

ராமாயண காலம் முதல், அன்னை அவர்களை பிரிந்து ஒரு மாதம் இருப்பேன் என்று சொன்னாலும், தன்னால் ஒரு க்ஷணம் கூட முடியாது என்று ராமன் தேம்பி அழுததும் இதற்கு சான்று.

சில்லறை காரணங்களுக்கு குழப்பி கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் பெண்ணை பார்க்கும் விதமும், பெண்கள் பெண்களை பார்க்கும் விதமும் மிகவும் வித்தியாசம் . பெண்கள் தான் இன்னொரு பெண்ணை மிகவும் எடை போடுவர். இவர்களுக்கு அது எதுவும் தெரியாது.

பெண்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்துவர்.

பெண்களை விட பல மடங்கு எளிமையானவர்கள் ஆண்கள்.

0 Comments