சில நேரங்களில் எவ்வளவு முயன்றாலும் இரவில் வெகுநேரம் உறக்கம் வருவதில்லையே ஏன்?

சில நேரங்களில் எவ்வளவு முயன்றாலும் இரவில் வெகுநேரம் உறக்கம் வருவதில்லையே ஏன்?


சில நேரங்களில் எவ்வளவு முயன்றாலும் இரவில் வெகுநேரம் உறக்கம் வருவதில்லையே ஏன்?


உங்கள் வயது என்ன? 50/60 என்றால், அரைகுறை தூக்கம் தான் இருக்கும். அது கவலைப் படும் விஷயம் அல்ல. ஒரு வயதுக்கு மேல் ஆனால் நீண்ட நேரம் ஆழ்ந்த தூக்கம் வராது.

நீங்கள் சிறு வயது மனிதன். உங்களுக்கு தூக்கம் சரியாக வரவில்லை என்றால் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?

இரவு வயிறு முட்ட சாப்பிடுவது. மிகுந்த எண்ணெய் ஊற்றி சமைக்கப்பட்ட பரோட்டா, நான் வெஜ் போன்றவற்றை சாப்பிடுவது. எண்ணெய் தனியே வயிற்றில் மிதக்கும். சாப்பிட்ட பொருட்கள் ஜீரணம் ஆகாது ஆகவே தூக்கம் வராது.

அதிக வெளிச்சத்தை கண்கள் பார்த்துக் கொண்டே இருப்பது. அதிக வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, மொபைல் போனில் அதிக வெளிச்சம் வைத்துக் கொள்வது. இதையெல்லாம் நீண்ட நேரம் பயன்படுத்துவது. படுக்கையில் படுத்துக் கொண்டே நீண்ட நேரம் பயன்படுத்துவது. கண்களில் ஈரம் வேண்டும். அந்த ஈரம், தொடர்ந்து அதிக வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இருந்தால், குறைந்து விடும்.

உடல் சூடு அதிகமாக இருப்பது. சூடு என்றால் தெர்மாமீட்டரில் காட்டும் சூடு அல்ல. உடல் உஷ்ணம், பித்தம் என்று சொல்வார்கள். காரம் அதிகம் சாப்பிடுவது, தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பது உடல் சூட்டை அதிகப்படுத்தும். அப்போது தூக்கம் கெடும்.

பணி நேரம் மாறிக்கொண்டே இருப்பது. இரண்டு நாட்கள் பகல் ஷிப்ட், இரண்டு நாட்கள் இரவு ஷிப்ட் இப்படி மாறிக் கொண்டே இருந்தால் எப்போது தூங்க வேண்டும் என்று உடலுக்கு உள்ளே இயற்கை கடிகாரம் உள்ளது. அதற்கு மிகவும் குழப்பம் ஆகிவிடும்.

அதிகப்படியான சிந்தனைகள் தூக்கத்தை கெடுக்கும்.

எது எப்படியோ போகட்டும். தீர்வு என்ன என்று பார்ப்போம். தூங்கும் முன் (?) தொப்புளில் இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு சுற்றி சுற்றி தேய்த்து விடுங்கள். பாதத்தில் நடுவில் இரண்டு சொட்டு நல்லெண்ணெய் வைத்து தேய்த்து விடுங்கள். தூக்கம் நன்றாக வரும்.

படுக்கும் படுக்கை சுத்தமாக இருக்க வேண்டும். சரியான அளவு தலையணை இருக்க வேண்டும். உங்களால் முடிந்தால் பாயில் படுத்து உறங்குங்கள்.

சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். எல்லா அரசு ஆஸ்பத்திரியிலும் இலவச சித்த மருத்துவம் உண்டு.

பதில் 2


இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

நம் உடலுக்கு தூக்கம் அந்த சமயத்தில் தேவையற்றதாகத் தோன்றலாம், மாறாக பகலில் அவ்வளவாக வேலை இல்லாமலோ, உறங்கியோ இருந்தால் தூக்கம் இரவில் வராது.

உறங்கச் செல்லும் தொலைக்காட்சியோ அல்லது கைப்பேசியோ பயன்படுத்தினால் கட்டாயம் உறங்கத் தாமதமாகும்.

பக்கத்தில் எங்கேனும் அதிக சத்தம் இருந்தால் உறக்கம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

சில மின்விசிறிகளின் சத்தத்தினால் கூட உறக்கம் கெட வாய்ப்புள்ளது. எனவே மின்விசிறியில் பழுதிருப்பின் உடனே சரி செய்யலாம்.

நன்கு உறக்கம் வர செய்யவேண்டியவை.,

தூங்கச் செல்லும் ஒரு மணி நேரம் முன்னர் டிவி, செல்போன் பார்ப்பதைக் கட்டாயம் தவிர்க்கவும். மேற்கொண்டு அவற்றைத் தலை மாட்டில் வைத்து தூங்காமல் இருப்பின் மிக்க நலம்.

இரவில் எம் எஸ் வி, இளையராஜா, ரகுமான் அவர்களின் அருமையான மெலடி பாடல்களைச் சத்தம் மிகவும் குறைவாக வைத்து கேட்டால் மிக்க நல்லது. குறிப்பாக எம் எஸ் வி, கண்டசாலா பாடல்கள் அருமையாக இருக்கும்.

தலையையை மென்மையாக வருடுவதன் மூலம் கனவில்லாமல் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

முடிந்தவரை உறங்கும் அறையில் வெளிச்சம் மிக மிக குறைவாக வைத்திருந்தாலோ அல்லது வெளிச்சம் இல்லாமலோ இருந்தால் நன்கு உறக்கம் வரும்.

உங்களுக்குப் பிடித்த நல்ல மென்மையான 4 பாடல்களைப் பாடினால் உறக்கம் நன்றாக வரும் உங்களுக்கும், பிறருக்கும் கூட.

இரவில் சண்டை, சச்சரவில்லாமல் உறங்கச் சென்றால் மிக நலம்.

பகலில் அதிகமாக உறங்காமல் இருந்தால் நல்லது.

இரவு சிறிது நடைப் பயிற்சி செய்தால் உடல், மனம் இரண்டிற்கும் நல்லது.

இரவு உணவை அதிகபட்சமாக 8:30 மணிக்குள் முடித்தால் தூக்கம் தானாக வந்துவிடும்.

0 Comments