இணையத்தின் ஆரம்ப காலம்
தெரிந்து கோள்வோம்

நெட்வொர்க்கின் வளர்ச்சி நிலை
நெட்வொர்க்கின் கொள்கை,இணையத் தொழில் நுட்பக் கொள்கையின் கருவாக இருக்கிறது.1970 ஆம் ஆண்டின் கடைசிக் கால கட்டத்தில்,கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் பூக்க ஆரம்பித்தது.
கம்ப்யூட்டர்களை இணைப்பதற்கும்,தகவலைப் பரிமாறிக் கொள்வதற்கும்,பல நிறுவனங்கள்,LAN (Local Area Network) என்ற நெட்வொர்க்கை அமுல்படுத்தின.
LAN தொழில் நுட்பமானது,நிறுவுவதற்கு எளிதாகவும்,விலை மலிவாகவும் இருப்பதால்,அனைத்து வகை நிறுவனங்களையும் கவர்ந்தது எனலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை நெட்வொர்க்கிங் என்றழைக்கிறோம்.
LOCAL AREA NETWORK
ஒரு நிறுவனத்தின் உள்ள செயல்பாடு குழுக்களையோ அல்லது டிப்பார்ட்மெண்ட்களையோ இணைக்கும் LAN நெட்வொர்க் இணைப்பினால் சில நன்மை, தீமைகள் உள்ளன.
LAN நெட்வொர்க்கினில்,தனிப்பட்ட உரிமை,அதிகாரத்துடன் கூடிய செயல்பாடு அமைந்துள்ளது.பல கணிப்பொறி வியாபார நிறுவனங்கள்,பல வேறுபட்ட நெட்வொர்க்குகளுக்கு,ஹார்ட்வேர் அமைத்து தருவதால்,பல LAN தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளன.LAN தொழில் நுட்பம் ஆனது,அதன் வேகம்,எளிமையான பயன்பாடு,இவற்றால் பல நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
LAN தொழில் நுட்பம் ஒரு குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் தான் பயன்படுகின்றது.LAN இணைக்கும் தொலைவு,500 மீட்டருக்குள் வரைதான்.அதற்கு மேல் உள்ள கம்ப்யூட்டர்களை, இணைத்தால் LAN நெட்வொர்க் ஆனது, பாதிக்கப்படும்.ஒவ்வொரு LAN,தொழில்நுட்பமும், சில குறிப்பிட்ட குறிப்புகளை எலக்ட்ரிக் சிக்னலுக்காகக் கொண்டுள்ளது.வேறுபட்ட LAN தொழில் நுட்பங்கள்,ஒன்றோடொன்று பொருந்தி அமைந்திராது.
வொயிட் ஏரியா தொழில் நுட்பம் ( Wide Area Technology )
1960 - க்கும்,1970 - க்கும் இடையில்,LAN தொழில் நுட்பத்தோடு,மற்றுமொரு நெட்வொர்க்கின் வடிவமாக,WAN கண்டறியப்பட்டது.பூமியின் பெரிய தொலைவுகளுக்கிடையில்,ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இணைப்பதற்கு,WAN நெட்வொர்க் மிகவும் உதவுகின்றது.தொலைதூர தகவல் பரிமாற்றத்திற்கு WAN தொழில்நுட்பம் ஆனது,மோடம்களை ( Modem ) பயன்படுத்துகின்றது.
WAN தொழில் நுட்பத்தின் விலை மதிப்பு,LAN- யைக் காட்டிலும் உயர்ந்தது.WAN நெட்வொர்க்கை அமல்படுத்த,நீண்ட நாளைய திட்டமும்,ஹார்ட்வேரும் தேவைப்படுகின்றது.பல வேறுபட்ட WAN தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.ஒவ்வொரு தொழில் நுட்பமும்,அதன் வடிவமைப்பினில் சார்ந்திராத தன்மை கொண்டு விளங்குகின்றது.
ஒவ்வொரு தொழில் நுட்பமும்,வோல்ட்டேஜ் மற்றும் சிக்னல் மாடுலேஷன் ( Signal Modulation ) யுக்திகளைக் கொண்டுள்ளது.WAN மற்றும் LAN நெட்வொர்க்கானது,சில நேரங்களில்,ஒன்றோடொன்று பொருந்தி அமைந்திராது.
நெட்வொர்க்குகளிடையே இணைப்பு
ஒரு பெரிய நிறுவனத்தில்,சில LAN நெட்வொர்க்குகளும்,சில WAN நெட்வொர்க்குகளும் இருக்கலாம்.இந்த நெட்வொர்க்குகளை,ஒன்றோடொன்று இணைத்து,ஒரு பொதுவான நெட்வொர்க்கினை அமைப்பது மிகவும் கடினமாகத் தென்பட்டது.
நெட்வொர்க்குகளை ஒன்றோடொன்று இணைப்பது,மிகவும் கடினமானதால்,பொதுவான அவுட்புட் கருவிகளை அனைத்து கம்ப்யூட்டர்களும் பயன்படுத்துவதில்,சிக்கல்களும் உள்ளன.
நெட்வொர்க்குகளை,ஒன்றோடொன்று இணைக்கும் முயற்சியில் இணையத் தொழில்நுட்பம் உருவானது.1960 - ம் ஆண்டின் கடைசியில்,அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்துறையானது,கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தியது.
1970 ன் கடைசியில்,அட்வான்சிடு ரிசேர்ச் புராஜக்ட்ஸ் ஏஜென்சி ( ARPA - Advanced Research Projects Agency ) என்ற அமைப்பு,வேறுபட்ட தொழில் நுட்பங்களை உருவாக்கியது.
ARPANET என்ற நெட்வொர்க்கை ஆரம்ப காலத்தில் இன்டர்நெட்டின் அறிமுகமாக பயன்படுத்தினர்.பல நிறுவனங்களின் பல நெட்வொர்க்குகளோடு (ஆர்ப்பாநெட் ARPANET) தொடர்பு கொள்கையில்,பல பிரச்சனைகள் உருவாகின.




0 Comments