2021- ல் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள்
(Only Android)
எலக்ட்ரானிக் யுகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு வருகிறோம்.
- மொபைல் போன்கள்,
- லேப்டாப்,
- புதுபுது வகையான டி.வி
என நாளுக்கு நாள் நமக்கு அதன் தேவை மிகுந்த அளவு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதில் சில பொருட்கள் திரும்ப திரும்ப அப்டேட்களுடன் தினமும் விற்பனைக்கு வருகின்றன. அதனாலயோ என்னவோ நம்மைச் சுற்றி இன்று பல எலக்ட்ரானிக் பொருட்கள் பல குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன. அவற்றில் எதை தேர்வு செய்து வாங்குவது என்கிற குழப்பம் நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. நம்முடைய தேவைக்கு ஏற்ப மற்றும் நமது பட்ஜெட்டுக்கேற்ற எலக்ட்ரானிக் பொருட்களை நாம் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு மட்டும் கிடையாது பல்வேறுவிதமான அப்ளிகேஷன்களுக்கும் இது பொருந்தும்.
நம்முடைய அன்றாட வாழ்வின் மிக முக்கியமான ஓர் அங்கமாக மாறிவிட்ட நமது மொபைல். நம்முடைய மொபைலில் தினம் தினம் புது புது அப்ளிகேஷன்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அனைத்து செயலிகளுக்கும் தேவையான அளவு வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் சில அப்ளிகேஷன்கள் மட்டுமே பெரும்பாலான மக்களால் அதிகளவில் விரும்பப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் ஆண்ட்ராய்டில் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷன்களைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் அதிக அளவில் இந்திய அப்ளிகேஷன்களும் இடம்பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம்...!
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இன்ஸ்டாகிராம் இளைஞர்களின் மோஸ்ட் ஃபேவரைட் அப்ளிகேஷன் என்று சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன் உபயோகிக்காத இளம் தலைமுறையினரை விரல்விட்டு நாம் எண்ணி விடலாம் என்கின்ற அளவிற்கு இதன் தாக்கம் அவர்களிடம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் என்னும் ஆப்ஷன்தான் இதன் அசூரவளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம். டிக் டாக்கை இந்தியாவில் பேன் பண்ணினதும் பண்ணுனாங்க அதற்குப் பிறகு பல அப்ளிகேஷன்கள் போட்டிக்கு வந்துவிட்டது. அதில் டிக் டாக்குக்கு போட்டியாகக் களமிறக்கப்பட்ட அப்ளிகேஷன்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. இந்த இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் ரிலீஸ் என்னும் ஆப்ஷனை தவிர
- ஐஜிடிவி,
- வீடியோ சாட் வசதி, (Video Chat)
- ஆடியோ சாட் வசதி, (Audio Chat)
- ஸ்டோரி ஹைலைட்,
- ஐஜி ஸ்டோர்
எனப் பல பல புதுமையான அப்டேட்கள் தான் இதனை நெம்பர் ஒன்னு இடத்துக்குக் கொண்டுவர காரணமென கூறலாம்.
ஃபேஸ்புக்...!
முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் ஆரம்ப காலங்களில் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களுடன் பழகுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அனால் இன்று ஃபேஸ்புக்கிலும் பல்வேறுவிதமான புதிய வசதிகள் வந்துவிட்டன. ஃபேஸ்புக் வாட்ச் எனும் ஆப்ஷனைப் பயன்படுத்தி யூடியூப்பில் நாம் வீடியோக்களை பார்ப்பது போல அனைத்து வகையான வீடியோக்களையும் இதிலும் பார்க்க முடியும். அதுமட்டுமல்ல யூடியூபில் வருமானம் ஈட்டுவது போலவே இந்த ஃபேஸ்புக்கிலும் வீடியோக்கள் போடுவதன் மூலம் நம்மால் வருமானம் ஈட்ட முடியும். இதுமட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்காக ஃபேஸ்புக்கில் கேம்ஸ் எனும் ஆப்ஷனில் பல்வேறுவிதமான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் வசதி கூட உள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இதுமூன்றும் ஒரே நிறுவனத்துடையதாகும். அதன் தாய் நிறுவனம் இந்த ஆண்டு (2021) 'மெட்டா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீஷோ...!
இந்த செயலி ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே வியாபாரம் செய்ய உதவும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் அதாவது 0℅ முதலீட்டில் ஆன்லைனில் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற சிறந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனில் உள்ள பொருட்களை நாம் நம்முடைய வெவ்வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியோ அல்லது நம்முடைய நண்பர்களிடமோ, தெரிந்தவர்களிடமோ விற்றுத் தர வேண்டும். அவ்வாறு நாம் விற்றுத் தருகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் நமக்குக் குறிப்பிட்டளவு தொகை கமிஷனாகக் கிடைக்கும். இந்த அப்ளிகேஷனானது வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க விரும்புபவர்களிடம் குறிப்பாகப் பெண்களிடமும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமும் அதிக அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது.
ஸ்னாப் சாட்....!
ஸ்னாப் சாட் என்னும் இந்த அப்ளிகேஷனானது பல்வேறுவிதமான ஃபில்டர்களால் உலக மக்கள் பல்வேறோடு இணைந்து வெகுவிரைவில் அதற்கென ஒரு இடத்தை பிடித்து அனைவரையும் அடிமையாக்கி உள்ளது. சொல்லப்போனால் இந்த அப்ளிகேஷன் பிரபலமாவதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது அந்த பயன்பாட்டிலுள்ள பில்டர்கள் தான். இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குச் சென்றாலும் ஃபில்டர் போட்டோ பேஸ்புக் சென்றாலும் ஃபில்டர் ஃபோட்டோ இந்த மாதிரி ஒவ்வொரு பக்கத்திலும் ஸ்னாப் சாட்டில் எடுத்த போட்டோ முக்கிய இடம் பிடித்துள்ளது. ஸ்னாப் சாட் என்னும் இந்த அப்ளிகேஷன் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நம் நண்பர்களுடன் சேர்ந்து உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் அப்ளிகேஷன். ஆனால் இதில் பகிரப்பட்ட செய்தியோ அல்லது புகைப்படமோ நாம் அனுப்பிய நபர் பார்த்த சில நிமிடங்களிலேயே அழிந்து விடும். இது இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் கிடையாது ஏனென்றால் இந்த ஸ்னாப்சாட்டில் உள்ள கேமராவின் ஃபில்டர்களுக்காகவே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துபவர்கள் அதிகம். இந்த ஃபில்டர்களைக்கொண்டு பல்வேறுவிதமான கோணங்களில் மற்றும் வித்தியாசமான வகைகளில் புகைப்படங்களை எடுக்க உதவும்.
MX டகாடக்...!
ஒரு காலத்துல நாம் அனைவரும் எம் எக்ஸ் ப்ளேயரை பயன்படுத்தி ஆஃப்லைனில் (Without Internet) வீடியோக்களை மட்டும்தான் பார்த்து வந்து கொண்டிருந்தோம் திடீரென எங்கிருந்தோ அப்டேட் செய்து ஹாட்ஸ்டார், அமேசன் பிரைம் போன்று இவர்களும் பல்வேறுவிதமான வெப் சீரியஸ் மற்றும் பல படங்களை தனது அப்ளிகேஷனில் ஆன்லைனில் மூலம் பார்க்கும் வசதியை கொண்டு வந்தனர். அதுக்கப்புறம் தான் உங்களுக்குத் தெரியுமே டிக் டாக் போனதும் போச்சு திடீர்னு இவங்களும் டகாடக் இந்தியாவின் டிக் டாக்னு சொல்லி ஒரு அப்ளிகேஷன லான்ச் பண்ணிட்டாங்க அது தான் இந்த எம் எக்ஸ் டகா டக். 'MX டகாடக்' -ல் ஷார்ட் வீடியோ எனப்படும் மிகவும் குறைந்த விநாடிகளே ஓடக்கூடிய வீடியோக்களை உருவாக்குவதற்கும் மேலும் அதைப் பகிர்ந்து ஃபன் பன்னி ரசிகர்களை ஈர்க்ககூடிய ஓர் அப்ளிகேஷன். இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு சீன நாட்டைச் சேர்ந்த பல்வேறு விதமான அப்ளிகேஷன்களைத் தடை செய்த போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இயங்கி வந்த ஷார்ட் வீடியோ அப்ளிகேஷன் டிக்டாக்கும் தடை செய்யப்பட்டது. அப்பாடி ஒரு வழியாக ஒழிந்தான் சைனா சைத்தான் அப்படின்னு சொல்லிட்டு அதன் இடத்தை நிரப்பும் வகையில் இந்தியச் அப்ளிகேஷனான இந்த டகாடக் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இதில் நடனம், இசை, நகைச்சுவை என டிக் டாக்கில் இருந்த அனைத்து வசதிகளும் இருந்தது.
ஜோஷ்...!
இந்தியாவில் டிக் டாக்கை முழுவதும் தடைசெய்யப்பட்ட பிறகு உருவெடுத்த குட்டி குழந்தைகள் தான் இந்த ஜோஷ் மற்றும் பல அப்ளிகேஷன்கள். டிக் டாக் போனதும் ஒரே கொண்டாட்டம் தான் இவர்களுக்கு....
ஷார்ட் வீடியோக்களைப் பார்பதற்க்கும் பகிர்வதர்க்கும் உதவும் மற்றுமொரு என்டர்டைண்மெட் அப்ளிகேஷன்தான் இந்த ஜோஷ். இந்த செயலியில் ஷார்ட் வீடியோக்களை உருவாக்கி பகிர்வதுடன் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தினசரி சேலஞ்ச்கள் மற்றும் பல போட்டிகளிலும் நம்மால் கலந்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் உள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் பல வகையான பரிசுகளை கொடுக்கின்றன. ஷார்ட் வீடியோக்களை வைத்து மாஸ் காட்டி ஹிட்டடித்த அப்ளிகேஷன் பட்டியலில் இணைகிறது இந்தச் செயலி.
மோஜ்...!
டிக் டாக் போனதால வந்த மற்றொரு ஷார்ட் வீடியோ அப்ளிகேஷன்ல இவனும் ஒருத்தன். ஆனால், இந்த மோஜ் இந்தியாவைச் சேர்ந்தது. இந்தச் அப்ளிகேஷனானது பெங்களூரைச் சேர்ந்த 'மோஹல்லா டெக்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அப்ளிகேஷனில் உருவாக்கப்படும் ஷார்ட் வீடியோக்கள் (15sec -1min) பதினைந்து விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இருக்கும். இன்று மக்களின் பொறுமை வெகுவாக குறைந்து வரும் இந்த நிலையில் இதுபோன்ற சுருக்கமான வீடியோக்களையே அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள். அதுவே இதுபோன்ற அப்ளிகேஷன்களுக்கு ப்ளஸ் பாய்ண்டாக உள்ளது. டவுன்லோட் மோஜ் என்று கூவி கூவி இன்று ஹிட்டடித்து டாப் டென் அப்ளிகேஷன் லிஸ்ட்ல இது இடம் பிடித்துள்ளது.
லூடோ கிங்...!
ஒரு காலத்துல அரசமரத்தடியிலயோ, ஆலமரத்தடியிலயோ அல்லது வேப்பமரத்தடியிலயோ சுண்ணாம்பை கொண்டு கிறுக்கி கட்டம் போட்டு ரெண்டு கட்டைகளை பயன்படுத்தியோ அல்லது ஆறு புளியங்கொட்டைகளைப் பயன்படுத்தி விளையாடி வந்த தாயகரம் எனும் விளையாட்டு இன்று ஆன்லைனில் லூடோகிங் என்றழைக்கப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் லாக்டவுன் போட்டதும் போதும் அனைவரிடமும் நன்கு வரவேற்பை பெற்று டாப் டென் லிஸ்ட்டுல இடம் புடிச்சிருச்சு.
லூடோ கிங் என்னும் கேமிங் அப்ளிகேஷன் நாம் மரத்தடியில் விளையாடும் தாயகரத்தின் ஆன்லைன் வடிவம். இந்தச் அப்ளிகேஷனில் பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருக்கும். நாம் வீட்டிலேயே இருந்துக்கொண்டு இந்த செயலியின் உதவியோடு நம்மால் நண்பர்களுடன் அவரவர் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விளையாட முடியும். மேலும் வீட்டு திண்ணையில் கிறுக்கி விளையாடுவதற்க்கு பதிலாக நம் மொபைலைக் கொண்டு ஆஃப்லைனிலும் இந்த லூடோ கேம்மை விளையாடலாம். ஒருவேலை நம்முடன் விளையாடுவதற்கு யாருமே இல்லையென்றாலும் கூட இந்த அப்ளிகேஷனின் AI-யுடன் விளையாண்டு பொழுதை ஓட்டலாம். இந்த லூடோவில் விளையாடும் போது நம் நண்பர்களுடன் சாட்டில் பேசிக்கொண்டே விளையாடலாம் என்பது கூடுதல் சிறப்பு.
ஃபிளிப்கார்ட்...!
இந்தியாவின் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக தளங்களுள் ஒன்று தான் இந்த ஃபிளிப்கார்ட். இந்த நிறுவனமானது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஃபிளிப்கார்டில் நாம் நமது வீட்டிற்குத் தேவையான பொருட்களில் ஆரம்பித்து எலெக்ட்ரானிக், ஃபேஷன் உட்பட அனைத்து வகையான பொருட்களையும் ஒரே இடத்தில் நம்மால் வாங்க முடியும். இந்தியாவின் முக்கியமான ஆன்லைன் ஃபேஷன் சைட்டான மிந்த்ராவையும் (2014) இரண்டாயிரத்து பதினாங்காம் ஆண்டு ஃபிளிப்கார்ட் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட்டில் டிக்கெட் புக் செய்வது போன்ற பிற வசதிகளும் உள்ளன.
ப்ளே இட்...!
ப்ளே இட் என்னும் இந்த அப்ளிகேஷனானது நம்முடைய மொபைலில் இருக்கும் வீடியோக்களை பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் உதவியுடன் வீடியோவானது எந்த ஃபார்மெட்டில் இருந்தாலும் நம்மால் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் வீடியோவை ஆடியோவாக மாற்றும் சிலபல சிறப்பு வசதியும் இந்த செயலியில் உண்டு. மேலும் இந்த செயலியின் மூலம் நமக்குத் தேவையான வீடியோக்களை ஆன்லைனிலும் தேடி பார்க்க முடியும்.
குறிப்பாக புதிதாக வெளிவரும் அனைத்து புதிய படங்களும் இனையத்தின் மூலம் தேடி, பிறகு அந்தப் படங்களை பார்ப்பதற்கு இந்த ப்ளே இட் மிகவும் உதவி புரிகிறது. இதன் உதவியைக் கொண்டு இன்று நிறைய பேர் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டனர். ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் உதவியோடு இலவசமாக வீட்டிலிருந்தே ஜாலியாக படத்தை பார்த்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் நண்பர்களே இரண்டாயிரத்தி இருபத்தி ஒன்றாம் ஆண்டில் ஆண்ட்ராய்டு மொபைலை கொண்டு அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களின் லிஸ்டினை நாம் இன்று பார்த்தோம். இதில் நாங்கள் விட்ட அல்லது பதிவிட மறந்த சில அப்ளிகேஷன்கள் இருந்தால் அதனை மறக்காமல் கமெண்ட்டில் பதிவிடுங்கள் அதனைக் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம்....🙏



3 Comments
Whatsapp???
ReplyDeleteAthu eppola irunthu download seiyapattu anaivaraalum payanpaduththappattu varukirathu.... So 2021 la ithukku edam illa
DeleteHey..interesting...♡♡♡
ReplyDelete