கல்பனா சாவ்லா-இந்திய விண்வெளி தேவதையின் வரலாறு
விண்வெளி தேவதை
ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதித்து (Record) காட்ட முடியும் என சாதித்து காட்டியவர்கள் இந்த உலகில் ஏராளம் பேர் உள்ளனர்…
அவர்களுள் இந்த உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனைதான் இவர்…
பூமியிலிருந்து விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்…
இன்றைய இளைஞர்களின் மனதில் எப்படியாவது அமெரிக்காவிற்க்கு சென்று காலடி வைப்பதையே கனவாய் கொண்டிருககும் இக்காலக்கட்டத்தில் அமெரிக்கா சென்று விண்வெளியில் காலடி வைத்த ஓர் இந்தியப்பெண்…
இன்றும் பல பெண்களுக்கு முன் மாதிரியாக திகழும் ஓர் பெண்…
ஒரு சாதாரணப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை படித்து, இந்த உலகமே வியக்கும்படி தனது கனவுகளை ஒன்று சேர்த்து ஒரு விண்வெளி பொறியாளராக (Space engineer) வாழ்ந்து காட்டியவர்…
இந்தியாவின் ‘விண்வெளி மங்கை” ‘விண்வெளி தேவதை” என்று அழைக்கப்படுபவர்…
அவர்தான் விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்…
அவரை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்….
கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லாவிற்கு சிறுவயது முதல் விண்வெளி பயணம் என்றால் மிகவும் ஆசை, குறிப்பாக விண்வெளி என்றால் கொள்ள ஆசை அவருக்கு. பொம்மைகளை வைத்து விளையாட வேண்டிய வயதில் தனது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பது, மற்றும் நட்சத்திரங்களை எண்ணுவது இதுமட்டுமின்றி விமான ஓவியங்களை தீட்டி அழகு பார்ப்பது இதுபோல விண்வெளி சமந்தமான விஷயங்கள் மட்டுமே கல்பனா சாவ்லாவிற்கு பிடித்த பொழுதுபோக்காக இருந்தது.
விமானமானது வானில் பறக்கும்போது வெளியிடும் சத்தத்தை கேட்டாலே வீட்டில் இருந்து ஓடிவந்து விமானம் மறையும் வரை கண்களை மூடாமல் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர் தான் கல்பனா சாவ்லாவும்...
கல்பனா சாவ்லாவிற்கு சிறுவயதிலேயே பைலட்டாக வேண்டும் என்ற ஆசை. ஆனால், அதை தனது வீட்டில் சொன்னபோது அவரின் பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்காமல் மறுப்பை தெரிவித்தனர். ஆனால் அவரின் பெற்றோர்கள் அதற்கு பதிலாக வேறுசில சாய்ஸை தந்தனர் அதாவது டாக்டர், இன்ஜினீயர் அல்லது ஐ.ஏ.எஸ்… இந்த மூன்றில் எதையாவது ஒன்றை தேர்வு அவர் செய்திருந்தால் கல்பனா சாவ்லா என்று ஒருவர் இருந்தார் என்பது தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், கல்பனா தனது பெற்றோர்களின் ஆசையை ஒதுக்கிவிட்டு, விடாமல் தன் கனவுகளை துரத்தினார். அவ்வாரு துரத்தியதால் ஒருநாள் அவற்றை சாத்தியமாக்கினார்.
விண்வெளி கனவை என்னால் உண்மையாக்கி காட்ட முடியும் என்ற உறுதியுடனும், லட்சியமுடனும் சாதித்து காட்டியவர் கல்பனா சாவ்லா. இவர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லாவின் சாதனைகளை இன்றளவும் அனைவராலும் போற்றப்படுகிறது. இதனால் அவரை இந்தியாவின் விண்வெளி தேவதை என்றும் அழைத்தனர். மேலும் இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை என்றென்றும் நினைவு கூறும் வகையில், நமது இந்தியாவில் வீரதீர சாதனைகள் புரிந்த ஒவ்வொரு பெண்களுக்கும் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது.
கல்பனா சாவ்லாவின் குழந்தைப்பருவம்
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா 1962-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி ஹரியானா (Haryana) மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற நகரத்தில் பிறந்தார். ஆனால் இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ஆம் தேதியன்று பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் (Banarasi Lal Chawla, Sanjyothi devi Chawla) மகளாக பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா (Sunita, Deepa and Sanjay) மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பனாவே இக்குடும்பத்தின் கடைக்குட்டி (The youngest) ஆவார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் ‘கற்பனை” என்று பொருள்.
கல்பனா சாவ்லா சிறுவயது முதலே தலைக்கு மேல் விமானம் பறந்தால் அதை வச்சகண்ணு மாறாமல் விமானம் மறையும் வரை ரசித்துக்கொண்டே இருப்பார். இவ்வாறிருக்க ஒருமுறை கல்பனா சாவ்லா தனது தந்தையிடம், ஃபிளையிங் கிளப்புக்கு (flying club) தன்னை அழைத்து செல்லும்படி கேட்டார். ஃபிளையிங் கிளப்பில் கல்பனா சாவ்லா விமானத்தை வியந்து, வியந்து பார்ப்பார். மேலும், விமானத்தில் ஒரு முறை பயணம் செய்தார். அதற்கு பிறகு கல்பனா சாவ்லாவிற்கு விமானம் மீதான காதல் மேலும் அதிகரித்தது.
கல்வி
இவர் தனது தொடக்க கல்வியை (Early education) கர்னலில் உள்ள தாகூர் பள்ளியில் தொடங்கினார். கலபனா சாவ்லா ஆரம்ப கல்வி பயிலும் போது, இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி.டாடாவை (J.R.D.TATA) பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் (Aeroplane) ஓட்டும் ஆர்வம் அதிகலவில் ஏற்பட்டது.
பள்ளி பருவத்திலேயே தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற லட்சியத்தை (Ambition) தனது மனதில் வளர்த்துக்கொண்டார். பள்ளியில் முதல்நிலை (Topper Student) மாணவியாக திகழ்ந்த கல்பனா சாவ்லா எதிர்காலத்தில் விண்வெளி பொறியாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படித்தார்.
ஆனால், கல்பனாவின் விருப்பத்திற்கு அவரது பெற்றோர்கள் முன்பை போல இப்பொழுதும் தடைவிதித்தனர். அதற்கு காரணம் என்னவென்றால் அப்போதைய காலத்தில் விமான பொறியியல் என்பது ஆண்கள் மட்டுமே படிக்கும் ஒரு பாட பிரிவாக இருந்தது. இருந்தாலும் நான் அதையேதான் படிப்பேன் என்று, துணிந்து அந்த பிரிவை தேர்தெடுத்த கல்பனாவின் பிடிவாதம் (Obstinacy) பெற்றோரை சம்மதிக்க வைத்தது.
1982-ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள ‘பஞ்சாப் பொறியியல் (punjab engineering college) கல்லூரியில்” விமானப் பொறியியலில் துறையில் கல்வி பயின்று இளங்கலை பட்டமும் (Bachelor's degree) பெற்றார். அதன்பின் பல்வேறு தடைகளை தாண்டி மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
ஆகாயத்தை பற்றியே கனவு கண்டுகொண்டிருந்த கல்பனா சாவ்லாவை அமெரிக்க நாடு விரும்பி அழைத்தது. பின்னர், 1984-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ‘டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” (University of Texas) விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
பின்னர், 1986-ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் (University of Colorado Boulder) இரண்டாவது முதுகலைப் பட்டமும் பெற்றார். அங்கேயே தொடர்ந்து பயின்று 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் (PhD) பட்டத்தை பெற்றார்.
நாசாவில் பணி
தனது கனவை நனவாக்கி கொள்ள தொடர்ந்து கல்வித்துறையில் முன்னேறி கொண்டிருந்த கல்பனா சாவ்லாவிற்கு 1988-ஆம் ஆண்டில் அமெரிக்க (American Space Agency) விண்வெளி நிறுவனமான நாசாவில் (NASA) ஆய்வு விஞ்ஞானியாக தொழில் வாய்ப்பு கிடைத்தது.
இலக்குகளை அடைவதற்காக தான் செல்லும் பாதை சரிதான் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட கல்பனா சாவ்லா அங்கே எளிய மொழியில் விளக்குவதற்கு கடினமான (computational fluid dynamics) கம்பியூட்டேசினல் புலூயிட் டயினமிக்ஸ் எனும் படிமுறை தீர்வு மற்றும் எண்சார் பகுப்பியல் (Numerological analysis) வழிமுறைகள் மூலம் பாய்ம ஓட்டங்களை (Fluid flows) ஆராயும் பாய்ம இயக்கவியல் (Fluid dynamics) தொடர்பாகவும், செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
மேற்சொன்ன அனைத்து துறையிலும் சாதித்த கல்பனாவிற்கு விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் அதாவது கற்றுக்கொடுக்க கல்பனா சாவ்லா (Certification of Eligibility) தகுதி சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள் மற்றும் கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்றிருந்தார்.
1991-ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை கிடைத்ததும், நாசாவில் விண்வெளி வீரர்களுக்கான (Training Application Form) பயிற்சி விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைத்தார். தனது விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்க தாமதமானதால், 1993-ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் (Research Scientist) ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டே அதாவது 1994-ம் ஆண்டு கல்பனா சாவ்லாவின் விண்ணப்பத்திற்கு நாசாவிடமிருந்து பதில் கிடைத்தது. நாசாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்க்காக விண்ணப்பத்திருந்தவர்கள் சுமார் 3,000 பேர் அவற்றில், வெறும் ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனா சாவ்லாவும் ஒருவர் என்ற பதில் அவருக்கும் அவரின் பெற்றோர்களுக்கும் கிடைத்தது. அன்று முதல் கல்பனா சாவ்லாவின் (Ambition) விண்வெளி வீரர் கனவு நனவாக தொடங்கியது.
ஜான்ஸன் விண்வெளி தளத்தில் (Johnson Space Base) பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கடுமையான நேர்காணல்கள் (interview) ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சி பட்டியலில் இடம்பிடித்தார் கல்பனா சாவ்லா.
இதனைத் தொடர்ந்து கல்பனா சாவ்லா தனது வாழ்வில் பல்வேறு விதமான சாதனைகளைச் சாதிக்க தொடக்கத்தினை ஆரம்பித்துவிட்டார்....
அவர் செய்த சாதனைகளையும் அதற்காக அவர் பட்ட கடுமையான சவாலகளைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்....
அடுத்த பதிவினை நீங்கள் மறக்காமல் அதாவது தவறாமல் படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கீழே தெரியும் சிவப்பு கலர் சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்...உடனே உங்களுக்கு நோட்டிஃபிகேஷனாக உங்களுக்கு அடுத்த பதிவின் தகவல் வந்து சேரும்....
நன்றி வணக்கம்...
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



0 Comments