அடேங்கப்பா கக்காவை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா...?

நமது அன்றாட கடமைகளில் ஒன்று தான் காலைக் கடன் கழிப்பது. இவ்வுலகில் வாழும் அனைவரும் மலம் கழிக்கிறார்கள் ஆனால் சின்னஞ்சிறு சிறு குழந்தைகளைத் தவிர மற்றும் அவர்களின் பெற்றோரை தவிர அதுகுறித்து யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. ஏன் அதை பற்றி பேசுவதில் தயக்கம்...?
அன்றாடம் கழிக்கும் மனிதர்களின் மலமானது இவ்வுலகில் உள்ள மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வாகவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
சராசரியாக கணக்கு போட்டு சொன்னால் ஒரு வருடத்திற்கு மட்டும் ஒரு மனிதர் கிட்டத்தட்ட 730 லிட்டர் சிறுநீர் (Urine) கழிக்கிறார்; மேலும் 91 கிலோ மலத்தை (Poop) வெளியேற்றுகிறார். ஆனால் நாம் அனைவரும் இதனால் கிடைக்கும் பயன்களை மறந்துவிட்டோம்
மலம் கழிக்க உதவியவர் உயரிய பதவியில்
பழங்கால ரோமானிய காலத்தில் எந்த ஒரு மனிதனின் கழிவுகளும் வீணாக போனதில்லை. அதாவது மலமானது வீட்டுத்தோட்டங்களிலும், காடுகளிலும் உரமாக பயன்படுத்தப்பட்டப்பட்டது. மேலும் சிறுநீரைக் கொண்டு துணியை தயாரித்தனர்.
இங்கிலாந்து நாட்டின் ஏழாம் ஹென்ரி மன்னர் காலத்தில், அந்நாட்டின் உயரிய பதவி என்னவென்று தெரியுமா?
அதாவது அந்த மன்னருக்கு மலம் கழிப்பதில் யார் உதவி செய்கிறார்களோ அவர்களின் பதவிதான் அந்நாட்டின் உயரிய பதவியாக பார்க்கப்பட்டது. இதனால் அவ்வேலையில் இருப்பவர்கள் மன்னரின் கவனத்தை பெற அவர் மலம் கழித்த பின் அவரின் பின்புறத்தை நீரின் உதவியுடன் சுத்தம் செய்வது ஒரு நல்ல யோசனையாகதான் அந்த சமயத்தில் இருந்தது. இருப்திலே அந்த வேலைக்கு மட்டும்தான் அதிக சம்பளமும் மேலும் உயரிய பதவியும்கூட...! என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியமா இருக்கா...?
ஏன் இருக்காது...?
ச்சீசினு சொல்லிகிட்டு திரிகின்ற ஒரு கேவலமான வேலையாட்டம் இருக்கு இதுக்கு எதுக்கு உயரிய பதவி, அதிக சம்பளம்னு கண்டிப்பாக நீங்கள் நினைத்திருப்பீர்கள். தொடர்ந்து என்னோடு நீங்களும் படிங்க...
இந்த மலமானது அக்காலத்தில் ஒரு வணிகமாக பார்க்கப்பட்டது. அதாவது மனிதர்களின் மலத்தை இரவோடு இரவாக நல்ல விலைக்கு உள்ளூரில் இருக்கும் விவசாயிகளுக்கு உரமாக விற்கப்பட்டது. அதுமட்டுமல்ல மனிதன் சிறுநிரை சேகரிக்தது வைத்து லெதர் போன்ற பொருட்களை மிருதுவாக்க பயன்படுத்தப்பட்டது.
இன்றைய காலத்தில் ஆற்றலுக்கான தேவை
நமது முன்னோர்களின் கழிவறை பழக்கத்திலிருந்து நாம் பல நன்மைகளை கற்றுக் கொள்ளலாம்.
கழிவிலிருந்து அதாவது மலத்திலிருந்து ஆற்றல் தயாரிப்பதென்பது அணு சக்தியை போன்றோ அல்லது அனல் மின் சக்தியை போன்றோ நிரந்தரமற்றது இல்லை. ஆனால் மலத்திருந்து ஆற்றலை எடுக்க தினமும் காலை கடனை சிறப்பாக முடித்திருக்க வேண்டும். நம்மில் பலருக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு மலம் கழிப்பது உடலுக்கு பல விளைவுகளை தரும். சொல்லப்போனால் நமது உடலில் இருக்கும் ஒட்டு குடலை வெட்டி எடுக்கும் நிலை கூட ஏற்படலாம்.
இந்த மாதிரியான பழக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க தினமும் மலம் கழிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடேய் அது வந்தாதான்டா போக முடியும்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரிகிறது. எந்த ஒரு சிரமமும் இன்றி நீங்கள் தினமும் மலம் கழிக்க நமது உடலுக்கு தேவையான அளவு நார்ச்சத்தை கொண்ட உணவுப்பொருட்களை எடுத்து கொண்டால் மட்டும் போது எந்த சிரமமும் இல்லாமல் மலம் கழிக்கலாம். பொது இடங்களில் குசுவின் மூலம் (Fart) துர்நாற்றத்தை பரப்பாமல் இருக்கலாம்.
கழிவு நீரானது சுத்தீகரிக்கப்பட்டு மீதமிருக்கும் சக்கையிலிருந்து மீத்தேன் என்னும் எரிவாயுவை தயாரிக்கப்படுகிறது. நவீன சுத்தீகரிப்பு இயந்திரங்கள் (Hi-Tech Machines) இந்த சக்கையில் பாக்டீரியாவை இனைக்கிறது இவ்வாறு இனைப்பதன் மூலம் பயோ கேஸ் உருவாகிறது. இந்த பயோ கேஸை வீட்டிற்கோ அல்லது வாகனங்களுக்கோ (Examples: Omni and Maruthi Suzuki) எரிபொருளாக பயன்படுத்தலாம். பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் மிகவும் சுத்தமான ஆற்றல் மேலும் இந்த பயோ கேஸை நாம் பயன்படுத்தும் போது காற்றானது மாசடைவதை நம்மால் முற்றிலுமாக தடுக்க முடியும். இதனால் நாம் டன் கணக்கில் ஆக்ஸிஜனை விலை குடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
எவ்வளவுதான் மனித மலத்தால் பல நன்மைகள் இருந்தாலும், மலத்தைவிட மனிதனின் சிறுநீருக்குதான் முதல் இடம். இவ்வுலகில் 72 சதவீத தண்ணீரை விவசாயத்திற்காக (Agriculture) பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கம் மக்கள் தொகையானது கிடு கிடுவன அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் பருவநிலை (Seasonal change) மாற்ற பிரச்னை. சில பல நாடுகளில் போதியளவு தண்ணீர் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர். உதாரணத்திற்க்கு பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு மனிதர் இரண்டு லிட்டர் சிறுநீர் கழிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 140 லிட்டர் தண்ணீரை செலவு செய்கிறார்.
நீரை மறு சுழற்சி செய்வது பேராபத்துகளிலிருந்து நம்மை காக்குமா...?
நிச்சயமாக நம்மை காக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இதற்கான தொழில்நுட்பம் (Technology) ஏற்கனவே பயன்பாட்டில்தான் உள்ளது. இந்தவிதமான முறை இஸ்ரேல், பக்ரைன், ஓமன் போன்ற நாடுகளில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு இஸ்ரேலில் மட்டுமே கிட்டதட்ட தொண்ணூறு சதவீதம் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அந்த நீரினை விவசாயத்திற்கு (Agriculture) பயன்படுத்தப்படுகிறது. இது 56 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவு.
விவசாயம் குறித்து நாம் பேசும்போது பாஸ்பரஸை பற்றியும் கொஞ்சம் பேசுவோம். இந்த பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் (Creatures) உயிர் வாழ பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அதிகப்படியான சுரங்க (Mining and Quarrying) நடவடிக்கைகளால் பாஸ்பரஸானது இப்பூமியில் குறைந்து கொண்டே வருகிறது. இந்த (பாஸ்பரஸ்) இயற்கை வளமானது பெட்ரோல், நிலக்கரியை போன்று மீண்டும் உற்பத்தியாவது மிகவும் கடினம். அவைகள் மீண்டும் உருவாக பல யுகங்கள் ஆகும்.
நாம் எதையேனும் மிச்சம் வைத்துவிட்டு சென்றால் நமது சந்ததிகள் கொஞ்சகாலம் வாழ்வார்கள். ஆனால் நாம் சுரண்டிகொண்டே போவதை பார்த்தால் நமக்கே இன்னும் கொஞ்சநாள் போனால் கிடைக்காது போல. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அடுத்த தலைமுறையில் (Next Generation) பாஸ்பரஸ் விநியோகமானது முற்றிலுமாக இல்லாமல் போகலாம்.
இந்த சத்து இல்லாமல் விவசாயம் செய்வதென்பது மிகவும் கடினம். இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி ஆகக்கூடிய உணவில் பாஸ்பரஸ் சத்து இல்லாமல் போனால் பாதி அளவு உணவையே உற்பத்தி செய்யப்படும்.
இதற்கு என்னதான் தீர்வு...?
நாம் நமது முன்னோர்களைப் போலவே வீடுகளிலோ அல்லது தெருக்களில் ஓடும் சாக்கடையில் உற்பத்தியாகும் கழிவுநீரை மீண்டும் மண்ணில் செலுத்தலாம். மலத்தை உரமாக்கும் உலர் கழிவறைகள் (Dry toilet) தான் இதற்கு மிகப்பெரிய ஒரு தீர்வு.
தற்போதுள்ள சூழலில் 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாமல் வாழ்கின்றனர். எனவே அவர்களின் கழிவறைகளை மாற்றி வடிவமைப்பது அவர்களுக்கும் கழிவறை (Toilet 🚽) என்பது சாத்தியமாக்கும். அதேபோன்று நீர் இல்லாமல் பயன்படுத்தப்படும் கழிவறையை (Without Water Toilet) புதுயுக்தியாக வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் எட்ணூறு (800) குழந்தைகளின் இறப்பை தடுக்கலாம்.
இம்மாதிரியான புதிய வகை கழிவறைகள் (Toilet 🚽) மனித உயிர்காக்கும் பணியை மட்டுமல்ல நமக்கு பல வகையில் லாபத்தை தரக்கூடிய ஒரு வணிகமாக இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டுகளில் கழிவறை என்பது ஆறு பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் (600 கோடி) மதிப்பிலான சந்தையாக (Business) மாறும். இந்த தொழிலில் நமக்கு நஷ்டம் என்பதே கிடையாது. இதற்காக நாம் செலவு செய்யும் ஒவ்வொரு அமெரிக்கன் டாலருக்கும் தலா ஐந்து அமெரிக்கன் டாலர்களை லாபமாக சம்பாதிக்கலாம். அதாவது இந்திய மதிப்பில் 1 ரூபாய் முதலீட்டில் 5 ரூபாய் லாபம் கிடைக்கும்.
மலம் கழிப்பதென்று சொல்லும் போது உங்களுக்கு உடனே சிரிப்பு வரலாம் இல்லையென்றால் நீங்கள் முகத்தை சுழிக்கலாம் ஆனால் நாம் சிரிக்காமல் மற்றும் முகத்தையும் சுழிக்கமல் நாம் அனைவரும் உடனடியாக சிந்தித்து செயல்பட்டோம் என்றால் மனித மலம் இந்த பூமியை காக்க உதவலாம்.
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



0 Comments