தூக்கில் தொங்கிய பிரபல அழகி...விசாரணை வளையத்துள் காதலர்...!
மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள (Sri lanka) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், 28 வயதாகும் நடனக் கலைஞரான (Dancer) இவந்திகா குமாரி ஹேரத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்த போலிஸார், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே யுவதி, உயிரிழந்ததாக களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த இவந்திகா குமாரி ஹேரத் இலங்கையில் உள்ள குருநாகல் ஹிரிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர். ஹிரியால அஓகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் திறமையான நடனக் கலைஞராக (Dancer) சிறந்து விளங்கிய அவர், நிட்டம்புவவில் உள்ள ஓமயா நடனக் குழுவில் (Dance group) சில காலம் உறுப்பினராக இருந்தார் எனவும் போலிசார் கூறியுள்ளனர்.
கடந்த 2016 இல் இவந்திகா குமாரி ஹேரத், திருமணம் செய்து விவாகரத்து ஆன பின்னர் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்த அவர், வர்த்தகர் ஒருவருடன் காதல் வசப்பட்ட நிலையில், அந்த வர்த்தகர் ஏற்பாடு செய்த மகரகம வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவந்திகா குமாரி தூக்கில் தொங்கிய போது, வர்த்தகர் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். வர்த்தகர் நிக்கவெரட்டிய, மில்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவித்த போலிஸார், மஹரகம புகையிரத நிலைய வீதியில் மாத வாடகைக்கு 30,000 ரூபா வீடொன்றை வாடகைக்கு எடுத்து இவந்திகா குமாரி ஹேரத்துடன் குடியேறியதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நடனக் கலைஞர் இவந்திகா குமாரி ஹேரத் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவமானது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இலங்கை போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
உலகமெங்கிலும் இவ்வாறு பல பிரபலங்கள் மர்மமான முறையில் இழப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக காணப்படுகிறது உதாரணத்திற்கு நமது இந்தியாவில் சுஷாந்த் சிங் அவர்களின் இழப்பு மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வீ.ஜே சித்ரா அவர்களின் இறப்பு இது போன்று எண்ணற்ற சம்பவங்களை குறிப்பிடலாம்...

1 Comments
Kodumada chaiii....
ReplyDelete