ஜீ தமிழின் ஹிட்டான மொக்க சீரியல் செம்பருத்தி முடிவுக்கு வருகிறதா...? – வெளிவந்த தகவல் (காரணம் இதுவா ?)
.jpg)
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் எந்த தொடர்களாக இருந்தாலும் அவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று விடுகிறது. ஆகையால் ஒவ்வொரு சேனல்காரங்களும் தங்கள் சேனலின் டிஆர்பி (TRP) ரேட்டிங்காக ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஆகவே சமீப காலமாக மக்கள் அனைவரும் சின்னத்திரையை பெரிதும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதில் மீம் கிரியேட்டர்களின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் சொல்லலாம். இதனால் வெள்ளித்திரை (சினிமா) நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை (நாடகம்) நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் மொக்க சீரியல்தான் இந்த செம்பருத்தி.
ஜீ தமிழ் (ZEE TAMIL) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மொக்க போட்டு ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற ஒரு டுபாக்கூர் சீரியல்தான் இந்த செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வீட்டில் உள்ள இளைஞர்களின் களுத்தை கரகரவென ரம்பம் போல அறுத்து வருகிறது. தற்போது இருக்கும் டாப் மொக்க சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி எனும் மொக்க சீரியல் இடம் பெற்று உள்ளது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சீரியல் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். காதலைவிட சத்தமானது கொஞ்சம் அதிகமாகவே இடம் பெற்றிருக்கும். டைரக்டர் ஹரி படத்தைவிட சத்தத்தையும் மற்றும் அதிக அளவில் நாய்ஸ் பொலியூசனை உண்டாக்கும் சீரியல் லிஸ்டில் இதற்கு தான் முதலிடம்
செம்பருத்தி சீரியல் பற்றி தகவல்
அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் நமது வீட்டில் ரம்பம் போடுவதற்க்கு காரணம் என்னவென்றால், இந்த டுபாக்கூர் சீரியல் முதலில் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவலாம். மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா என்ற கேரளத்து மேக்கப் சீரியல் ராணி நடித்து வருகிறார். இவரை மேக்கப் இல்லாமல் பாத்தா சீரியல் பாக்குற பொண்ணுங்களுக்கே இதான் ஷபானாங்குறதே தெரியாது இதான் மிகவும் குறிப்பிட வேண்டியது, ஏனென்றால் நான் ஒருமுறை ஏமாந்துவிட்டேன். என்னதான் இருந்தாலும் கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி இந்த சீரியலில் வேற லெவல் என்று சொல்லலாம். அதுக்காகவே இவர்களுக்குனு தனி ரசிகர் பட்டாளமே ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.
கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலக காரணம்
பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். (அவருக்கே தெரிஞ்சிருச்சு இந்த சீரியல் மொக்க போடுதுனு...🤣) இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போகிறார் என்று அறிவித்தார். (பின்ன எத்தனநாள் இப்டியே மொக்க போடுவ போய் வேற சோலி இருந்த பாருனு அவரு மண்டைல யாரோ அடிச்சி சொல்லிருப்பாங்க போல) அவரு போட்ட ரம்பம் போய் இப்போ அறுப்பு மிஷினே வந்து அனைவரின் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறது. அவரேதோ இந்தசீரியலோட தொகுப்பாளராம். பேரு அக்னியாம் இந்த அக்னிதான் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்னதான் அறுப்பு மிஷினாக இருந்தாலும் இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. (அட அப்பாஸே கக்கூஸ் விளம்பரத்துக்கு வந்தத ஏத்துக்கிட்ட மக்கள் இந்த அக்னிய ஏத்துக்கமாட்டாங்களானு சீரியல் டீம் யோசிச்சிருப்பாங்க போல) மேலும், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் தனது தொண்ட தண்ணி வத்துரளவுக்கு கத்தி கத்தி நடித்து வருகிறார்.
செம்பருத்தி சீரியல் ஷாபனா திருமணம்
ஆரம்பத்தில் இந்த தொடர் பல திருப்பங்களுடன் (மொக்கையுடன்) விறுவிறுப்பாக சென்றது. இடையில் கொஞ்சம் டல்லாக சென்றது. பின் கடந்த ஆண்டு நடிகை ஷாபனாவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யானுக்கும் திடீர் கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஷபானா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். (ஷபானா மைண்டு வாய்ஸ்.. ..நடிச்சாதான்பா காசு)
%20(1).jpg)
செம்பருத்தி சீரியல் முடிவு
சமீப காலமாக இந்த மொக்க சீரியல் கொஞ்சம் டல்லாக போய்கிட்டு இருக்கு ஆகவே ரம்பம் போட்டது போதும்னு ரசிகர்கள் இந்த தொடரை முடித்துவிடலாம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். (கோடி கும்புடு மொத முடிச்சிவிடுங்கடா யப்பா உங்க தொல்ல தாங்களனு நெனைக்குர சீரியலை வெறுக்கும் சங்கத்தின் மைண்டு வாய்ஸ்...) கொரோனா நேரத்தில் கூட தொடர் இடைவிடாமல் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் செம்பருத்தி டுபாக்கூர் சீரியல் குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சீரியலை முடித்து விடுங்கள் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.



0 Comments