சூரியனை சுற்றிவர அங்கப்பிரதக்சணை செய்யும் கோள்

சூரியனை சுற்றிவர அங்கப்பிரதக்சணை செய்யும் கோள்


சூரியனை சுற்றிவர அங்கப்பிரதக்சணை செய்யும் கோள்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் யுரேனஸ் கோளை தவிர, அனைத்தும் சூரியனைச் சுற்றிவருகின்றன. ஆனால், யுரேனஸ் கோள் மட்டும் அங்கப் பிரதட்சணம் செய்வதுபோல் படுத்து உருண்டு கொண்டே சூரியனைச் சுற்றிவருகிறது. எல்லாக் கோள்களுக்கும் வட துருவம் மேல் நோக்கி இருக்கும். ஆனால், யுரேனஸ் படுத்தபடி சுற்றுவதால் சுமார் நாற்பது ஆண்டுக் காலம் அதன் வட துருவம் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். அப்போது தென் துருவத்தில் இரவாக இருக்கும். பிறகு தென் துருவம் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். அப்போது வட துருவத்தில் இரவாக இருக்கும். 

இத படிக்கும் போது உங்களுக்கு ஒருவிஷயம் இன்னாரம் உங்களுக்கு தோன்றியிருக்க வேண்டுமே....??? 

தோன்றவில்லை என்றாலும் பரவாயில்லை இருதிவரை படியுங்கள் கடைசியில் இதைப்பற்றி பேசுவோம்...! 

நமது பூமியிலிருந்தபடி அதுவும் ஓர் அமாவாசை இரவன்று புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களை நம்மால் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். சனி கோளுக்கும் அப்பால் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல், 242 ஆண்டுகளுக்கு முன்பு யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார். உலகிலேயே முதல் முறை ஒரு கோளைக் கண்டுபிடித்த பெருமை வில்லியம் ஹெர்ஷலுக்குக் கிடைத்தது!
ஜெர்மனியில் பிறந்து, வளர்ந்த ஹெர்ஷல், இங்கிலாந்து ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. 38 வயதில் ராணுவத்திலிருந்து விலகி, பல்வேறு வேலைகளைச் செய்தார். நூலகத்தில் வானவியல் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, வானவியல் மீது ஆர்வம் வந்துவிட்டது.

சூரியனை சுற்றிவர அங்கப்பிரதக்சணை செய்யும் கோள்

வில்லியம் ஹெர்ஷல்


வானில் ஜோடியாகக் காணப்படும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டார். நட்சத்திரக் கூட்டங்களையும் பட்டியலிட்டார். அப்போது நகரும் ஒளிப்புள்ளி ஒன்றை 1781 ஆம் ஆண்டு ஹெர்ஷல் கண்டுபிடித்தார். அது வால் நட்சத்திரமாக இருக்கும் என்று கருதினார். ஆனால், அந்த ஒளிப்புள்ளிக்கு வால் நட்சத்திரத்துக்கே உரிய தலையும் இல்லை, வாலும் இல்லை. மற்ற வான் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஒளிப் புள்ளியை விரிவாக ஆராய ஆரம்பித்தனர். அது வால் நட்சத்திரமாக இருக்க முடியாது, ஒரு கோளாக இருக்க வேண்டும் என்று கருதினர். இறுதியில் அது கோள் என்று உறுதியானது. 

ஹெர்ஷல் தான் கண்டுபிடித்த கோளுக்கு இங்கிலாந்து மன்னரின் பெயரைச் சூட்டினார். பிறகு ‘யுரேனஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. யுரேனஸ் கோள் வியாழன் கோளைப் போலவே பனிக்கட்டி உருண்டை. வியாழன் கோளைவிடச் சற்றே சிறியது. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகின்றன.

யுரேனஸ் கோள் சூரியனிலிருந்து சுமார் 300 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. இது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ளதைப் போல சுமார் 20 மடங்கு தூரம். ஆகவே தான் வெறும் கண்ணால் யுரேனஸ் கோளைப் பார்க்க முடியாது. யுரேனஸ் கோளிலிருந்து பார்த்தால் சூரியன் ஒரு பிரகாசமான நட்சத்திரமாகத் தெரியும்.

1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் செலுத்தப்பட்ட வாயேஜர்-2 என்ற ஆளில்லா விண்கலம், 1986ஆம் ஆண்டு யுரேனஸ் கோளை நெருக்கமாகக் கடந்து சென்றது. அப்போது யுரேனஸ் கோள் பற்றிப் பல தகவல்களை அளித்தது.

சனி கோளுக்கு உள்ளது போலவே யுரேனஸ் கோளுக்கும் மெல்லிய வளையங்கள் உள்ளன. பூமிக்கு ஒரு சந்திரன். ஆனால், யுரேனஸ் கோளுக்கு 27 சந்திரன்கள். யுரேனஸ் படுத்தபடி சூரியனைச் சுற்றுவதால் அதன் சந்திரன்கள் ராட்டினம் போல யுரேனஸை மேலும் கீழுமாகச் சுற்றுகின்றன.

சூரியனை சுற்றிவர அங்கப்பிரதக்சணை செய்யும் கோள்

யுரேனஸின் காற்று மண்டலம் பெரும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. மீதேன் போன்ற வேறு சில வகை வாயுக்களும் உள்ளன. டெலஸ்கோப் மூலம் பார்த்தால் யுரேனஸ் கோள் நீல நிறமாகத் தெரியும். அதற்கு அதன் காற்று மண்டலத்தில் உள்ள மீதேன் வாயுவே காரணம்.





இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE

0 Comments