எளிய முறையில் தொப்பையை குறைக்க எளிய வழி
அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் புரோம்லைய்ன் (Bromelin) என்னும் பொருள் இருக்கிறது. அது நாம் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணமடைய வைக்கிறது. அன்னாசிப் பழத்தைச் சாப்பிடுவதைவிட அன்னாசிப் பழச்சாற்றை அருந்தினால் சாப்பிடும் உணவு விரைவாக ஜீரணமாகும்.
நோயாளிகளுக்கும் உடல் பலவீனமானவர்களும் காபி, தேநீர் அருந்துவதற்குப் பதிலாக அன்னாசிப் பழச்சாற்றுடன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். அன்னாசிப் பழச்சாறு குடலிலுள்ள புழுக்களை அழிக்கிறது. பித்தநீரை வெளியேற்றுகிறது . அடிவயிற்று கோளாறுகள், வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, இரத்த சோகை போன்றவை குணமாகின்றன. இருதயம் சீராகவும் சிறப்பாகவும் இயங்குவதற்கு உதவி செய்கிறது.
அன்னாசிப்பழச் சாற்றைப் பருகி வந்தால் தொண்டைப் புண், தொண்டை சம்பந்தப்பட்ட குறைபாடுகள் குணமாகும். நல்ல குரல் வளம் கிட்டும். தொண்டைக்குள் வளரும் சதை கரையும்.

அன்னாசியிலுள்ள குளோரின் சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க உதவி செய்கிறது. அதன் காரணமாக உடலில் உள்ள நச்சுப் பொருள்களும் கழிவுப் பொருள்களும் உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. அதனால் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கிறது.
தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்னாசிப்பழச் சாற்றால் வாய் கொப்பளித்து வந்தால் நல்ல நிவாரணம் கிட்டும். உடலில் தோன்றும் மருக்கள், கால் பாதங்களில் வளரும் கால் ஆணிகள் போன்றவற்றில் அன்னாசிப்பழத் துண்டுகளை வைத்துக் கட்டினால் உடன் குணமாகும்.
பெண்கள் வயதாக வயதாக அன்னாசிப்பழத் துண்டுகளைச் சாப்பிடுவதைத் தொடர வேண்டும். இது எலும்பு மெலிவு ஏற்படும் சூழ்நிலையைத் தடுக்கிறது. தடுக்கி விழுந்தால் கூட எலும்புகள் உடையாமல் பாதுகாக்கும் அரிய பழம் இது. ஆண்களும் அன்னாசிப்பழத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மருத்துவ குணம் நிறைந்த பழ வகைகளில் அன்னாசிப் பழமும் குறிப்பிடத்தக்கதுதான். ஆஸ்துமாவைக் குணப் படுத்துவதில் இந்தப் பழம் முக்கியப் பங்காற்றுகிறது.
பொதுவாக ஆஸ்துமாவானது பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகள், ஒவ்வாத உணவுப் பொருட்கள், மலர்களின் மகரந்த சேர்க்கைகள் போன்றவற்றினாலேயே ஏற்படுகிறது.
அன்னாசி பழச்செடியின் 'புரோம் லெய்ன்' என்ற பொருள் ஆஸ்துமாவைத் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. அதாவது ஆஸ்துமாவினால் அதிகரிக்கும் வெள்ளையணுக்கள் உற்பத்தியை குறைத்துவிடும் தன்மை இந்த புரோம் லெய்ன் பொருள்களுக்கு இருக்கிறது என்று மருத்துவ வல்லுனர்களின் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

ஆஸ்துமா மட்டுமல்லாமல் நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதிலும் இந்த புரோம்லெய்ன் முக்கிய பங்காற்றுகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
ஒரு நாளைக்குத் தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் அன்னாசிப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு, மாங்கனீஸ் உப்பு, குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இந்த உப்பு.
அன்னாசி, பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், நாவிற்கு ருசியான இனிப்பு, எளிதில் ஜீரணமாக புரோம்லெய்ன் என்ற புரதம் அன்னாசியில் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இப்போது ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் சிசிஎஸ் மற்றும் சிசி இஸட் என்ற இரண்டு பொருள்கள் அன்னாசியில் தாராளமாக இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். இந்த இரண்டு பொருள்களும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்தந்த இடங்களில் தாக்கி அழிப்பதைக் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர்.
இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு ஒரு அன்னாசிப்பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும். அதற்குப்பிற்கு தினமும் அரைக்கப் அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால் போதும்.

மாத விலக்கு தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் அன்னாசிப்பழம் உடனடியாகத் தீர்க்கிறது. இரும்புச் சத்துக்கு கீரை வகைகள், கால்சியச் சத்துக்கு பால், தயிர், கேழ்வரகு, வெங்காயம் போன்றவற்றையும் நன்கு சேர்த்து வருவதுடன் தினமும் அரைப்பழம் அன்னாசி சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
பலவிதமான சத்துக்கள் நிரம்பிய இனிய சுவையுடையது அன்னாசிப் பழம்.
ஓர் அவுன்ஸ் எடையுள்ள அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ சத்து 17 மில்லி கிராம், வைட்டமின் பி 2 சத்து 34 மில்லி கிராம், வைட்டமின் சி சத்து 18 மில்லி கிராம் என்ற அளவில் அடங்கியிருக்கிறது.
மற்றும் இதில் சுண்ணாம்புச்சத்து 6 மில்லி கிராமும், இரும்புச் சத்து 0.3 மில்லி கிராமும் அடங்கியுள்ளது. உடல் வலிமையும், வனப்பும் பெறுவதற்கு அன்னாசிப் பழம் பெரிதும் உதவுகிறது. இதற்கு அன்னாசிப் பழத்தைப் பக்குவப்படுத்தி உண்ண வேண்டும்.
அன்னாசிப் பழத்தின் தோலை நன்றாக சீவி விட வேண்டும். அதன் சதைப் பகுதியில் ஓர் அவுன்ஸ் அளவு எடுத்து அதில் அரைத் தேக்கரண்டி அளவுக்குத் தேனை விட்டு, அன்றாடம் பகல் உணவுக்குப் பிறகு உண்டால் உடல் நல்ல வன்மையும் வளமையும் பெறும்.

பித்தம் தொடர்பான குறைபாடுகளுக்கு அன்னாசிப் பழத்தின் தோலை சீவி விட்டு தொடர்ந்து சாப்பிட்டால் குறைபாடு அகலும். அன்னாசிப் பழத்தை வற்றலாகச் செய்தும் பயன்படுத்தலாம்.
அன்னாசிப் பழத்தின் தோலைச் சீவியெடுத்து மெல்லிய பில்லைகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய பில்லைகளை வெய்யிலில் நன்றாகக் காயவைத்து எடுத்து கண்ணாடி ஜாடியில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
பசுவின் பாலை கொதிக்கச் செய்து இரண்டொரு பில்லைகளைப் போட்டு ஊறச்செய்து அன்றாடம் இரவில் படுக்கச் செல்லும் போது சாப்பிட்டு வந்தால் உடல் தசைகள் நன்கு வளர்ச்சியடையும். உடல் மினுமினுப்பாக ஆகும்.
அன்னாசிப் பழத்தைக் கொண்டு சர்ப்பத்தும் செய்து சாப்பிடலாம்.
அன்னாசிப் பழத்தை தோல் சீவித் துண்டுகளாக்கி ஒரு சுத்தமான பாத்திரத்திலிட்டு நைய இடித்து சாறு எடுக்க வேண்டும். எவ்வளவு சாறு எடுக்கிறோமோ அதற்கு சம அளவில் வெள்ளைச் சர்க்கரை சேர்த்து மொத்த அளவில் கால் பங்கு தண்ணீர் விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்ச வேண்டும்.

நீர்வற்றி பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து கண்ணாடிப் புட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை ஆகாரத்திற்குப் பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் ஓர் அவுன்ஸ் அளவுக்கு அன்னாசி சர்பத்தை விட்டுக் கலக்கி குடித்து வந்தால் பலவிதமான ரோகங்கள் அகலும்.
குறிப்பாக கண் தொடர்பான எல்லாப் பிணிகளும் அகலும், மற்றும் சிரசு தொடர்பான எல்லா வகை குறைபாடும் விலகும்.



1 Comments
Nice information 👏👏👏
ReplyDelete