எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா...?

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா...?

எலுமிச்சம்பழம் 

Medicinal properties of lemon

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி யும் இருக்கின்றன. வயிற்றுவலி, அஜீரணக் கோளாறுகள், ஸ்கர்வி, மலச்சிக்கல் போன்றவற்றை உடனுக்குடன் சிட்ரிக் அமிலம் குணமாக்குகிறது. 

அது உடலில் கலப்பதால் இரத்தத்திலுள்ள காரச்சத்து அதிகமாகிறது. அதன் விளைவாக உடலில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு நோய்கள் மிக விரைவாகக் குணமாகின்றன. வைட்டமின் 'சி' க்கும் பல் நோய்கள், ஸ்கர்வி, இரத்தப் பெருக்கு போன்றவற்றைக் குணப்படுத்தி நோய்க்கிருமிகளை விரைந்து அழிக்கும் சக்தி உண்டு. 

எலுமிச்சம்பழச் சாற்றுடன் தண்ணீரைக் கலந்து பருகினால் இரத்த வாந்தி நிற்கும். ஓர் எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் அரை தம்ளர் தண்ணீரையும் ஓரளவு சர்க்கரையும் சேர்த்துப் பருகினால் ஸ்கர்வி நோய் விரைவாகக் குணமாகும். 

Medicinal properties of lemon

பழுத்த எலுமிச்சம் பழத்தைச் சுட வைத்து சாறு எடுத்து அதனுடன் சரிபங்கு தேனைச் சேர்த்துப் பருகினால் தொண்டைப்புண், தொண்டைவலி போன்றவை குணமாகும். 

எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது சர்பத்தைக் கலந்து பருகினால் நன்றாகப் பசி எடுக்கும். குடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும். சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகும். எலுமிச்சம்பழத்திற்கு ஜலதோஷம், கீல்வாதம், இடுப்பு வலி, முதுகுவலி, காலரா போன்றவற்றைக் குணமாக்கும் சக்தி உண்டு. அது உடல் பருமனையும் குறைக்கும். 

பிரான்ஸ் நாட்டுக்காரர்களைப் போல் நாம் அவ்வளவாக எலுமிச்சம் பழத்தை உபயோகிப்பது இல்லை. 

காரணம், எலுமிச்சம் பழத்தின் அருமையை அவர் களைப் போல் நாம் தெரியாமல் இருப்பதே! பொதுவாக எல்லாப் பழங்களையும், எல்லா கால கட்டத்திலும் சாப்பிட முடியாது ஆனால் எலுமிச்சம் பழத்தை குளிர் மற்றும் கோடை, எந்தக் காலத்திலும் பயன்படுத்தலாம். 

Medicinal properties of lemon

ஒரு பேரிச்சம்பழத்தைவிடவும், எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்பது தவிர, மனிதனுக்கு தேவையான வைட்டமின் சி சத்தினை இந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் எளிதாகவும் பெற முடியும். 

இது தவிர காய்கறிகளுடன் எலுமிச்சம் பழத்தை சேர்க்கும் போது அந்தக் காய்கறியின் முழுமையான சத்தும் நமக்கு கிடைக்கிறது. 

இப்படி எலுமிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்யமடைகிறது. உற்சாகமாக வேலை செய்யவும் முடியும். எளிதில் நம்மை நோய்கள் தாக்காது. 

அதனால் தான் பிரான்சு நாட்டவர்கள் நம்மை விடவும் ஆள் 'ஸ்லிம்' மாக இருக்கிறார்கள். 

பிரான்சுக்காரர்கள் அப்படி என்ன செய்கிறார்கள் என்கிறீர்களா? 

நம்மை போல் தினந்தோறும் பால்+தேயிலை+சர்க்கரை கலந்த டீ அருந்துவதில்லை. மாறாக எலுமிச்சம் பழசாறு கலந்த டீயையே அருந்துகிறார்கள். தினசரி காய்கறிகளோடு கட்டாயம் எலுமிச்சம் பழமும் உண்டு. அற்புதமான சத்து நிறைந்த, நோய் அகற்றும் குணத்தை பெற்றது எலுமிச்சம்பழம். எலுமிச்சம் பழத்தில் பல வகைகள் உண்டு. எனினும் அவற்றின் குணமும் பயனும் ஒரே மாதிரியாகவே இருக்குமாதலால் எந்த வகைப் பழத்தையும் பயன்படுத்தலாம். 

Medicinal properties of lemon

ஓர் அவுன்ஸ் எடையுள்ள எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து 7 மில்லி கிராம் அளவுக்கு உள்ளது. பி -1 சத்து 6 மில்லி கிராம் அளவு இருக்கிறது. வைட்டமின் 'சி' சத்து 18 மில்லி கிராம், சுண்ணாம்புச் சத்து 25 மில்லி கிராம் அளவுக்கு அமைந்திருக்கிறது. 

மற்ற சத்துக்களும் தேவையான அளவு அமைந்தி ருக்கிறது. கல்லீரல் கோளாறு தொடர்பான எந்தக் குறை பாட்டையும் அகற்றும் சக்தி எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. குறிப்பாக மஞ்சள் காமாலை நோய்க்கு இலக்கானவர்கள், மணிக்கு ஒரு தடவை எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் இது ஒன்றே மருந்தாகப் பயன்பட்டு நோயைக் குணமாக்கும். 

மூல வியாதியைக் குணப்படுத்தும் இயல்பும் ஆற்றலும் இதற்கு உண்டு. மூல நோய்க்கு இலக்கானவர்கள் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு என்னும் உப்பைத் தூவி வாயிலிட்டு சுவைத்தால் நல்ல பயன் கிடைக்கும். 

இரத்த ஒழுக்குள்ள மூல நோய்க்கு பசுவின் பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு உடனே குடித்து விட்டால் நல்ல பயன் தெரியும். 

Medicinal properties of lemon

உணவு உண்ட பிறகு வயிறு ஊதல், பொருமல், வாயு உற்பத்தி ஆகிய குறைபாடுகள் ஏற்படின் நல்ல சூடாக இருக்கும் வெந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடன் குடித்து வந்தால் குறைபாடு அகலும். 

அஜீரணக் கோளாறு உள்ளவர்களும், அஜீரணம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உணவு கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு எலுமிச்சம் பழத்தை வெந்நீரில் பிழிந்து அதைப் பருக வேண்டும். 

உணவு உண்ட பிறகு சிறிது நேரம் கழித்தும் மேற்சொன்னவாறு எலுமிச்சம் பழ ரசத்தைச் சாப்பிடலாம். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால் நீக்கவும், எலுமிச்சம் பழம் நல்ல விதத்தில் பயன்படுகிறது. 

இதற்கு கீழ்கண்டவாறு எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்த வேண்டும். 

Medicinal properties of lemon

எலுமிச்சம் பழத் தோலை அகற்றிவிட்டு தோலின் உள் வெள்ளைப் பொறையுடன் சதையுடன் கூடிய விதைகளைக் கூட நீக்காமல் ஒரு பாட்டிலில் போட்டு தண்ணீர் விட்டு மூடி வைத்துவிட வேண்டும். 

இவ்வாறு இரவில் செய்து வைத்துவிட்டு காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் பாட்டிலை நன்றாக குலுக்கி தண்ணீரை இறுத்து அப்படியே குடித்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மலச்சிக்கல் வராது. மலச்சிக்கல் இருந்தாலும் விலகிவிடும். 

மலம் எரிச்சலோடும், இரத்தக் கோழையாகவும், சூடாகவும் இருந்தால் பெரிய எலுமிச்சம் பழம் பாதியை தண்ணீரில் பிழிந்து எனிமா கொடுக்கவும். எலுமிச்சம் பழச்சுளையை வாயில் போட்டு சுவைத்து பால் குடித்தால் இரத்த பேதியில் கோழையாக வரும் மலம் கட்டிவிடும். 

'காலரா' என்னும் தொற்று நோய் தொற்றும் நிலையிலிருந்தாலும், பரவிய நிலையிலிருந்தாலும் தடுப்பு முயற்சியாக எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தலாம். 

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தால் அதுவே நோய் தடுப்பு முயற்சியாக அமையும். 

காலரா யாருக்காவது தோன்றி விட்டால் வெங்காய ரசத்தையும், எலுமிச்சம் பழ ரசத்தையும் சம அளவு கலந்து கொடுத்தால் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு குணமாகிவிடும். 

வாந்தி ஏற்படின் அதை நிறுத்த எலுமிச்சை இலைகளைப் பயன்படுத்தலாம். எலுமிச்சை இலைகள் நல்ல மணத்தைத் தரக் கூடியவை. 

இலைகளை அம்மியில் வைத்து அரைத்து சாறு எடுத்து தண்ணீருடன் கலந்து சிறிதளவு உப்பு போட்டு பருகினால் வாந்தி உடனே நின்றுவிடும். 

Medicinal properties of lemon

இவ்வாறு குடிப்பதன் மூலம் பித்த குறைபாடுகளையும் அகற்றி விட முடியும். உடலில் ஏதாவது நோய் அறிகுறி தோன்றினால் எலுமிச்சை இலைகளைக் கஷாய பக்குவம் செய்து குடித்தால் நல்ல குணம் தெரியும். 

தேள் கடிக்கும் (கொட்டிற்கும்) எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தலாம். எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து தேள் கொட்டிய இடத்தில் வைத்து கரகரவென நன்றாக அழுந்தத் தேய்க்க தேள் விஷம் படிப்படியாக இறங்கி விடும். தொடக்க நிலையில் இருக்கும் காச நோயையும் எலுமிச்சம் பழச்சாறு கொண்டு குணப்படுத்த இயலும். 

கோழி முட்டையின் மேல் ஓட்டை சேகரம் செய்ய வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு விட்டு முட்டை ஓட்டை மை போல அரைக்க வேண்டும். அரைத்த விழுதை கழற்சிக்காய் அளவு எடுத்து இஞ்சி சாற்றில் கலக்கி காலையிலும், மாலையிலும் ஒரு வாரம் வரை சாப்பிட்டு வர காசநோய் குணமாகும். 

Medicinal properties of lemon

நகத்தின் முனையில் சிறு கட்டிபோல தொல்லை கொடுப்பதை நகச்சுற்று என்று சொல்வார்கள். அதை எலுமிச்சம் பழத்தைக் கொண்டு குணப்படுத்திக் கொள்ளவும். நல்ல பழுத்த எலுமிச்சம் பழத்தை ஒரு பக்கமாக மட்டும் குடைந்து துவாரம் செய்து நகச் சுற்று வந்த விரலை அதில் நுழைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு ஒவ்வொரு நாளும் வேறு வேறு பழங்களை விரலில் சொருகி வந்தால் நகச்சுற்றுக் கட்டி உள்ளுக்குள் அழுந்தி விடும் அல்லது விரைவில் உடைந்து குணமாகிவிடும். 

உஷ்ணம் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் ஒரு டம்ளர் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழித்து விட்டு, சமையல் சோடா அரை தேக்கரண்டி அளவு சேர்த்துக் கலக்கிக் குடித்தால் வயிற்றுவலி உடன் குணமாகும். 

உஷ்ணம் காரணமாக பெரியவர்களுக்கும், குழந்தை களுக்கும் வரட்டு இருமல் ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தைக் கொண்டு அதைக் குணப்படுத்திக் கொள்ளலாம். 

இருமல் பெரியவர்களுக்கு ஏற்பட்டு இருந்தால் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை மாலை என இருவேளை சாப்பிடக் குணம் தெரியும். இருமல் குழந்தைகளுக்கு இருந்தால் அரைத் தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றில், அரை தேக்கரண்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு இருவேளை கொடுக்க நல்ல குணம் தெரியும். 

Medicinal properties of lemon

கோடைக் காலத்தில் பொதுவாக எல்லோருக்குமே தாகவிடாயாக இருக்கும். எவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தணியாது மேலும் களைப்பாகவும் இருக்கும். 

அப்படிப்பட்ட சமயத்தில் எலுமிச்சம் பழத்தை நீரில் பிழிந்துவிட்டு, தேவையான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால் தாக விடாய் தீரும் மேலும் களைப்பும் அகலும். 

பித்தம் காரணமாக மயக்கமாக இருந்தால், பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் சோடா தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, சாப்பிட உடன் குணம் தெரியும்.






இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE

1 Comments