கடுமையான சிறுநீரக செயலிழப்பை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
நேற்றைய பதிவில் நாம் சிறுநீரக செயலிழப்பு பற்றி பல தகவல்களை அறிந்திருந்தோம். அதை இன்னும் நீங்கள் படிக்கவில்லை என்றால் அதைப் முதலில் படித்துவிட்டு பிறகு இதைப் படிக்கவும் அப்பொழுதுதான் என்னவென்று உங்களுக்கு முழுவதுமாக புரியும்.
அதை படிக்க....👇👇👇
வாருங்கள் இன்று நாம் அதன் தொடர்ச்சியை தொடருவோம்...
இந்த நோயைக் கண்டறிவது எப்படி?
நம்மில் பல பேருக்கு இந்த நோயானது தாக்கும் பொழுது எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் இருக்கும். எனவே இந்த நோயானது தாக்கியிருக்கலாம் என்று உங்களுக்கு மிகச்சிறிய அளவு சந்தேகம் வந்தாலும், உடனுக்குடன் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
இந்த நோயானது நம்மை தாக்கினால், இரத்த பரிசோதனைகளில் யூரியா மற்றும் கிரியேட்டினைன் அளவு அதிகரித்திருப்பது உங்களுக்கு தெரியவரும். இதோடு மட்டுமல்லாமல்
* சிறுநீரின் அளவு,
* சிறுநீர் பரிசோதனை
மற்றும் சில பரிந்துரைக்கப்பட்ட சோதனைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை செய்வது...?
முறையான சிகிச்சைகளை நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோயை முற்றிலுமாகவே குணப்படுத்தி விடலாம். இது பெரும்பாலான நோயாளிகளுக்கு இம்முறையானது தந்திருக்கிறது. கால தாமதமும் முறையில்லாத சிகிச்சையும் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இந்நோயை குணப்படுத்துவதற்கான முக்கியமான வழிகளில் சில
1. சிறுநீரக நோய் உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து உடனே சரிசெய்தல்
2. மருந்து, மாத்திரைகள்
3. சரிவிகித உணவுப் பழக்க வழக்கம்
4. டையாலிஸிஸ்
சிறுநீரக நோய் உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து உடனே சரிசெய்தல்
அடிப்படை காரணத்தை நாம் கண்டறிவது மிக முக்கியமான முறையாகும்.
* உயர்இரத்த அழுத்தம்,
* தொற்றுகள் ஏற்படுவது,
* சிறுநீர்ப்பாதை தடைப் படுவது,
இவற்றை நாம் முதலில் சரிசெய்வதால் நமது சிறுநீரகங்களை இயல்பான நிலைக்கு உடனடியாக கொண்டு வரமுடியும். இவ்வகை சிகிச்சைகளின் மூலம் இந்நோயானது மேலும் நம்மை தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது.
மருந்து, மாத்திரைகள்
தொற்றுக்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீவிர பக்க விளைவுகளைத் தரும் விஷத்தன்மை வாய்ந்த மருந்துப்பொருட்களை தவிர்க்க வெண்டும். உதாரணத்திற்க்கு NSAIDS போன்றவை.
முழுவதும் மாத்திரைகளை தவிர்ப்பது என்பது நம்மால் முடியாது, காரணம் என்னவென்றால் சில மாத்திரைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வகை மாத்திரைகளால் நமக்கு பல பயன்களும் கிடைக்கும், உதாரணத்திற்கு Frusemide போன்ற மருந்துகள் சிறுநீர் அளவைக் கூட்டும். உடலில் வீக்கம் ஏற்படுவதை குறைக்கும். மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்தும்.
ஆனால் தவிர்க்க வேண்டியது நம் உடலுக்கு பக்கவிளைவை கொடுக்கும் மாத்திரைகளை மட்டும்தான். உதாரணத்திற்கு சில மாத்திரைகளை நாம் சாப்பிடும் போது நோயானது சரியாகும் ஆனால் பக்கவிளைவாக நமது உடல் வீக்கம் மேலும் கை கால் முகங்களில் வீக்கங்கள் மற்றும் வயிறு எரிச்சலை உண்டாக்கும். இதுபோல மாத்திரைகளை நாம் தவிர்ப்பது நல்லது குறிப்பாக மருத்துவரின் ஆலோசனை படி தவிர்ப்பது சாலச் சிறந்தது.
இந்நோயிற்க்கு பிற ஆதரவு சிகிச்சை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
* இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் இவற்றை சரி செய்யும்,
* வாந்தி எடுப்பதை நிறுத்தும்
* இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும்
* உடல் எடையைக் குறைக்கும்
* உடலில் ஏற்படும் நடுக்கத்தையும் குறைக்கும்
சரிவிகித உணவுப் பழக்க வழக்கம்
முறையான கட்டுப்பாடு உடைய உணவுப் பழக்க வழக்கமானது இந்த நோயின் அறிகுறிகளை முற்றிலுமாக நீக்கி மேலும் நமது உடலில் சிக்கல்களை உண்டாக்காமல் இருக்க உதவுகின்றன.
அன்றாடம் எடுத்துக் கொள்ளப்படும் திரவங்களின் அளவையும் வெளிச் செல்லும் சிறுநீரின் அளவை நாம் மனத்தில் வைத்துக் கொண்டு திட்டமிட வேண்டும். எனீமா, மூச்சுத் திணறல் ஆகியவற்றை வராமலிருக்க திரவங்களை அதாவது தண்ணீரை எடுத்துக் கொள்ளுதலில் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.
பொட்டாசியம் அதிகமாக இருக்கும் பழங்களை தவிர்ப்பது சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உதாரணத்திற்கு
* பழங்கள்,
* பழச் சாறுகள்,
* உலர்ந்த பழங்கள்
போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை ஆங்கிலத்தில் hyperkalemia என்பார்கள்.
பழங்களைத்தவிர உப்பையும் குறைக்கவும். உப்பை குறைத்தால்
* தாகம்,
* எனீமா,
* உயர்இரத்த அழுத்தம்,
* மூச்சுத்திணறல
போன்ற சிக்கல்கள் எப்போதும் வராது...
மேலும் போதுமான அளவு சத்துள்ள உணவை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
டையாலிஸிஸ்
(சிறுநீரை செயற்கையாக வெளியேற்றுதல்)
கடுமையான சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு, தற்காலிகமாக சிறுநீரகமானது வேலை செய்ய இந்த சிகிச்சை மிகவும் உதவும்.
டையாலிஸிஸ் என்றால் என்ன?
சிறுநீரகமானது சரியாக இருக்கும்போது அவைகள் செய்யும் வேலையை நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்பொழுது, இயந்திரத்தின் உதவியை கொண்டு செயற்கையான முறையில் சிறுநீரை வெளியேற்றம் செய்வதுதான் டையாலிஸிஸ்.
இம்முறையின் மூலம் உடலில் தங்கியுள்ள கழிவுப்பொருட்கள் மற்றும் உபரியான திரவங்களை இது வெளியேற்றுகிறது, மேலும் அசிடோஸிஸ் மற்றும் மின் கடத்தும் திரவங்களின் ஒழுங்கற்ற நிலையை சரிசெய்கிறது.
டையாலிஸிஸ் இருவகைப்படும் :
- ஹீமோடையாலிஸிஸ்
- பெரிடோனியல் டையாலிஸிஸ்
இந்நோயாளிகளுக்கு எப்பொழுது டையாலிஸிஸ் தேவைப்படும்?
* இந்நோயானது கடுமையாக நம்மை தாக்கும்பொழுது,
* போதுமான அளவு நோயைக் குணப்படுத்தும் வழிகளை கண்டறிந்த பிறகும்,
* இவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளாளும்,
* சிக்கல்கள் அதிகரிப்பதாலும்,
* திரவங்களின் அளவு அதிகரித்தாலும்,
* கட்டுப்படுத்த முடியாத ஹைப்பர்குலேமியா,
* மிகக் கடுமையான அசிடோஸிஸ்
இது போன்ற நிலைகளில் ஒரு நோயாளி கடுமையாக பாதிக்கபட்டிருந்தால் அவருக்கு டையாலிஸிஸ் கட்டாயம் தேவைப்படும்.
டையாலிஸிஸை எத்தனை நாட்களுக்குத் தொடர வேண்டும்?
மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களைக் கொண்டவர்களுக்கு டையாலிஸிஸை தாற்காலிகமாக செயல்படுத்தல் வேண்டும். இருவகைகளில் ஏதாவது ஒன்றை செயல்படுத்தலாம்.
என்னடா திடீர்னு இருவகைனு சொல்லி குழப்புரனு நீங்கள் நினைக்க வேண்டாம். டயாலிசிஸ் ஆனது இரண்டு வகை என்று முன்பே நாம் கூறியுள்ளோம். அதுதான் வேறொன்றும் கிடையாது.
இந்த டயாலிஸிஸ் முறையை சிறுநீரகங்கள் இயல்பு நிலைமைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
மேற்சொன்ன வகையில் பாதிப்படைந்தவர்கள், சில சமயங்களில் ஒன்றுமுதல் நான்கு வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். டையாலிஸிஸை ஒரு முறை நாம் மேற்கொண்டால் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. அப்படி ஒரு எண்ணத்தை நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு மருத்துவரை சந்திப்பதை மறுத்துக் கொண்டே போனால் அது உங்கள் உயிருக்கே உலை வைக்கும்.
கடுமையான சிறுநீரக செயலிழப்பை தடுத்தல்
இந்தத் தாக்குதலை நாம் ஆரம்பத்திலேயே கண்டு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதால் இந்த நிலையை தடுக்கலாம். மேலும் மருத்துவரை அடிக்கடி சென்று பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கடுமையான சிறுநீரக செயலிழப்பை நம்மால் பூரணமாக குணமாக்க முடியும்.
உயர் ரத்த அழுத்தத்தை எப்போதும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை சரி செய்து கொள்வதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம்.
ஏதேனும் உடலில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் அதனையும் மற்றும் குறைவாக சிறுநீர் கழித்தல் போன்றவற்றை உடனுக்குடன் சரி செய்யவும்.
நெஃப்ரோடாக்சிக் என்று சொல்லக்கூடிய மருந்து வகையைச் சேர்ந்த மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லதாகும்
இன்றைய பதிவில் நாம் கடுமையான சிறுநீரக செயலிழப்பை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டிருப்போம். அதாவது இந்நோயினை எவ்வாறு கண்டறிவது இதனை எவ்வாறு தடுக்கலாம் மேலும் டயாலிசிஸ் முறைகள் இது போன்ற பல சுவாரசியமான விஷயங்களை பற்றி பார்த்தோம் மேலும் அடுத்த பதிவில் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது குறித்து பார்ப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள் நான் உங்கள் நண்பன்
SMART INFO WORLD
நன்றி
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க

1 Comments
Wow.... Good information
ReplyDelete