கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

நாம் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது சூரியன் நமக்கு எதிரில் பளீரென்று ஒளியை அடித்தாள் நமது நிழல் ஆனது நமக்கு நேராக இருக்கும். அதில் எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது, ஆனால் ஆச்சரியம் ஊட்டும் தகவல் என்னவென்றால் நமது நிழல் நமக்கு தலைகீழாக தெரிந்தால் எவ்வாறு இருக்கும்...?

கண்டிப்பாக ஆச்சரியமாக இருக்கும் அல்லவா...!

அது எப்படிடா நடக்கும்...? அடேய் என்னடா நீ பைத்தியகாரனாட்டம் பேசிகிட்டு இருக்க  அப்படின்னு நீங்க நினைக்கலாம். 

ஆனால் உண்மையாலுமே ஓரிடத்தில்  நிழல் தலைகீழாகதான் தெரியும். 

அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் அப்படிங்கிற மாதிரி அந்த கோபுரத்தின் நிழல் தலைகீழாக தெரிகிறது. இது அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் பல விஞ்ஞானிகளுக்கு  பெரிதும் புரியாத ஒரு மர்மமாக விளங்குகிறது. அதைப் பற்றி தான் நாம் இன்று இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் வாருங்கள் பார்ப்போம். 

1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பழமையான கோவில், கட்டிடக்கலைக்கும் மற்றும் பல மர்மங்களுக்கும் சான்றாக இன்றுவரை திகழ்ந்துவருகிறது. இந்த கோவிலைப் பற்றியும், நிழல் எப்படி தலைகீழாக விழுகிறதைப் பற்றியும் மேலும் அதற்கான காரணம் பற்றியும் தெரிந்து கொள்வோம்…..

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

உலகமே வியந்து பார்க்கும் கட்டிடக்கலையில் ஒன்றுதான் சிறப்புமிக்க விருபாட்சர் கோவில். இந்த புகழ்பெற்ற கோவில், கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி என்னும் மாவட்டத்தில், ஹம்பி எனும் ஓர் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுடைய கோபுரத்தின் நிழலானது எப்போதும் தரையில் தலைகீழாக விழும். இது போன்று நிழல் தலைகீழாக விழும் அதிசயம் இந்த கோவிலில் மட்டுமே நடந்துவருகிறது. மேலும் இந்த கோவில் தென்னிந்திய கட்டடக்கலையோட திறமையின் சான்றாக திகழ்கிறது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் கட்டிடக் கலையில் சிறந்தவர்களாக மற்றும் கைதேர்ந்தவர்களாக இருந்திருப்பதை இந்தக் கோவில்களின் கட்டிடக்கலையின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். இந்தக் கோவிலில் நடக்கும் மர்மமான நிகழ்வின் காரணமாகவும் மற்றும் இந்தக் கோவிலின் கட்டிடக்கலையின் காரணமாகவும் ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலகதின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டும் சிறந்தல்ல மேலும் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது.

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

ஏழாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவிலானது பெங்களூரிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் துங்கபத்திரை எனும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலானது ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்த ஓர் உலகின் பாரம்பரிய சின்னம். இந்த கோவிலின் ராஜ கோபுரமானது சுமார் 165 அடி உயரம் கொண்டது.இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் கிட்டத்தட்ட 114 தூண்கள் உள்ளன. 

விருபாட்சர் கோயிலுடைய கோபுரத்தின் நிழலானது கோயில் வளாகத்தில் அமைந்திருக்கூடிய ரங்க எனும் மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழுந்து வருகிறது. இந்த கோவிலான் நிழல் எவ்வாறு தலைகீழாக விழுகிறது என்ற மர்மத்தின் காரணம் இன்றுவரை எந்த அறிவியல் அறிஞராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது. இதுவே நமது இந்தியர்களின் சிறந்த கட்டிடக்கலைக்கு சான்றாகவும் திகழ்கிறது. இந்தக் கோவிலைப் போலவே நமது தமிழ்நாட்டில் இருக்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு ஒரு உதாரணம். இதுபோல பல கோவில்களை சொல்லிக் கொண்டே போகலாம் இதுவே நமது இந்தியர்களின் கட்டிடக்கலைக்கு மிகவும் பெருமை சேர்த்து வருகிறது. 

சரி வாங்க விருபாட்சர் கோவிலுடைய அதிசயத்த பார்ப்போம்.....!

ஒரு நிழலானது தலைகீழாக விழவேண்டுமென்றால் அதற்கு பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு பொருள் இடையில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் இக்கோயிலுடைய கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின் புரியாத உச்சமாகும். 

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

இந்த கோயிலுடைய நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள்தான் காரணம் என்று பக்தர்களும், இல்லை இது கட்டடக்கலையின் நுட்பமான அனுகுமுறை என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து கொண்டேதான் இருக்கிறார்கள். அந்நிய தேசத்து படையெடுப்புகள் பல்வேறு மூலைகளிலிருந்து சண்டையிட வந்தாலும் இந்த கோயிலை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும்.

அந்நிய தேசத்து படையெடுப்புகளால் 1565-ம் ஆண்டு இந்த நகரமே அழிந்து போனது. ஆனால் அந்நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த ஒரு பாதிப்பும்மின்றி கம்பீரமாக காட்சி அளித்துள்ளது. இதனை கண்ட அந்நியதேசத்தினர் ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் நின்றுள்ளனர் என்று பல அறிஞர்களின் சான்று கூறுகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கியமான புண்ணிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள சனீஸ்வரர் கோவிலையும் சொல்லலாம். மேலும் அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த ஒரு கோவிலில் மட்டுமே நிகழ்கிறது. 

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன என்று முன்பே கூறினோம். இதில் வானளாவிய கோபுரம்மட்டுமே சிறப்புகள் கிடையாது. ஏனென்றால் இந்த கோவிலில் உள்ள கால்வாயும் காண்போரை பிரமிக்கவைக்கிறது. 

அதாவது அந்த கால்வாயானது கோவிலின் மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதிலிருந்து துங்கபத்திரை ஆற்றிலுள்ள நீர் மடப்பள்ளியை சென்றடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. எனவே இந்த கோவிலானது கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் என அனைத்திலும் மிக சிறந்ததாக திகழ்கிறது. எனவே இந்த கோவிலின் கட்டிட கலையின் திறனானது காண்போரை நிச்சயமாக பிரமிப்பில் உறைய வைக்கும்.

இந்த கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுவதற்கு விஞ்ஞானிகள் இந்த கால்வாய்தான் காரணம் என்று கூறுகின்றனர். மேலும், கோபுரத்திற்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை ஒன்று உள்ளது. எனவே அது லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருந்தாலும் அவைகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றேதான் கூறனும். 

கோவில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்

இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளை அவர்கள் ஆராய்ச்சி செய்ததில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சாலா எனும் வம்சத்தினரால் கட்டியதாக தெரிகிறது. மேலும், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த கோவிலில் பல பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் அதில் இருக்கிறது.

என்ன நண்பர்களே இந்த கோவிலை பத்தி தெரிஞ்சுகிட்ட உடனே நம்மளும் இந்த கோவிலுக்கு போய் உடனே அதை பாக்கணும் அப்படிங்கற ஆர்வம் உங்களில் எத்தனை பேருக்கு வந்திருக்கு...? ஆர்வம் வந்து இருந்தால் மறக்காமல் கமெண்ட்ல சொல்லிட்டு போங்க. வாழ்க்கையில நம்ம இறந்து போரதுக்குள்ள நிறைய இடங்களை சுற்றிப் பார்க்கனும்னு மனசுல பல ஆசைகளை வச்சு இருப்போம். ஆனா சுத்தி பாக்குறதுக்கு பணம் வேணும்ல...! பணம் இருக்கு எனக்கு எங்க போறதுன்னு தெரியலை ஏதாவது வழி சொல்லுங்க அப்படின்னு இந்த பதிவ படிக்க வந்தவங்க இந்த கோவிலையும் போய் பாருங்க. அடுத்து இன்னும் இன்ட்ரஸ்டிங்கான பல சுவாரசியமான விஷயங்களோட உங்கள வந்து அடுத்த அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் நண்பன் 

SMART INFO WORLD




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க




SUBSCRIBE

3 Comments