சிவப்பு நிற ஹார்ட் எமோஜியை பயன்படுத்தினால் சிறை தண்டனை
டிசைன் டிசைனா சட்டம் போடுறதுல வடகொரியாவ அடிக்சிக்க வேறு எந்த நாடும் கிடையாதுனு நெனச்சா, அது தப்புனு சொல்லுராங்க சவுதி அரசாங்கம்...அட ஆமாங்க அத கொஞ்சம் நீங்களே படிச்சி பாருங்க....
சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு (Red heart-❤) நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை (Emoji) அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதியின் சைபர் கிரைம் பொதுமக்களை கண்டிப்புடன் எச்சரித்துள்ளது. தண்டனை என்பது ஒரு நாள், ரெண்டு நாள் கிடையாது சவுதி சட்டத்தின்படி, குற்றமானது நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அதுமட்டுமின்றி தலா ஒரு லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்துக்கோங்க மக்களே சிவப்பு நிற ஹார்ட் எமோஜியை அனுப்புனா சிறை தண்டனையாம்...நம்ம நாட்டிலேயே இப்படி ஒரு சட்டம் போட்டா பிப்ரவரி 14-ங்குற ஒரு நாள் நம்ம நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது... கொடுமை பண்றானுங்க சவுதியில...🤣
ஆனா ஒண்ணுங்க இந்த சட்டம் யாருக்கெல்லாம் வெறுப்பேத்துதோ இல்லையோ எனக்கு தெரியல, முரட்டு சிங்கிள்னு சொல்லிக்கிட்டு திரியக்கூடிய பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் இந்த சட்டம் மிகவும் பயனுள்ள சட்டமாக இருக்கும்...
சரி வாங்க வெட்டி நியாயம் பேசாம... சவுதியில் ஏண்டா இந்த சட்டம் போட்டாங்க அப்படிங்கறத பத்தி தெரிஞ்சுக்கலாம் ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும் நண்பர்களே, நண்பிகளே... முழுசா படிச்சு தெரிஞ்சுக்கோங்க நீங்க தெரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாமல் மத்தவங்களுக்கும் ஷேர் பண்ணி இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்... ஏன்னு கேட்டா இப்படி ஒரு காமெடியான சட்டம் நாங்களும் போடுவோம்னு சொல்லி வடகொரியாவையே தூக்கி சாப்டானுங்க சவுதிகாரனுங்க...
சவுதி அரேபியாவின் மோசடி புகார்களுக்கு (Fraud Complaint Specialist) எதிரான அமைப்பின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சவுதி நாளிதழுக்கு (News paper) விடுத்துள்ள அறிக்கையில், வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய எமோஜீயை (Red heart-❤) ஒருவரது விருப்பம் இல்லாமல் அனுப்புவது துன்புறுத்தல் (Harassment) குற்றத்திற்கு சமம் ஆகும் என்றும், ஆன்லைனில் சேட்டிங் (WhatsApp chatting) செய்யும் போது சில படங்கள் (Pictures) மற்றும் எமோஜீக்களை (Emoji) பயன்படுத்துவதால், எதிர்தரப்பினர் அதாவது நாம் அனுப்பிய தகவலை பெற்றவர் காயமடைந்ததாக போலீஸில் புகார் தொடர்ந்தால், அது துன்புறத்தல் குற்றமாக (Harassment Act) கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு நபருடனும் அவர்களின் அனுமதியின்றி (Permission) உரையாடலில் ஈடுபடுவதையோ அல்லது சங்கடமாக உணர (Embarrassing moments) வைக்கும் வகையில் உரையாடல்களில் ஈடுபடுவதையோ, சிவப்பு நிற இதய எமோஜீக்களை (Red heart-❤) பயன்படுத்துவதையோ தவிர்க்கும் படி அவர் எச்சரித்துள்ளார்.
இப்படி ஒரு சட்டம் நமது நாட்டில் அமலுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை மறக்காமல் இந்த பதிவை படித்து முடித்து விட்டு கீழே கமெண்ட்ல சொல்லுங்க...
இதுவரைக்கும் வந்து இருக்கீங்கன கண்டிப்பா நீங்க இந்த பதிவை முழுசா படிச்சிருப்பீங்கன்னு நான் நம்புறேன் உங்களோட கருத்து என்னங்கறது மறக்காம கீழே பதிவு விட்டு போங்க.....



1 Comments
Nice information...
ReplyDelete