மிகவும் மோசமான வட கொரியாவின் சட்டதிட்டங்கள்
வடகொரியாவின் சட்ட திட்டங்கள்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சர்வதேசம் ஒரு பார்வை...!!
நாம் எல்லோரும் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் அல்லவா? ஆனால் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொல்லபோரேன். அது வேர ஒன்னும் இல்ல, இந்த உலகத்துல ஒரு நாடு மட்டும் இன்றளவும் பல பல நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறது.
ஆமாங்க...!
இந்த விஷயம் உங்களுக்கு நிச்சயம் அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்த அதிசய ஆச்சரிய நிகழ்வுகள் வடகொரிய மக்களுக்கு மட்டும் தான் நிதர்சனம். நாம் சமீபத்தில் கூட வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்-ன் வினோத உத்தரவைப் பற்றி கேள்விபட்டிருப்போம். அதாவது என்னவென்றால்`தனது தாத்தாவின் அவர்களின் மறைவு தினத்தை முன்னிட்டு வடகொரியவின் மக்கள் அனைவருக்கும் சிரிக்கத் தடை' என காமெடி, சோகம் மற்றும் கோபம் கலந்த ஒரு சட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுமட்டுமில்லைங்க...!
வடகொரியாவில் இதுபோல மற்றும் பல விநோதமான, அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான பல சட்ட திட்டங்கள் அமலில் உள்ளது. ஆனால், வட கொரியாவைத் தாண்டியுள்ள வெளி உலகிற்குத் தெரிந்தது ஒரு சில பல சட்ட திட்டங்கள் மட்டும்தான். இத்தோடு மட்டுமல்லாமல் மேலும், வடகொரியாவில் வேறு எம்மாதிரியான விநோத சட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இருக்கிறதெனத் தேடினோம்.
அதில் சிக்கின சில குபீர் கபீர் சட்டங்களைப் பற்றி பார்ப்போமா... !
கிம் இல் சுங்கிம் இல் சுங்
இந்த ஆண்டு 2022 அல்ல... ஜூச் 111 தான்!
என்னடா இது பேரே தினுசா இருக்குனு பாக்குரீங்களா...? விஷயமும் அப்படிதாங்க... வாங்க மேல தொடர்ந்து பார்ப்போம்...!
நாம் எல்லாருக்கும் கிரிகோரியன் காலண்டர் படி 2022 ஆம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக (கொ)கரோனாவின் நல்லாசியுடன் காலை வைத்திருக்கிறோம். ஆனால் வடகொரியாவின் நிறுவனரான கிம் இல்-சுங் பிறந்த நாளான ஏப்ரல் 15, 1912-ல் இருந்து தான் வடகொரியாவின் நாட்கணிப்பு காலண்டர் தொடங்குகிறது. அதன்படி பார்த்தல் வடகொரியாவின் மக்களுக்கு இந்த ஆண்டு ஜூச் 111.
ஒரே வேட்பாளர் மட்டும், அவருக்கேதான் ஓட்டும்!
நாம் அனைவரும் இதுநாள் வரை என்ன நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால்...? வடகொரியாவை ஒரு சர்வாதிகார நாடு என்று. ஆனால் அதுதான் கிடையாது, ஏனென்றால் வடகொரிய ஒரு ஜனநாயக நாடு. அங்கே ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தலும் நடக்குமாம். அந்த தேர்தலன்று மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுபோய் வாக்களிப்பார்களாம். ஆனால் இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு..! மேயர் தேர்தல் என தொடங்கி உள்ளூர் சட்டசபைத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் ஒரு வேட்பாளர் மட்டுமே இருப்பார். மக்களும் கட்டாயம் அவருக்குத் தான் ஓட்டுப் போடவேண்டிய கட்டாயம். ஒருவேளை யாரவது ஒருவர் தேர்தலில் வாக்களிக்கத் தவறவிட்டால் அவருக்கு நிச்சயம் பெரியதண்டனை காத்திருக்குமாம்.
ஒரு தவறு! மூன்று தலைமுறைக்குத் தண்டனை!
நம் நாட்டில் இன்னும் பல குற்றங்கள் தீர்ப்பை எட்டவில்லை. ஆனால் வடகொரியாவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. யார் என்ன தவறு செய்தாலும் அவர் உட்பட, அவருடன் சேர்த்து மூன்று தலைமுறைக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும். அதாவது அவர், அவரது பெற்றோர், அவரது தாத்தா பாட்டி மற்றும் அவரது பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனால் பெரும்பாலும் அந்த நாட்டில் குற்றமே நடப்பதில்லையாம்.
வடகொரியா, செயற்கைக் கோள் புகைப்படம்வடகொரியா
மலம் கழிக்கவில்லையா? நிச்சயம் அபராதம்...!
அடேங்கப்பா இதென்டா சட்டம்...!
அவன் அவளுக்கு வந்தா தாண்டா போக முடியும்னு ஒரு செகண்டு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது...!
ஆனா வட கொரியா அதிபருக்கு புரியலயே...!!!
கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது, அது என்னவென்றால் தென்கொரியாவானது வடகொரியாவிற்கு உரங்கள் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. அதனால் திடீரென வடகொரியாவில் உரங்கள் கிடைப்பதில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைச் சீர்செய்ய கொரியா அதிபர் கக்கா போய்கொண்டே யோசித்த ஐடியாவை பயன் படுத்த தொடங்கினார். அது வேரொன்னும் கிடையாது, கொரியா மக்களின் மலங்கள் உரங்களாக மாற்றப்பட்டது.
இதிலும் ஒரு பிரச்சினை உண்டு என்றால்,
அது, வடகொரியாவில் இருக்கும் அனைத்து குடும்பமும் சேர்ந்து இத்தனை பவுண்டு மலமானது கட்டாயம் கொடுக்க வேண்டும் என கொரியா அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். அதற்குக் குறைவாக மலத்தை கொடுத்தால் அபராதம் விதிக்கப்படுமாம். அடேங்கப்பா முடியலடா யப்பா...!!!
நைட்டில் எதற்கு லைட்டு?
வடகொரியாவானது தற்ப்போது மிகக் கடுமையான மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதுமட்டுமல்லாமல் வடகொரியாவில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் மிக மிகப் பழமையானது. இதனால் உலகில் இருக்கும் மற்ற நாடுகளை போல் வடகொரியாவால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதனால் தினமும் இரவு நேரத்தில் வடகொரியாவில் மின்சாரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம். எனவே இரவில் கொசுகடியில் சாகவேண்டியதுதான்.
மேலும் பகலில் சில மணி நேரத்திற்கு மட்டுமே மின்சாரம் இருக்குமாம். இந்த விஷயமும் செயற்கைக்கோளானது அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தான் வெளியுலகத்திற்குத் தெரியவந்திருக்கிறது.
என்ன ஹேர்ஸ்டைல்? முடிவு செய்யும் அரசாங்கம்!
இதவிட கொடும வேரெதுவும் கிடையாதுனே சொல்லியாகனும், குறிப்பாக நம்ம நாட்டு பசங்களுக்கு சொல்லியாணும். அதாவது எல்லா மனிதர்களுக்குமே அவரவர் முடி மீது ஒரு தனி பிரியம் (LOVE) உண்டு. ஆனால் வடகொரியாவில் மக்கள் மிகவும் பாவம். அதாவது அவர்கள் தங்களது முடியை எப்படி வெட்டிக் கொள்ள வேண்டும் என்பதைக் கூட அந்த நாட்டு அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டியிருக்கு. அடேங்கப்பா என்னாங்கடா டேய்...!!!
என்ன நன்பர்களே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது தானே. வடகொரியா அரசாங்கம், மக்கள் அவர்களின் முடியை குறிப்பிட்ட வகையான ஹேர்ஸ்டைல்களை மட்டும் வைக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படுமாம். மேலும் திருமணமாகாத பெண்கள் யாராவது இருந்தால் அவர்களது முடியை நீளமாக வளர்த்துக் கொள்ளக் கூடாதாம்.
நம்ம புள்ளைங்களாம் குடுத்து வச்சவங்க...!!!
என் வழி தனி வழி!
இந்த வசனத்திற்கேர்ப்ப ஒரு வித்தியாசமான டுபாக்கூர் சட்டம்...!!!
கிம் ஜாங் உன்னிற்கு கூடைப்பந்து என்றால் மிகவும் பிடித்த விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அதனால் வடகொரியாவில் உள்ள மக்களுக்கு கூடைப்பந்து விளையாட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இதில் என்ன தவறு என்று நினைக்கிறீர்களா...?
வாங்க அதென்னானு தெரிஞ்சிக்குவோம்...
உலகமே கூடைப்பந்து விளையாட்டிற்கு ஒரு விதிமுறை வைத்திருந்தால் இந்த வடகொரியா மட்டும் அந்த விதிமுறையை மாற்றி வேரொன்று விதிமுறைகளை வைத்து விளையாடி வருகிறதாம். அந்த விதிமுறைபடி தான் வடகொரியாவில் கூடைப்பந்து போட்டி நடைபெறுமாம். அந்த போட்டிகளை அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் விரும்பி பார்ப்பாராம்.
வடகொரியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹேர்ஸ்டைல்கள்
இன்டர்நெட்டா... அப்படின்னா?
நம் நாட்டில் உள்ள குழந்தைகள் கூட இப்பொழுது யூடியூப் பார்க்காமல் சோறு கூட உண்பதில்லை. ஆனால் வடகொரியா மக்களுக்கு இணையதளம் என்றால் என்ன என்றுகூடத் தெரியாது. சில பல அரசாங்க வேலைகளை செய்பவர்களை தவிர அங்கே வேறுயாருக்கும் இணையதளம் பயன்படுத்த அனுமதி இல்லை. வெளிநாடுகளில் இருந்து வட கொரியாவிற்கு போகும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கூட அங்கே 3G சேவை மட்டும் தானாம்.
போங்கடா நீங்களும் உங்க ஓட்ட நாடும்...!!!
கடந்த சில பல வருடங்களாகவே வடகொரியானது ஒரு மெகா சீரியல் பிக்பாஸ் வீடாகவே இருந்து வருகிறது. அதாவது வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று வெளியுலகத்தினர் யாரும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அதுபோல வடகொரியா மக்களுக்கும் வெளியுலகத்தைப் பற்றி ஒன்னும் தெரியாது. மேலும், அரசாங்கம் வெளியிடும் செய்திகளை பார்த்து மட்டும் தான் அந்நாட்டு மக்கள் வெளியுலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இந்த மாதிரியான கொடூரமான சில சட்டதிட்டங்களை வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வைத்துள்ளார்.
என்ன மக்களே!!! நீங்களும் வடகொரியாவிற்கு ஒரு ட்ரிப் போயிட்டு வர்ரீங்களா!?



1 Comments
Nice information....👏👏👏
ReplyDelete